வெள்ளி, 27 ஜூன், 2014

உயிரனங்களும்,மாலிக்யூள்களும்.

மரியாதைக்குரியவர்களே,
                                வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


                             பூமி எங்கும் இன்று உயிரினங்கள் உள்ளன. எல்லா இடத்திலும், நீரில், நிலத்தில், கடல்பரப்பில், கடல் ஆழத்தில், மலைகளில், சமவெளிகளில், பாலைவனங்களில் கூட பூமி உருவானபோது மிகச் சிறிய, லேசான ஹைட்ரஜன் மாலிக்யூல்களை வைத்துக் கொள்ள முடியவில்லை (2 ஹைட்ரஜன் அணுக்களை ஒரு மாலிக்யூலாக வைத்துக் கொள்ள முடியவில்லை) 

                        ஆதிகால கடல் நீரில் நிறைய அம்மோனியாவும் ஹைட்ரஜன் சல்பைடும் கலந்து இருந்தன. காற்றில் நிறைய மீத்தேனும், கொஞ்சம் அம்மோனியாவும், ஹைட்ரஜன் சல்பைடும், நீராவியும் இருந்தன.

                    சூரிய ஒளி வாயு மண்டலத்தில் பட்டபோது தண்ணீர் மாலிக்யூல்களை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரித்தது. ஆக்ஸிஜன், மீத்தேனுடனும், அம்மோனியாவுடனும் சேர்ந்து அவைகளை கார்பன் – டை – ஆக்ஸைடாகவும், நைட்ரஜனாகவும் மாற்றியது  தாவரங்கள் வந்த பிறகு கார்பன் – டை – ஆக்ஸைடு ஆக்ஸிஜனாக மாறியது. 

                     இந்த முறையில் பூமி மூன்று வாயு மண்டலங்களுடன் இருந்தது. நாம் இப்போது மூன்றாவது மண்டலமாகிய நைட்ரஜன் + ஆக்ஸிஜன் மண்டலத்தில் இருக்கிறோம். நைட்ரஜனும் கார்பன் – டை – ஆக்ஸைடும் ஆன இரண்டாவது மண்டலத்தில் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்கலாம். ஒரு வேளை அம்மோனியாவும் மீத்தேனும் ஹைட்ரஜன் சல்பைடும் இருந்த முதல் மண்டலத்தில் கூட உயிர்கள் தோன்றியிருக்கலாம். 

               இப்பொழுது நாம் இருக்கும் வாயுமண்டலத்தை தவிர, வேறு ஒரு மண்டலத்தில் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்கலாம் என்று ஆங்கில வேதியியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (1892 - 1964) 1929 ல் ஒரு கருத்தை வெளியிட்டார். 1936 ல் அலெக்ஸார் ஜ. ஓபரின் (1894 - 1980 ) மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் உயிர்வாழ்வு முதல் மண்டலத்திலேயே ஆரம்பித்திருக்கலாம் என்று சொன்னார். 

                              மீத்தேன், அம்மோனியா, தண்ணீர், ஹைட்ரஜன், சல்பைடு, ஆகிய எல்லாம் சிறிய மாலிக்யூல்கள். 

                 ஒவ்வொன்றிலும் மூன்று முதல் ஐந்து அணுக்கள் அமைந்தன. அவற்றுள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், சல்பர் அணுக்கள் இவைகள் எல்லா அமினோ அமிலங்களுடன் சேர்ந்து பெரிய மாலிக்யூல்கள் ஆகக் கூடியன. 

          இதில் சிக்கல் என்னவென்றால், பொதுவாக சிறிய மாலிக்யூல்கள் நிலையானவை. பெரிய மாலிக்யூல்கள் உடையக் கூடியவை. ஆகவே சிறிய மாலிக்யூல்கள், தாங்களாகவே சேர்ந்து பெரியவை ஆவதில்லை. மாறாக, பெரிய மாலிக்யூல்கள் உடைந்து சிறியவை ஆகும். பெரியவை, சிறியவை ஆவது மலையிலிருந்து கீழே உருண்டு வருவது போன்றது, 

          சிறியவை, பெரியவை ஆவது தாங்களே மலை மேல் ஏறுவது போன்றது சிறிய மாலிக்யூல்களை மலை மேல் ஏற பலவந்தப்படுத்த வேண்டும் மலை மேல் ஏறி பெரிய மாலிக்யூல் ஆகி, உயிர் வாழ்வை உருவாக்க ஒரு பெரிய சக்தியால் தான் சிறிய மாலிக்யூல்களை மலை ஏற வைக்க முடியும். 

               பூமியின் ஆதிகாலத்தில் சக்தி நிறையக் கிடைத்தது. மின்னல், எரிமலைச் சூடு, சூரிய வெளிச்சம் முதலியவற்றைச் சொல்லலாம். தற்காலத்தில், சாதராண வெளிச்சத்தை விட அதிக சக்தி உடைய, அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியின் மேற்பரப்புக்கு அதிகம் வருவதில்லை. 

             பூமியின் மேல் பதினைந்து மைல் தொலைவில் உள்ள ஓஸோன் என்ற ஒருவிதமான ஆக்ஸிஜன் அடுக்கு அல்ட்ரா வயலட் கதிர்களைத் தடுத்துவிடுகிறது. உயிர் வாழ்வு ஆரம்பித்த நாட்களில் வாயுமண்டலத்தில் ஓஸோனும் இல்லை. ஆக்ஸிஜனும் இல்லை. அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் முழுச் சக்தியுடன் பூமியின் மேற்பரப்புக்கு வந்தன. இவ்வித சக்தியினால், சிறிய மாலிக்யூல்கள் மலை மேல் ஏறுவது போல் உந்துதல் பெற்று பெரிய மாலிக்யூல்களை உருவாக்கின. உயிர் வாழ்வும் ஆரம்பம் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக