''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''
ஒரு
குடம் தண்ணீர் கிடைப்பது இப்போது தங்கம் கிடைப்பதுமாதிரி. நகராட்சி,
மாநகராட்சிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை
தண்ணீர்வரும். அதுவே கோடை காலம் என்றால், மழை இல்லாவிட்டால், பத்துப்
பதினைஞ்சு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர்வரும். ஏரியா கவுன்சிலர்கள்
அறிவிப்புப் பலகையில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் தண்ணீர்வரும் என்று
எழுதிப்போட்டாலும், தண்ணீர் வருகிற நேரம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
காத்திருந்து, கண் விழித்துப் பரீட்சைக்குப் படிப்பதுபோல, காத்திருந்து
தண்ணீர் பிடிக்கிறார்கள் ஏரியாவாசிகள். அத்தனை பேரின் புலம்பல்களுக்கு
முற்றுப்புள்ளிவைக்கும் விதமாகத் தண்ணீர் வருவதை அறிவிக்கும் அலாரம்
ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினீயர் முருகன்.
''காலையில 10 மணிக்குத் தண்ணீர் வருதுன்னா, சிலர் 10 நிமிஷத்துக்கு ஒரு
தடவை குழாயில் அடிச்சுப்பார்ப்பாங்க. தண்ணீர் வராது. காத்திருப்பாங்க.
அடுத்த வேலையில கவனம்செலுத்த முடியாது. இதை எப்படி சரி
பண்றதுன்னு யோசிச்சேன்.


டெலிபோன் லைன், ரோடு போடுறது, பாதாளச் சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டுறது
போன்றவைகளுக்குக் குழி தோண்டும்போது பைப் லைனில் உடைபட்டு கழிவு நீர்,
குடிநீருடன் கலந்துவரும். அதேமாதிரி மழைக் காலத்தில் தண்ணீர் சற்று
கலங்கலாக இருக்கும். எனவே, தண்ணீரின் தெளிவைக் கண்டுபிடிக்க அலாரம்
அடிக்கும் கருவியில் சின்ன மாற்றம் செஞ்சேன். பி.யூ.சி. இணைப்பு பைப்பில்
கண்ணாடிக்குழாய் பொருத்தியிருக்கேன். இந்தக் கண்ணாடிக் குழாயின் நுனியில்
சின்ன துவாரம் இருக்கும். காற்றைத் தள்ளிக்கிட்டுத் தண்ணீர்,
கண்ணாடிக்குழாயினுள் சென்று துவாரத்தின் வழியாக வெளிவரும்போது தண்ணீரின்
தெளிவை நம் கண்ணாலேயே பார்க்கமுடியும். தவிர, தெளிவு இல்லாத கலங்கலான
தண்ணீர்வந்தா, அதை நமக்குத் தெரிவிக்கிற விதமாக டேஞ்சர் அலாரம்
அடிக்கிறமாதிரி அமைச்சிருக்கேன். அதேபோல தண்ணீர்வரும் நேரத்துக்கு
முன்னதாக அலாரம் அடிக்கிறதோட, மொபைலுக்கு 'வாட்டர் கம்மிங்’னு எஸ்.எம்.எஸ்.
வரும் வசதியையும் உருவாக்கி இருக்கேன். இதனால், வீட்டில் இருப்பவர்கள்
வெளியிலோ அல்லது வேலைக்கோ போயிருந்தால் தகவல் தெரிஞ்சுக்க முடியும்!''
என்றார்.
வீட்டு பைப் லைனில் தண்ணீர் இல்லாதபோது, வெற்றிடத்தைக் காற்று அடைச்சிருக்கும். தண்ணீர் வரும்போது
வேகமாகக் காற்றை மோதித்தள்ளிவிட்டு தண்ணீர் வரும். அப்போ காற்றுக்கும்
தண்ணீருக்கும் இடையே ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் நம்ம வீட்டு
பைப் லைனுக்குள் வரும்போது, அதிர்வு கொடுக்கும். அப்போ எலெக்ட்ரானிக்
சர்க்கியூட்டின் உதவியால் அலாரம் அடிக்க வைக்கலாம்னு கண்டுபிடிச்சேன்.
அலாரச்சத்தம் கேட்டு நாம் இந்த இயந்திரத்தின் சுவிட்சை அணைக்கிறவரைக்கும்
அலாரம் அடிச்சுகிட்டே இருக்கும். இதனால், அசந்து தூங்குறவங்களும்
அலாரச்சத்தம் கேட்டு கண் விழிக்கலாம்.
இதுதவிர, வாழைத் தண்டிலிருந்து நூல் எடுத்துக் கைக்குட்டை, துண்டு
போன்றவற்றைத் தயாரித்திருப்பவர், அடுத்ததாக வேஷ்டி, சேலை தயாரிக்கும்
முயற்சியில் இறங்கி இருக்கிறார்!
- இ.கார்த்திகேயன்
விகடன்.காம் பதிவுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக