மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தண்ணீர் அமுதம்,தண்ணீர் உயிர்,தண்ணீர் உயிர்களுக்கெல்லாம் உயிர்,தண்ணீர் வாழ்வின் அடிப்படை,தாயினும் மேலானது தண்ணீர்.உலகெங்கும் நிறைந்திருக்கும் தண்ணீரில் 98 சதம் தண்ணீர் பயன்படுத்துவதற்கு தகுதி அற்றது.ஒரு சதம் பனிமலையாக வட/தென் துருவங்களிலும்,உயர்ந்த மலைகளிலும் உறைந்து கிடக்கிறது.அப்படி என்றால் ஒரு சதத்திற்கும் குறைவாகவே தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது.
கடல்,ஆறு,குளம், ஏரி,கால்வாய்,கிணறு,என எல்லாம் தண்ணீர் மயம்.இருந்தாலும் குடிப்பதற்கு,தாகம் தீர்ப்பதற்கு,உயிர் பிழைக்க தகுதியுடைய தண்ணீர் எது?மாசுபடாத தண்ணீர்.தூய்மையான தண்ணீர்.கலப்படம் இல்லாத தண்ணிர்.
நாகரீக உலகில் நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டதால் செயற்கையாக தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதனை சீர் செய்யமுடியும்.எல்லோருக்கும் இந்த உணர்வும் சிக்கனமாக பயன்படுத்தும் பொது சிந்தனையும் வரவேண்டும். எளிய தொழில்நுட்பங்களை மக்களுக்கு எடுத்து சொல்வோம்.
மழைநீர் சேமிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு பற்றி இங்கு காண்போம்.
இன்று நாம் அருந்தும் தண்ணீர்
பழமைக்கும் பழமை!.புதுமைக்கும் புதுமை!!
உயிர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து,பின்னிப்பிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் தண்ணீர் இருக்கும் இடம்.
தண்ணீரின் முதல் தேவை தாகம் தீர்த்தலுக்கே ஆகும்.இரண்டாவது விவசாய உற்பத்திக்கு.மூன்றாவது தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கு ஆகும்.
எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபி அல்ல! தண்ணீர் வளம்.அதனைக் கையாளும் விதத்திலேயே தண்ணீரின் தேவை நிறைவேறும்.
வான மழை தூய்மையானது.சுவை,மணம்,நிறம் இல்லாதது.அது பூமியில் வீழ்ந்து உயிர்வாழ்வை மலர வைக்கிறது.இப்படு ஒரு சுழற்சிமுறை.
இயற்கையாய்ப் பெய்வது மழை! தண்ணீரை எளிதாய் சேர்ப்பதில் என்ன பிழை?
வாணிபப் பொருள் அல்ல தண்ணீர்!,வாழ்க்கையின் ஆதாரம் தண்ணீர்!!ஆனால் இன்று தண்ணீர் வியாபாரப் பொருளாகிவிட்டது.நம்மில் எத்தனை பேர் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.
ஆண்டுக்கு பத்து செ.மீ.மழை பெய்யும் ராஜஸ்தான் மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் ஐந்து ஆண்டுகள்வரை தண்ணீரைப் பாதுகாக்கிறார்கள்.ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியில் (ஆண்டுக்கு 1100 செ.மீ.மழை பெய்கிறது) ஆண்டுக்கு ஒன்பது மாதம் தண்ணீர்த்தட்டுப்பாடு? இதற்கு காரணம் என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதோ தங்களுக்காக ஒரு கணக்கு
பத்து செ.மீ.மழை ஒரு ஹெக்டேர் பரப்புள்ள நிலத்தில் விழுமானால் பத்து இலட்சம் தண்ணீர் கிடைத்துவிடும்.ஒரு ஆண்டுக்குரிய தண்ணீர் தேவையை அதாவது 24 X 365 = 8760 மணி நேரத்திற்குரிய தண்ணீர் தேவையை வெறும் நூறு மணி நேரத்தில் இந்தியா பெற்றுவிடும்.
ஐம்பத்தெட்டு செ.மீ. மழை பெய்யும் கிராமத்தில் ஆயிரத்திஇருநூறு மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அக்கிராம மக்களின் குடிநீருக்கும்,சமையல் தேவைக்கும் உரிய தண்ணீர் தேவையான அறுபத்தாறு லட்சம் லிட்டர் பெற தண்ணீர் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீரை சேகரித்தால் போதுமானது.
நான்கு பேர் கொண்ட வீட்டில் ஆண்டு ஒன்றுக்கு 90ஆயிரம் லிட்டர் தண்ணீரை கழிவறைக்குப் பயன்படுத்துகிறோம்.
தாகம் தீர்க்க,உணவாக,உணவை உருவாக்க,தூய்மை செய்ய,குளிக்க,நீந்தி விளையாட,மிதவைக்கலனாக,தண்ணீர்ப்போக்குவரத்து செய்ய,வெப்பம் தணிக்க பசுமைக்காடுகள் உருவாக்க,ஆற்றல் தரும் மின்சக்தியாக,தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்த என ஐம்பதிற்கும் மேற்பட்ட தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுகிறது.இவ்வாறாக மனிதவாழ்வோடு தண்ணீர் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறது.
தண்ணீர் கிடைக்காத பொருளா?தண்ணீருக்குத் தட்டுப்பாடா? மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது! ஆனால் குடிக்க தகுதியான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக