வெள்ளி, 27 ஜூன், 2014

மாலிக்யூல்கள்-

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

                     1700 ம் ஆண்டின் பின்பகுதியில் விஞ்ஞானிகள் மாலிக்யூல்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
             வில்லியம் ப்ரெளட் (1785 - 1850) என்ற ஆங்கில விஞ்ஞானி 1827 ல் அவற்றை மூன்று முக்கிய வகையாகப் பிரித்தார்.

                 முதல் வகை மாவுச்சத்தும், சர்க்கரைகளும், இரண்டாம் வகை கொழுப்புகளும், எண்ணெய்களும், மூன்றாம் வகை முட்டையின் வெள்ளை போன்ற பொருட்கள், மூன்றாம் வகைப் பொருட்கள் அல்புமின்கள் (Albumins) எனப்பட்டது. 


           லத்தீன் மொழியில் அல்புமின் என்றால் முட்டை வெள்ளை. மாவுச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் இவற்றின் ‘மாலிக்யூல்கள்’, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் அணுக்களால் ஆனது. அல்புமின் மாலிக்யூல்கள் ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், என்னும் இவற்றோடு நைட்ரஜன், சல்பர், அணுக்களும் சேர்ந்தது. 

                 ஆல்பியுமின்களில் மற்ற கூட்டுப் பொருட்களில் இல்லாத வேறு கூறுகள் இருந்தன. 1838 ல் ஜரார்டஸ் ஜே மல்டர் (1802 - 1880) அவற்றை புரோட்டீன்கள் என்று அழைத்தார். 
                     லத்தீன் மொழியில் புரோட்டீன் என்றால் முதல் என்று அர்த்தம். உயிருள்ள பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் காலப் போக்கில் புரோட்டீன்களில் பல்வேறு கூறுகள் தெரிந்தன. அவற்றின் மாலிக்யூல்கள் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான அணுக்களால் ஆனது புரோட்டீன் மாலிக்யூல்களில் இருந்த அணுக்கள் பழைய மாதிரி சேர்ந்து அமையவில்லை. அவைகள் எளிய மாலிக்யூல்களால் ஆன நீளச் சங்கலிகளாக இருந்தன, அவற்றிற்கு அமினோ அமிலங்கள் என்று பெயர். 

                புரோட்டீனில் காணப்படும் அமினோ அமில மாலிக்யூல் சாதாரணமாக பத்து முதல் இருபத்தி இரண்டு அணுக்களால் ஆனது. அவை எல்லாவற்றிலும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உண்டு. சிலவற்றில் சல்பர் (sulphur) அணுக்களும் சேர்ந்திருக்கும் .

                  ஒவ்வொரு புரோட்டீன் மாலிக்யூலிலும் அநேகமாக 20 அமினோ அமிலங்கள் உண்டு. அவைகளை எந்தவிதமாகவும் வரிசைப்படுத்தி புரோட்டீன் சங்கிலி அமைக்கலாம். ஒவ்வொரு வித்தியாசமும் சிறிது வித்தியாசமான குணங்கள் உள்ள புரோட்டீன் மாலிக்யூலைத் தரும். இதனால் வேறு,வேறு அளவில்லாத புரோட்டீன் மாலிக்யூல்களை அமைக்கலாம்.


                     உதாரணமாக 1,2,3,4 என்று குறியிட்ட அமினோ அமிலங்களை எடுத்துக் கொள்வோம். இவற்றை 1-2-3-4, 1-2-4-3, 2-3-4-1, 3-4-2-1, என்று இப்படி 24 வகைகளில் அமைக்கலாம். 
                    20 அமினோ அமிலங்களை எடுத்துக் கொண்டால் அவற்றை 24 பில்லியன் – பில்லியன் (24,000,000,000,000,000,000) வகைக்கு மேல் அமைக்கலாம். 
                        20 அமினோ அமிலங்களில் டஜன் கணக்கில் புரோட்டீன் மாலிக்யூல்களை அமைத்தால், கிடைக்கும் எண்ணிக்கை பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதல் அமினோ அமிலங்களின் வரிசையில் நுண்ணிய வேறுபாடுகள் சாத்தியம். 
                    அதனால் தான் புரோட்டீன் மாலிக்யூல்கள் ஒரு டெய்ளிச் செடிக்கும், ஒரு திமிங்கலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துகின்றன. 
                    அமினோ அமிலம் ஏன் இப்படி இருக்கிறது ? 
             டெய்ளிச் செடியின் விதை ஏன் அதே புரோட்டீன்கள் உள்ள இன்னொரு டெய்ளிச் செடியை தருகிறது ? 
               திமிங்கலம் ஏன் அதே புரோட்டீன் கள் உள்ள இன்னொரு திமிங்கலத்தையே தருகிறது ? 
         போன்ற கேள்விகளுக்கு நீண்ட நாட்கள் கழித்தே விடை கிடைத்தது. 1869 ல் விடையின் ஆரம்பம் கிடைத்தது.

                 ஸ்விஸ் வேதியல் அறிஞர் ஜோஹான் F. மீஷர் (1844 - 1895) ஒரு செல்லின் நடுவில் இருக்கும் சிறுப் பொருளைக் கண்டறிந்தார். அது செல்லின் நியூகிளியஸ் (Nucleus) ஆகும். மீஷர் கண்டுபிடித்த பொருள் நீயூக்ளிக் அமிலம் (Nucleic Acid) எனப்பட்டது. நீயூக்ளிக் அமிலத்தின் மாலிக்யூல்கள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், அணுக்களோடு பாஸ்பரஸ் சேர்ந்திருந்தது. நீயூக்ளிக் அமிலங்கள், புரோட்டீன்கள் போல, சிறு மாலிக்யூல் சங்கிலிகளால் ஆனது. 

                 சிறு மாலிக்யூல்களின் தன்மை 1909 ல் ஃபீபஸ் A.T. லெவின் (Phoebus A.T. Levue 1869 - 1940) என்ற ரஷ்ய – அமெரிக்கா வேதியல் அறிஞரால் காணப்பட்டது. அந்த சிறு மாலிக்யூல்கள் நீயூக்ளியோடைட்ஸ் (Nucleotides) எனப்பட்டன. ஒன்றில் சுமார் 40 அணுக்கள் இருந்தன. எந்த நீயூக்ளிக் அமிலத்திலும் நான்கு வித்தியாசமான நீயூக்ளியோடைட்ஸ் உண்டு. ஆனால் நீயூக்ளிக் அமிலச் சங்கிலிகள் நீளமானவை. நான்கு என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு சிறு துணுக்கிலும் மொத்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமானது.

                    1944 ல் ஆஸ்வல்ட் T. அவெரி என்ற கனடிய விஞ்ஞானி (1877 - 1955) புரோட்டீன்களை விட நீயூக்ளிக் அமிலங்கள் முக்கியமானவை என்று காட்டினார். ஒரு நுண்ணுயிரை அதே மாதிரியான இன்னொரு நுண்ணுயிராக மாற்ற DNA என்ற நீயூக்ளிக் அமிலத்தை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி காட்டினார். புரோட்டீன்கள் இதைச் செய்ய முடியாது. அதுவரை விஞ்ஞானிகள் நீயூக்ளிக் அமிலத்தை அவ்வளவு கவனிக்கவில்லை.இதன் பின்னர் அவர்கள் நீயூக்ளிக் அமிலத்தை நன்றாக ஆராயத் தொடங்கினார்கள். 

                       புரோட்டீன் மாலிக்யூல்களும் அல்லது நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள் என்று வந்தால் ஏதாவது ஒரு உயிர் உருவம் அவற்றை உடனே தின்று விடும். அதனுடைய முடிவு அவ்வளவு தான். ஒரு வாழும் உயிராக ஆவதற்கு முன்பே அவை முடிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக