வெள்ளி, 27 ஜூன், 2014

பரிணாம வளர்ச்சி

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  

                  பரிணாம வளர்ச்சி தொடங்கும் நிலை  மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்வாழ்க்கை இல்லை. புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் ஆதி காலச் சமுத்திரங்களில் உருவாயின. தங்களைச் சுற்றி இருந்த வேதியியல் பொருட்களை உண்டு, பெருகின. அவைகள் பலத்தில் தம்முள் வேறுபட்டன. இயற்கைப் பொருட்களில் சில நன்கு வளர்ந்தன, சில அழிந்து பட்டன. . பின்னர் நீண்ட பரிணாம வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம்மும் உயிரினங்களும் வந்துள்ளன. 
                           புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும், எப்படிச் செயல்படத் துவங்கின ? 
                  அவைகள் எளிய, உயிரற்ற மாலிக்யூல்களிலிருந்து தாமே உருவாகத் தொடங்கினால் அவைகள் தோன்றிய உடனேயே வாயு மண்டல ஆக்ஸிஜன் அவைகளை அழித்து விட்டிருக்கும். ஆனால் வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜன் எப்போதும் இல்லை. தாவரங்கள் வாயுமண்டல கார்பன் – டை – ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜன் வெளியிட்டன.


                  இப்பொழுது தாவரங்களின் செயல்பாடுகளில் பூமியின் வாயுமண்டலம் 4/5 பங்கு நைட்ரஜனும், 1/5 பங்கு ஆக்ஸிஜனுமாய் உள்ளது. கார்பன் – டை – ஆக்ஸைடு 1/3000 பங்கே உள்ளது. (ஒரு கார்பன் – டை – ஆக்ஸைடு மாலிக்யூலில் ஒரு கார்பன் அணுவும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன) 

                     பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தாவரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜனும் இல்லை. கார்பன் – டை – ஆக்ஸைடே இருந்தது. அப்பொழுது பூமியின் வாயுமண்டலம், நைட்ரஜனும், கார்பன் – டை – ஆக்ஸைடும், கலந்திருந்தது. 
                          மார்ஸ், வீனஸ், ஆகிய கிரகங்களின் வாயுமண்டலம் இன்னும் நைட்ரஜன், கார்பன் – டை – ஆக்ஸைடு கலந்த கலவையாய் இருக்கிறது. அவ்விடங்களில் உயிர்வாழ்வு இல்லை. பூமியின் ஆதி வாயுமண்டலம் அப்படி இருந்திருக்காது. சூரியனும், ஜீபிடர், சனி, போன்ற பெரிய கிரகங்களும் அநேகமாக வாயுமண்டல ஹைட்ரஜன் நிரம்பி உள்ளன. 
                 தூசியும், வாயுவும் மேகக் கூட்டமாய் சூரியப் பிரபஞ்சத்தை உண்டாக்கின அவைகள் ஹைட்ரஜனும், ஹைட்ரஜன் அணுக்களும் வேறு சில அணுக்களும் சேர்ந்தன. சாதாரணமாக, மீத்தேன் (4 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு கார்பன் அணு), அம்மோனியா (3 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு நைட்ரஜன் அணு), தண்ணீர் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு ஆக்ஸிஜன் அணு) ஹைட்ரஜன் சல்பைட் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு சல்பர் அணு) ஆகியவை அமைந்தன.

                  1953 ல் பிரான்சிஸ் H.C. க்ரிக் (1916 --) என்ற ஆங்கில விஞ்ஞானியும், ஜேம்ஸ் டி. வாட்ஸன் (1928 - ) என்ற அமெரிக்க விஞ்ஞானியும் சேர்ந்து ஆராய்ந்து, ஒரு நீயூக்ளிக் அமிலத்தின் அமைப்பைக் காட்டினார். ஒரு நீயூக்ளிக் அமில மாலிக்யூல் எப்படித் தன்னைப் போலப் பிறிதொன்றை உருவாக்க முடியும் என்று காண்பித்தார்கள். 

              நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள், புரோட்டீன் மாலிக்யூல்களின் அமைப்பை நிர்ணயிக்கின்றன. புரோட்டீன் மாலிக்யூல்கள் உயிர்ப் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றன. இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், 
                    நீயூக்ளிக் அமிலங்கள் ஒரு வாழும் உயிரில் தம்மைப் போலச் சரியாக பிற உயிர்களை உருவாக்குகின்றன. சில நீயூக்ளிக் அமிலங்கள் இளைய உயிர்களுக்குக் கொடுக்கப் படுகின்றன. இளைய உயிர்களில் உள்ள நீயூக்ளிக் அமிலங்கள் பெற்றோரில் உள்ளது போன்ற புரோட்டீன்களை உருவாக்குகின்றன. இதனால் குட்டிகள் பெற்றோரைப் போலுள்ளன. 
                            நாய் போன்ற குட்டிகள், பூனை போன்ற குட்டிகள் சில நேரங்களில் நீயூக்ளிக் அமிலங்கள் தங்களைச் சரியாக பிரதி எடுப்பதில்லை. ஒன்று தவறிய நீயூக்ளோடைட் (Nucleotide) இங்கும் அங்கும் வந்து விடலாம். அப்போது சில மாற்றங்கள் ஏற்படலாம். ‘உயிரின மாறுதல்’ (Mutation) மாற்றம் மிகச் சிறியதாய் இருக்கலாம். ஒரு நாய்க்குட்டி அந்த மாற்றத்தோடு தன்னுடைய நாய்க் கூட்டத்தில் இருக்கலாம் இதுபோன்ற நுண்ணிய மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கின்றன. 

                     அதனால் தான் பல லட்சக்கணக்கான மனிதர்களில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனித்துவமான முகம், குரல், தோற்றம் அமைந்து அவர்களை நாம் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த மாறுதல்கள் (Mutations) இயற்கையின் செயல்களுக்கு  உந்துதல் தந்து, பரிணாம வளர்ச்சி நடைபெற வழி செய்கின்றன.
               விஞ்ஞானிகள் கண்டறிந்தவரை, அவர்கள் ஆராய்ந்த ஒவ்வொரு உயிரினமும், சிறியதிலிருந்து பெரியது வரை புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் உடையவை. அதனால்தான் , மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த முதன்முதல் உயிரினங்கள் புரோட்டீன்களாலும், நீயூக்ளிக் அமிலங்களாலும் ஆனவை என்கிறோம்.

                   உலகில் உயிர்வாழ்வு எப்படித் தொடங்கியது என்று கேள்வி எழுப்பினால், முதன் முதலில் புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் எப்படி உண்டாயின, அவை எப்படி முதல் உயிரை உண்டாக்கின என்று கேட்பதற்குச் சமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக