வெள்ளி, 27 ஜூன், 2014

டார்வினின் கொள்கையும் மற்றவர்களின் கொள்கையும்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                     எல்லா உயிரும் உயிரிலிருந்து தான் வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் தன் முந்தைய உயிரினத்திலிருந்து தான் வருகிறது. நாய், பூனை, தம் குட்டிகள் போடும். ஒரு பீவர், தன் பீவர் குட்டியே போடும். ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டையிலிருந்து ஆஸ்ட்ரிச் குஞ்சுகள் வரும். ஓக் மரம் அகார்ன் பழம் தரும் அதன் விதையிலிருந்து இன்னொரு ஓக் மரம் வரும். ஒவ்வொரு தாவரமும், மிருகமும், நுண்ணுயிரும் தன் போன்ற இன்னொன்றையே உருவாக்கும்.

            ஒவ்வொன்றும் ஒரு உயிரினமாகும்.

           மனித இனம் ஒன்று, 
யானைகளில் இந்திய ஆப்பிரிக்க யானை என்று இரண்டு  இனங்கள் .ஹையனக்களில் மூன்று, 
பேட்ஜர்களில் எட்டு, 
நரிகளில் ஒன்பது, 
ஈக்களில் 500, 
வேறு பூச்சிகளில் 660,000 என உயிரின வகைகள் உள்ளன.

            விஞ்ஞானிகள் ஏறத்தாழ பத்து லட்சம் வேறுவேறு உயிரினங்களைக் கண்டுபிடித்தனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத பூச்சிகளும், சிறிய உயிர்களும் இன்னும் ஒரு பத்து லட்சம் இருக்கலாம்.

               இந்தப் புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது. இருபது லட்சமோ மேலோ உள்ள உயிரினங்களில் ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது என்று அவர்கள் கண்டறிய வேண்டும். 

                  எல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பித்தனவா ? ஒரே இடத்தில் ? ஒரே வழியில் ? ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு நிலைமையில் ஆரம்பித்ததா ? வெவ்வேறு உயிரினங்கள் வித்தியாசங்கள் ஒரே மாதிரி இல்லை. ஒரே மாதிரியான சில உயிரினங்கள் ஒரு குழுவாய் அமைந்தன. அது போல வேறு குழுக்கள் அமைந்தன.

                  எடுத்துக்காட்டாக, ஓநாய்களும், நரிகளும் வேறு குழுக்களாய் இருந்தாலும், அவை எல்லாம் நாய் போன்ற மிருகங்கள் என்ற அமைப்பில் வந்தன. 
               சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், வலியச் சிறுத்தைகள் ஆகிய எல்லாம் பூனை போன்ற விலங்குகள். நாய் போன்ற விலங்குகளும், பூனை போன்ற விலங்குகளும், கரடிகளும், ஒருவகைக் கீரிகளும், கடல் நாய்களும் இன்ன பிறவும் மாமிசம் தின்னும் விலங்குகள்.

              மாமிசம் தின்னும் விலங்குகள் (உயிரினங்கள்) போல தாவரம் (செடி, கொடிகள்) உண்ணும் விலங்குகள், ஆடு, மான், முயல், எலி போன்றன உள்ளன. 

                ஆனால் இந்த இரு இனங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன உடம்பில் மயிர், வெதுவெதுப்பான இரத்தம், தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுத்தல், இவைகள் பாலூட்டிகள் எனப்படுகின்றன.

            பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலில் திரிவன ஆகிய உயிர்களில் பல வகைகள் உள்ளன. இவைகளும் பாலூட்டிகளும் முதுகெலும்பு உள்ளவை. 

             உயிரினங்களை வகை பிரிப்பதில் 18,600 வகையான தாவரங்களை ஆங்கில இயற்கை இயல் அறிஞரான ஜான் ரே (1628 – 1705 ) 1660 இல் ஆராய்ந்து தொகுத்தார். அவற்றை அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார். முதல் பிரிவின் தாவரங்களில் விதைகள் ஒரு சிறிய விதை இலையில் இருந்தது. இரண்டாவது பிரிவின் விதைகள் இரண்டு விதை இலைகளில் இருந்தன.

                    1693 ல் அவர் விலங்குகளைப் பாகுபாடு செய்தார். குளம்புகள் உள்ளன. குளம்புகள் (குதிரையின் கால் பகுதி) உள்ளவற்றில் ஒவ்வொரு காலிலும் ஒன்று, இரண்டு, மூன்று குளம்புகள் என்று இப்படி ஸ்வீடிஷ் இயற்கை இயல் விஞ்ஞானியான கரோலஸ் லின்னேயஸ் ( 1707 – 1778 ) அவர்களின் ஆராய்ச்சி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1735 இல் தாவரங்களையும், விலங்குகளையும் துல்லியமாக பகுத்து அவர் புத்தகம் வெளியிட்டார். ஒரே மாதிரியான உயிரினங்களை ஜெனரா என்றார். ஒரே மாதிரி ஜெனராக்களை குடும்பங்களாகப் பகுத்தார். குடும்பங்களை வரிசைகளாகவும், வரிசைகளை வகுப்புகளாகவும் பகுத்தார். 

                   அதன்பின்னர், ஜார்ஜ் கூவ்யாய் என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானி ( 1769 – 1832 ) வகுப்புகளை ஃபைலா என்றும், ஃபைலாவை அரசுகள் என்றும் பகுத்தார். இந்தப் பிரிவுகள் நன்றாக இருந்தன எல்லா உயிரினங்களும் ஒரு மரம் போன்ற அமைப்பில் வரிசைப் படுத்தப் பட்டன.

             மரத்தின் அடிப்பாகமே வாழ்க்கை அது நான்கு அரசுகளாகப் பிரிகிறது. விலங்குகள், தாவரங்கள் இரண்டு விதமான நுண்ணுயிர்கள் ஒவ்வொரு அரசும் பல ஃபைலாக்களாகப் பிரிந்தது. 

                 அவைகள் வகுப்புகளாக, வரிசைகளாக, குடும்பங்களாக, பின்னர் ஜெனராக்களாக கடைசியாக ஜெனராக்கள் இருபது லட்சம் கிளை உயிர்களாக. நிஜமான மரம் வளர்ந்து பிரிவது போல இந்த வாழ்க்கை / உயிர் மரமும் உள்ளது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள். 

                 பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வனவும் பிறவும் ஒரு அடிப்படையான முதல் முதுகெலும்பியிலிருந்து வந்தனவா ?
 இப்போது உள்ள எல்லாப் பாலூட்டிகளும் ஒரு முதல் பாலூட்டியிலிருந்து வந்தனவா ? 
ஒரு இனம் மற்றொரு இனமாக மெதுவே மாறியதா அல்லது அதே மாதிரியான இன்னொரு முழு இனமாக மாறியதா ? 

                 ஒரு இனம் மற்றொரு இனமாக மாறும் “கற்பனைக் கொள்கை” பரிணாம வளர்ச்சி எனப்பட்டது. மாற்றத்தை ஒருவரும் நேரில் பார்ப்பதில்லை. நமது வரலாற்றில் பூனைகள் என்றும் பூனைகளாகவே இருந்தன. நாய்களும் நாய்களாகவே இருந்தன. ஆனால் நமது வரலாறு ஐந்து ஆயிரம் ஆண்டுகள் தான் தெரியும்.

                   மாற்றங்கள் மிகமிக மெதுவாகவே நடக்கின்றது ஒரு மாற்றத்தை உணர ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். கி.பி. 1800 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த உலகம் பலப்பல லட்சம் 1 கோடி ஆண்டுகளுக்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். பரிணாம வளர்ச்சிக்கு, வேண்டிய ஏராளமான நேரம் இருந்தது.

               இந்த பூமி ஏறத்தாழ 4600,000,000 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு உயிர் இனம் ஏன் மாற வேண்டும் ? 
               எவ்வளவு மெதுவாக இருந்தாலும் அதற்கு எவ்வளவு நேரம் இருந்தாலும் ஏன் மாற வேண்டும் ?

                  ஃப்ரென்ச் இயற்கை இயல் அறிஞர் லாமார்க் ( 1744 – 1829 ) இதற்கு ஒரு விளக்கம் தந்தார். 1809 ம் ஆண்டு அவர் வெளியிட்ட புத்தகத்தில், ஒவ்வொரு தாவரமும், விலங்கும் தன் வாழ்நாளில் மாறுகிறது என்றும், அம்மாற்றத்தை இளைய தலைமுறை ஏற்றுக் கொள்கிறது என்றும், இப்படியே அந்த உயிரினம் முற்றும் மெல்ல மாறுகிறது என்றும் சொன்னார். உதாரணமாக, ஒருவகை மான் இலைகளைச் சாப்பிட்டது. இலைகளைக் கவ்வுவதற்காகக் கழுத்தை நீட்டி நீட்டி மரங்களின் உயரத்தில் இருந்தவற்றை பறித்தது. அதனால் அதனுடைய கழுத்து நிரந்தரமாக நீண்டு கொண்டே வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக. அதன் குட்டிகளும் இந்த முயற்சியைக் குணமாகப் பெற்றன, மீண்டும் முயன்றதில் அவற்றின் கழுத்து இன்னும் கொஞ்சம் நீண்டது தலைமுறை, தலைமுறையாக இப்படி நடந்து, ஆயிரக்கணக்கான வருஷங்களில் அந்த மான் இனம் ஒட்டகச்சிவிங்கியாக மாறியது.

                இது போல, வேறு சில இனங்கள் வேகமாக, பெரிதாக, சிறிதாக இப்படி மாறின. ஆனால் உயிர்கள் தாங்கள் அடைந்த மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு உடனே தருவதில்லை. திரும்பத் திரும்ப சோதனைகள் நடத்தியதில் லாமார்க்கின்க் கொள்கை தவறு என்று சொல்லபட்டது.


               அதுவரை வழக்கில் இருந்த கொள்கையிலிருந்து இன்னும் நல்ல கொள்கையை ஆங்கில இயற்கை இயல் அறிஞர் சார்லஸ் டார்வின் (1809-1882) முன்வைத்தார். 1859'ல் அவர் 'உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species') என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒரு உயிரினத்தின் வேறுவேறு உறுப்பினர்களிடையே சிறு வேறுபாடுகள் உள்ளன என்று அவர் சொன்னார். பலம், வேகம், நிறம், கண்பார்வை, முகரும்திறன் .. என்பது போன்ற விஷயங்களில்.
எளிதில் இரையைப் பிடிப்பவை, எதிரிகளுடன் சண்டையில் வெல்பவை, எதிரிகளிடமிருந்து திறமையுடன் ஒளிந்து கொள்பவை, பட்டினி பொறுப்பவை ஆகியன, நிறைய நாள் உயிருடன் இருக்கும்; நிறைய குட்டி போடும். 

                 அவைகள் தங்கள் குணங்களை அடுத்த தலைமுறைக்கு தரும்; ஏனெனில் அவை அவற்றுடன் பிறந்தவை. அக்குணங்கள் உடனடியாக ஒரே தலைமுறையில் பெற்றவை இல்லை.
                   இப்படி தலைமுறை தலைமுறையாக நடக்கும் உயிரினங்கள் மெதுவாக தம் சூழலுக்கு ஏற்ப மாறும். தினுசு தினுசாகச் சூழ்நிலைக்கேற்ப மாறுதலால் வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் வரப்பெறும் வேகமாய் ஓடுபவை, நன்கு ஒளிந்து கொள்பவை அல்லது நன்கு சண்டை போடுபவை என்று. 

                டார்வினின் கொள்கையான "இயற்கை தேர்வு" பரிணாம வளர்ச்சி' ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் பல விஞ்ஞானிகள் அதனை நிரூபிக்கும் சான்றுகள் கண்டனர். டார்வினின் காலத்திற்குப்பின் அவர் கொள்கைகள் மேலும் விரிவடைந்தன. பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பமான விஷயங்கள் இன்னும் பேசப் படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன, என்றெல்லாம் உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பரிணாம வளர்ச்சி பெற்றதை விஞ்ஞானிகள் இன்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக