வெள்ளி, 27 ஜூன், 2014

வாழ்வு எப்படி ஆரம்பித்தது

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
 
                      வாழ்வு எப்படி ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் சுவையானவை அவற்றை அஸிமோவ் விவரிக்கிறார்.
                17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ரெடி, ஸ்பாலியான்ஸானி, பாஸ்ட்சர் ஆகிய விஞ்ஞானிகள் உயிர் வளர்ச்சி, தானே  இயற்கையாக நடந்தது என்ற கருத்தை ஆராய்ச்சி மூலம் மறுத்தார்கள் கொள்கையை அத்தகைய தானே உயிர் வளர்ச்சி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் அப்பொழுது பூமியின் சூழ்நிலை வேறு விதமாக இருந்திருக்க வேண்டும்.
                  ஊரோ, மில்லர், ஐபரின் முதலிய வேதியல் அறிஞர்கள் ஆர்வம் தூண்டும் ஆராய்ச்சிகள் செய்தார்கள், அவற்றை இளைஞர்கள் இங்கு புரிந்து கொள்ளலாம். சரியான ஆரம்ப வேதிப் பொருட்களும், சக்தி மூலமும் வைத்து உயிருள்ள ஜீவன்களில் அமைந்த எளிய வேதிப் பொருட்களை அவர்கள் உண்டாக்கிக் காட்டினார்கள். வாழ்வு எப்படித் துவங்கியது என்று அறியும் முயற்சியில் இது ஆரம்ப நிலைதான். போக போக ஆர்வத்தை மிகத் தூண்டும் சாத்தியங்கள் உள்ளதை அஸிமோவ் காண்கிறார்.


தானே உருவாதல்.
  மனிதர்களுக்கு குழந்தைகளும், நாய், பூனை, கரடி, மான் போன்ற மிருகங்களுக்கும் குட்டிகள் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு மிருகமும் அதன் தாயிடமிருந்து அந்த தாய் இன்னொரு தாயிடமிருந்து என்று இப்படி வருகிறது. நீங்கள் உங்கள் அம்மாவிடமிருந்து அவர் பாட்டியின் குழந்தை, பாட்டி கொள்ளுப் பாட்டியின் குழந்தை என்று இப்படிப் போகிறது. பறவைகள் முட்டை இடுகின்றன முட்டையில் இருந்து குஞ்சு, பின் அந்தக் குஞ்சு பறவையாகி முட்டையிடுகிறது, செடிகளும் இப்படித்தான் செடிகளை வளர்க்க முந்தைய செடியின் விதைக்குப் போக வேண்டும், அந்தச் செடிகள் அவற்றுக்கு முந்தைய செடியின் விதையிலிருந்து என்று போகிறது. இதெல்லாம் எங்கு தொடங்கின ? பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்குமோ ? இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் முதன்முதலான மனிதன், நாய், பூனை, கரடி, கோழி, டெய்ளிச் செடி என்று இப்படி இருந்திருக்குமோ ? அப்படியானால் முதல் உயிர் எப்படி வந்தது ? கொஞ்ச நாள் முன்பு வரை மக்கள் இது ஒரு பெரிய மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். அதாவது சில உயிர்களைப் பொறுத்தவரை ஒரு மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். எங்கிருந்து என்று தெரியாமல் சில உயிர்கள் வளர்ந்தன அல்லது வந்தன. நம்மைத் தொந்தரவு செய்த அல்லது நமக்குத் தேவையில்லாத சில உயிர்களைப் பற்றி இப்படித் தான் நினைத்தார்கள் உதாரணமாக முதலைகள், பாம்புகள், கொஞ்ச பேருக்குத் தான் அவற்றின் தேவை இருந்தது. நிறையப் பேர் அவற்றை கொல்ல முயன்றார்கள். ஆனாலும் அவை தென்பட்டுக் கொண்டு தான் இருந்தன. ஷேக்ஸ்பியரின் அன்டனியும், கிளியோபாத்ராவும் என்ற நாடகத்தில், லெபிடஸ் என்ற ரோமானியத் தளபதி சொல்வது இது. “உங்களுடைய எகிப்து பாம்பு, சகதியில் சூரியனால் உருவாக்கப்பட்டது முதலையும் அப்படி தான்”.
சூரியனால் சூடாக்கப்பட்ட சகதியில் முதலைகளும், பாம்புகளும் உருவானதாக சிலர் நம்பியிருக்கலாம், ஆனால் அது அப்படி அல்ல முதலைகளும், பாம்புகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இன்னும் சிறிய அளவில் இருக்கும் நிறைய ஜீவராசிகள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன ? குளிர்சாதனப் பெட்டிகள் வருமுன்பு, மாமிசம் கெட்டு, அழுகுதல் அடிக்கடி நிகழ்ந்தது மிகச் சிறிய புழுக்கள் மாமிசத்தின் மீது தோன்றும். செத்த மாமிசத்தின் மீது உயிருடன் புழுக்கள் உருவானது போலத் தோன்றும் உயிரற்ற பொருள்மீது தானே உயிருள்ள பொருள் வந்த மாதிரி புழுக்கள் இப்படி உருவாக முடியுமானல், நிச்சயமாக வேறு உயிர்களும் உருவாக முடியும் சரியான சூழ்நிலையில் ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகளும், முதலைகளும், கோழிகளும், நாய்களும், மனிதரும் உயிரற்ற பொருளிலிருந்து இப்படி உருவானார்களோ ? உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருள் உருவாவது “தானே வருவது” (spontaneous generation) எனலாம் வெளி உதவி ஏதும் இல்லாமல் நடப்பது பழைய காலத்தில் அறிஞர்கள் இத்தகைய “தானே வருதலை” அப்படியே கேள்வி கேட்காமல் எடுத்துக் கொண்டார்கள் 1668 ம் ஆண்டில் ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி என்ற இத்தாலிய மருத்துவர் இதனைச் சோதனை செய்ய வேண்டும் என்றார் கெட்டுப் போன மாமிசத்தின் மீது சிறிய உயிர்கள் முட்டைகள் இட்டிருக்கலாம் அல்லவா ? கண்ணுக்குப் புலப்படாத அளவு சிறிய முட்டைகளிலிருந்து புழுக்கள் வந்திருக்கலாம் 

                ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி, வெவ்வேறு எட்டு குடுவைகளில் புதிய மாமிசத்தை இட்டார். நான்கு குடுவைகளை உள்ளே எதுவும் புகாதபடி இறுக்க மூடினார். மற்ற நான்கு குடுவைகள் திறந்திருந்தன. பூச்சிகள் அவைகளுள் பறந்து சென்று அமர முடியும் நாட்கள் சென்றதும், திறந்திருந்த குடுவைகளின் மாமிசம் கெட்டு, நாறி, புழுக்களுடன் இருந்து ரெடி அப்போது மூடியிருந்த குடுவைகளைத் திறந்து பார்த்தார். மாமிசம் கெட்டு நாறியது ஆனால் புழுக்கள் இல்லை. நல்ல காற்று இல்லாததால் புழுக்கள் உண்டாகவில்லை ?  
                 ஃப்ரான்ஸிஸ்கோ ரெடிஇன்னொரு சோதனை செய்தார். சில குடுவைகளில் புது மாமிசத்தை இட்டு அவைகளை திறந்து வைத்து அவற்றை ஒரு வலையால் மூடினார். நல்ல காற்று உள்ளே போகலாம் ஆனால் பூச்சிகள் போக முடியாது விளைவு ? மாமிசம் கெட்டுப் போனது. ஆனால் புழுக்கள் உருவாக வில்லை. இதில் ஒரு தெளிவான முடிவு தெரிந்தது பூச்சிகள் முட்டையிட்டன. புழுக்கள் அவற்றிலிருந்து பொறிந்து வந்தன. கொஞ்ச நாளில் புழுக்கள் பூச்சிகள் ஆயின.
                 கம்பளிப் புழுக்களிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் வருவது போல தானே உருவாதல் என்ற கொள்கைக்கு எதிரான வலுவான சான்று

                 .ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி இதனைக் கண்டுபிடித்த காலத்தில் விஞ்ஞானிகள் “மைக்ரோஸ்கோப்புகளை” உபயோகிக்கத் தொடங்கியிருந்தார்கள் மைக்ரோஸ்கோப்புகள் வெறும் கண்ணுக்குப் தெரியாத நுண்ணுயிர்களைப் பெரிதுபடுத்தி புலப்படுத்திக் காட்டின. 
                   ஆன்டன் வான் லூவன் ஹீக் 1632 – 1723 என்ற டச் நாட்டு விஞ்ஞானி, 1675 ம் ஆண்டில் வெறும் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களை மைக்ரோஸ்கோப் மூலம் காட்டினார் அவைகள் “நுண்ணுயிர்கள்” என்று அழைக்கப்பட்டன அவைகள் அங்கும் இங்கும் செல்வதையும் மற்ற உயிர்களை உண்ணுவதையும் அவர் பார்த்தார். இந்த நுண்ணுயிர்கள் எங்கிருந்து வந்தன ? அவைகள் அநேகமாக ஒரு அங்குலத்தின் நூற்றில் ஒரு பங்குக்கு கீழே தான் இருந்தன அவைகள் முட்டையிட முடியுமா ?

                   ஒரு குட்டை அல்லது குளத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து இவைகளைப் பார்க்கலாம் உணவுப் பொருளைத் தண்ணீரில் கலந்த சாறை, குட்டை நீருடன் சேர்த்தால் நுண்ணுயிர்கள் அவற்றை உண்பதைக் காணலாம். அவைகள் உண்டு, வளர்ந்து பெருகுகின்றன. ஆனால் உணவுச் சாறுடன் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை, புதிதாகத் தயாரிக்கப்பட்டு வடிகட்டின
சாறாக இருந்தாலும், அதனில் நுண்ணுயிர்கள் முதலில் இல்லாவிட்டாலும், கொஞ்ச நேரத்தில் ஏராளமான நுண்ணுயிரைப் பார்க்கலாம். உயிர் தானே உருவாதலுக்கு இது ஒரு உதாரணம். உயிருள்ள நுண்ணுயிர்கள் உயிரில்லாத சாறு ஒன்றிலிருந்து உருவாயின இப்படிச் சொல்வது சரியா ? ஒரு வேளை நுண்ணுயிர்கள் காற்றில் மிதந்து கொண்டு இருந்திருக்கலாம். 
                 அவற்றுள் சில “சாறில்” விழுந்து பெருகியிருக்கலாம். இந்தக் கொள்கையை மறுபடியும் சரிபார்க்க 1748 இல், ஜான் டி நீடம் 1713 – 1781 என்ற இங்கிலீஷ் விஞ்ஞானி புதிய மாமிச சாறுடன் சோதனை தொடங்கினார் அதில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்ல ஒரு குடுவையில் அதனைக் கொதிக்க வைத்தார் குடுவை சூடாக இருந்த போதே அதை இறுக்கி மூடினார். சில நாட்கள் கழித்து குடுவையைத் திறந்து, மைக்ரோஸ்கோப்பின் மூலம் அதில் நிறைய நுண்ணுயிர்கள் இருக்கக் கண்டார். 
            குடுவை மூடி இருந்ததால், அதில் எதுவும் விழுந்திருக்க முடியாததால், “தானே உருவாதல்” என்ற கொள்கை நீருபிக்கப்பட்டது என்று அவர் நினைத்தார்.

               ஆனால் லாஸரோ ஸ்பாலன்ஸானி 1729 – 1799 என்ற இத்தாலிய விஞ்ஞானி இதனை ஒத்துக் கொள்ளவில்லை நீடம் முதலியே எல்லா நுண்ணுயிர்களையும் அழித்திருப்பாரா என்று அவர் கேட்டார். ஏனென்றால் குடுவை சில நிமிஷங்களே கொதிக்க வைக்கப்பட்டது.
              ஸ்பாலன்ஸானி மறுபடி அதே சோதனைச் செய்தார் மாமிச சாறை அரை மணிக்கு மேல் கொதிக்க வைத்தார். அப்புறம் இறுக்க மூடினார். எத்தனை நாட்கள் கழித்து திறந்து பார்த்தாலும் குடுவையில் நுண்ணுயிர்கள் உருவாகி இருக்கவில்லை. எனவே, நுண்ணுயிர்கள் காற்றில் மிதந்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும் அவற்றில் சில மாமிச சாறில் விழுந்து பெருகியிருக்க வேண்டும் என்று ஸ்பாலன்ஸானி நினைத்தார்.

                 ஸ்பாலன்ஸானி நுண்ணுயிர்களை மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்தார். ஒன்று, இரண்டாகத் தன்னை பகுத்துக் கொள்வதை அறிந்தார். இப்படித்தான் இனப்பெருக்கம் நிகழ்கிறது. 
                       நுண்ணுயிர்கள் காற்றில் எப்போதும் மிதந்து கொண்டிருக்கின்றனவா ? 
                   தியோடர் ஷிபான் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி (1810 – 1882) 1836 இல் இதனைச் சோதனை செய்தார், ஸ்பாலன்ஸானி செய்தது போல அவரும் மாமிச சாறைக் கொதிக்க வைத்தார். ஆனால் குடுவையை மூடவில்லை. அதற்கு பதிலாக, நுண்ணுயிர்களைக் கொல்லும் அளவுக்குச் சூடானக் காற்றை குடுவையில் வரச் செய்தார்.
                   மாமிச சாற்றில் நுண்ணுயிர்கள் உருவாகவில்லை. உயிர்கள் தானே உருவாவதற்கு ஏற்ற ஒரு உயிர் தத்துவம் காற்றில் பொருந்தி இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைத்தார்கள் அதிகமான சூட்டில் நுண்ணுயிர்கள் அழிந்து போவதால் உயிரற்ற மாமிச சாறில் நுண்ணுயிர்களை காணமுடியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். 
               இதனை சோதிப்பதற்கு லூயிபாஸ்டர் என்ற பிரான்சு வேதியல் அறிஞர் (1822 - 1895) 1860 ல் ஒரு புதிய சோதனைச் செய்தார். மாமிச சாறில் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கும் வரை கொதிக்க வைத்தார். சாறு நீண்ட மெல்லிய கழுத்துடைய குடுவையில் வைக்கப்பட்டது. குடுவையின் கழுத்து ‘S’ என்ற ஆங்கில எழுத்து பக்கவாட்டில் கிடப்பது போல் அமைக்கப்பட்டது. மாமிச சாறு குளிர்ந்ததும் குளிர்ந்த காற்று நீண்ட மெல்லிய கழுத்தின் வழியாக உள்ளே போய் வர முடியும். காற்றில் இருந்த உயிர்ச்சத்து அல்லது தத்துவமும் கூட காற்று மட்டும் உள்ளே வந்தது. தூசி ஏதும் இருந்தால் அது குடுவையின் கழுத்தின் கீழ் வளைவில் இருந்தது. நுண்ணுயிர்களும் தூசியோடு சேர்ந்து கீழ் வளைவில் அமரும் என்று பாஸ்ட்சர் கருதினார். அப்படித்தான் நடந்தது. மாமிச சாறில் நுண்ணுயிர்கள் இல்லை. குடுவையின் கழுத்தை உடைத்து, தூசியும் காற்றும் உள்ளே வரச் செய்தால் நுண்ணுயிர்களும் தோன்றத் தொடங்கின.

                        பாஸ்ட்சரின் இந்தப் பரிசோதனைக்குப் பிறகு “தானே உயிர் உருவாதல்” என்ற கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது மாதிரி இருந்தது.       
               ருடால்பஃ ஃவீரசௌ என்ற ஜெர்மன் விஞ்ஞானி (1821 - 1902), பாஸ்ட்சரின் சோதனை பற்றி கேள்விப்பட்டு, “எல்லா உயிரும் உயிரிலிருந்தே வருகிறது” என்றார் விஞ்ஞானிகள் எல்லாம் இதனை ஒத்துக் கொண்ட மாதிரி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக