ஞாயிறு, 29 ஜூன், 2014

மழை மானி



              மழைநீர் சேகரிக்க எளிமையானது முதல் சிக்கலானது வரை பல வகையான அமைப்புகளை உருவாக்கலாம். தரைவழியாகவோ கட்டடங்களின் மேற்கூரைகள வழியாகவோ மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அமைப்பின் திட்ட அளவு, செயல்திறன், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றைப் பொருத்து மழைநீர் சேகரிப்பு வீதம் அமையும்.
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

1 தரைவழி மழைநீர் வடிகால் அமைப்பு 
2 மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு
 3 மரபு வழி மழைநீர் சேமிப்பு
 4 நிலத்தடி நீர்மட்டம் உயர 
5 நகர்ப்புறப் பகுதிகளில் பயன்பாடு
 6 கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் 
7 சேகரிக்கும் முறைகள் 
8 உறிஞ்சு குழிகள் (Percolation Pits) 
9 உலகத்தின் மற்றப் பகுதிகளில்

முன்னுரை: 
மழைமானி என்பது வானியல் மற்றும் நீரியல்  ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கருவி. அந்தக் கருவி மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  சேகரிக்கப்பட்ட நீரை அளந்து, பெய்த மழையை அவர்கள் கணிப்பார்கள். இது பனிப் பொழிவை அளந்து  கணிப்பதிலிருந்து மாறுபட்டது. பனிப் பொழிவின் அளவைக் கணிக்க பனிமானியைப் பயன்படுத்துவார்கள். மழை அல்லது பனி நீரை வைத்து பருவ நிலையை அளக்க முடியும் என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கம்
Objective: 

குறிக்கோள்:
  • ஒரு மழைமானியை உருவாக்க மாணவர்களுக்கு உதவுதல்.
  • மழைமானியினால் மழையை அளக்க மாணவர்களுக்கு உதவுதல்.
Activity Steps: 

இடம்
வீடு-பள்ளி
குழுவின் அளவு
தனி நபர் - குழு
கால அளவு
பருவ மழைக் காலத்தில் 24 மணி நேரத்திற்கு ஒரு தரம் அளவு எடுத்தல்
தகுந்த நேரம்
மழை காலம்.

தேவைப்படும் பொருட்கள்
பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில், புனல் - புனலின் விட்டம் பாட்டிலின் அடிப்பாக விட்ட அளவுக்குச் சம்மாக இருக்க வேண்டும்- உருளை வடிவத்தில் உள்ள ஜாடி, அளவு உருளை, நோட்டுப் புத்தகம், பென்சில் 

வழிமுறைகள்


  • மழைமானியை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு ஒரு புனலும், ஒரு கண்ணாடி பாட்டிலும் தேவைப்படும்.
  • பாட்டிலின் அடிப்பாக விட்டமும், புனலின் வாய் அகலமும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும்.
  • ஒரு சிறிய மழைமானியை உருவாக்க, புனலை படத்தில் காட்டியபடி பாட்டிலின் மேலே பொருத்தி வைக்க வேண்டும்.
  • ரசாயன சோதனை கூடத்தில் இருக்கும் உருளை வடிவமான ஜாடியையும் மாணவர்கள் பயன்படுத்தலாம்.
  • 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் பெய்த மழையை மாணவர்கள் மழைமானியின் மூலமாக அளந்து அறியலாம்.
  • மழைமானி நிறுவப்பட்ட இடம் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் சூழ்ந்து இல்லாமல் வெட்ட வெளியானதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டுவது மிக அவசியமாகும்.
  • மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த இடத்தில் அவர்களின் மழைமானியை வைக்கலாம்.
  • மழை பொழியும் போது மழைமானி அசையாமலும், காற்றினால் அசைந்து கீழே விழாமலும் இருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு சில செ.மீட்டர் அளவு சிறிய பள்ளம் தோண்டி அதில் மழைமானிப் பாட்டிலை அழுந்தி வைப்பது ஒரு நல்ல யோசனையாகும்.
  • 24 மணி நேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி அனுமதிக்கவும்.
  • பாட்டிலில் நிரம்பிய மழை நீரைச் சிந்தாமல் கவனமாக ஒவ்வொரு நாளும் மாணவர்கள் சேர்க்க வேண்டும்.
  • ஒரு அளவு உருளையினால் மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்க வேண்டும்.
  • இந்த முறையைக் கடைப்பிடித்து, ஒரு மாத காலம் பெய்த மழை நீரை குறித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுகளை ஒரு வரை படமாகக் காட்டவும்.
  • பட்டியலிடப்பட்ட அளவுகளிலிருந்து சராசரி மாத மழை நீரைக் கணக்கிடலாம்.
ஆதாரம் - என்னுடை ஊரின் ஆற்றைப் பற்றிய விவரங்கள் என்ற ஃபீசல் ஆல்காஸி (Feisal Alkazi) - பிரீதி ஜெயின் (Preeti Jain) ஆகியவர்கள் எழுதிய கட்டுரை இளம் குழந்தைகளுகான தகவல் மற்றும் பயிற்சி என்ற புத்தகத்திலிருந்து வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் சுற்றுச் சூழல் கல்வி மையம், ஆமதாபாத் பிரசுரம். 

''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''



''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''

ரு குடம் தண்ணீர் கிடைப்பது இப்போது தங்கம் கிடைப்பதுமாதிரி. நகராட்சி, மாநகராட்சிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்வரும். அதுவே கோடை காலம் என்றால், மழை இல்லாவிட்டால், பத்துப் பதினைஞ்சு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர்வரும். ஏரியா கவுன்சிலர்கள் அறிவிப்புப் பலகையில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் தண்ணீர்வரும் என்று எழுதிப்போட்டாலும், தண்ணீர் வருகிற நேரம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். காத்திருந்து, கண் விழித்துப் பரீட்சைக்குப் படிப்பதுபோல, காத்திருந்து தண்ணீர் பிடிக்கிறார்கள் ஏரியாவாசிகள். அத்தனை பேரின் புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாகத் தண்ணீர் வருவதை அறிவிக்கும் அலாரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினீயர் முருகன்.
''காலையில 10 மணிக்குத் தண்ணீர் வருதுன்னா, சிலர் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை குழாயில் அடிச்சுப்பார்ப்பாங்க. தண்ணீர் வராது. காத்திருப்பாங்க. அடுத்த வேலையில கவனம்செலுத்த முடியாது. இதை எப்படி சரி பண்றதுன்னு  யோசிச்சேன்.
டெலிபோன் லைன், ரோடு போடுறது, பாதாளச் சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டுறது போன்றவைகளுக்குக் குழி தோண்டும்போது பைப் லைனில் உடைபட்டு கழிவு நீர், குடிநீருடன் கலந்துவரும். அதேமாதிரி மழைக் காலத்தில் தண்ணீர் சற்று கலங்கலாக இருக்கும். எனவே, தண்ணீரின் தெளிவைக் கண்டுபிடிக்க அலாரம் அடிக்கும் கருவியில் சின்ன மாற்றம் செஞ்சேன். பி.யூ.சி. இணைப்பு பைப்பில் கண்ணாடிக்குழாய் பொருத்தியிருக்கேன். இந்தக் கண்ணாடிக் குழாயின் நுனியில் சின்ன துவாரம் இருக்கும். காற்றைத் தள்ளிக்கிட்டுத் தண்ணீர், கண்ணாடிக்குழாயினுள் சென்று துவாரத்தின் வழியாக வெளிவரும்போது தண்ணீரின் தெளிவை நம் கண்ணாலேயே பார்க்கமுடியும். தவிர, தெளிவு இல்லாத கலங்கலான தண்ணீர்வந்தா, அதை நமக்குத் தெரிவிக்கிற விதமாக டேஞ்சர் அலாரம் அடிக்கிறமாதிரி அமைச்சிருக்கேன்.  அதேபோல தண்ணீர்வரும் நேரத்துக்கு முன்னதாக அலாரம் அடிக்கிறதோட, மொபைலுக்கு 'வாட்டர் கம்மிங்’னு எஸ்.எம்.எஸ். வரும் வசதியையும் உருவாக்கி இருக்கேன். இதனால், வீட்டில் இருப்பவர்கள் வெளியிலோ அல்லது வேலைக்கோ போயிருந்தால் தகவல் தெரிஞ்சுக்க முடியும்!'' என்றார்.


வீட்டு பைப் லைனில் தண்ணீர் இல்லாதபோது, வெற்றிடத்தைக் காற்று அடைச்சிருக்கும். தண்ணீர் வரும்போது வேகமாகக் காற்றை மோதித்தள்ளிவிட்டு தண்ணீர் வரும். அப்போ காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் நம்ம வீட்டு பைப் லைனுக்குள் வரும்போது, அதிர்வு கொடுக்கும். அப்போ எலெக்ட்ரானிக் சர்க்கியூட்டின் உதவியால் அலாரம் அடிக்க வைக்கலாம்னு கண்டுபிடிச்சேன். அலாரச்சத்தம் கேட்டு நாம் இந்த இயந்திரத்தின் சுவிட்சை அணைக்கிறவரைக்கும் அலாரம் அடிச்சுகிட்டே இருக்கும். இதனால், அசந்து தூங்குறவங்களும் அலாரச்சத்தம் கேட்டு கண் விழிக்கலாம்.























இதுதவிர, வாழைத் தண்டிலிருந்து நூல் எடுத்துக் கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தயாரித்திருப்பவர், அடுத்ததாக  வேஷ்டி, சேலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்!
- இ.கார்த்திகேயன்
 விகடன்.காம் பதிவுக்கு நன்றி.



Friday, September 25, 2009

1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனை

செப்டம்பர் 24,2009,தர்மபுரி : தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன் கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக் கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை மேற்கொண்டார்.
tblHumanTrust_12253534794ஆடுகளுக்கு போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில் துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர் தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர் தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.
இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.



water-conservation-2.jpg

தண்ணீர் தண்ணீர் .... !
Ten Innovative Ways to Save Water !
 
 
 
தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் :
 
நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் :
 
1)  தானியங்கி தண்ணீர் குழாய்கள் :
புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி வரை தண்ணீர் செலவழிகிறது. இதுவே தானியங்கி குழாய்களில் 60 முதல் 80 மில்லி வரை தான் பயன்படுத்தப் படுகின்றது. தானியங்கி குழாய் என்பது தண்ணீரை அளவோடு வெளிப்படுத்தி கை கழுவ போதுமான அளவு வேகத்தோடு வழியச் செய்யும் ஒரு எளிய கருவியாகும் .
 
 
 
2) சீதோஷணம் குளுமையாக இருக்கையில் நீர் ஊற்றுங்கள் :
வானிலை குளுமையாக காணப்படும் அதிகாலையிலோ அந்தி மாலையிலோ உங்கள் தோட்டம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுங்கள். இவ்வாறு செய்வதால் ஊற்றிய நீர் சீக்கிரம் நீராவி ஆகாமல் தடுக்கலாம்
 
 
 
3)  இருவித ஃப்ளஷ்களை கழிவறையில் பயன்படுத்தவும் :
இரண்டு வெவ்வேறு அளவுகளில் நீரை வெளியேற்றும் விதமாக அமைந்த ஃப்ளஷ்களையே கழிவறையில் பயன்படுத்தவும். இக்கருவி சற்றே விலை கூடியதாக இருந்தாலும் பயன்படுத்துவோருக்கு தேர்வு செய்யும் வசதியும் அளித்து நீர் சிக்கனமும் அளிக்கிறது.
 
 
 
4)  பிரத்தியேகமான தண்ணீர் மீட்டர் :
பல்மாடி குடியிருப்புக் கட்டடங்களில் பிரத்யேக தண்ணீர் மீட்டர்கள் நிறுவுவதால் அவரவரின் உண்மையான பயன்பாட்டை அறிவித்து ஆண்டிற்கு சுமார் எட்டு ஆயிரம் காலன் அளவு நீர் சிக்கன படுத்தப்படுகிறது.
 

 
 
5)  தண்ணீர் கசிவுகளைக் கண்காணிக்கவும் :
தண்ணீர் மிக அதிகமாக செலவு ஆகும் வழி இது தான். குழாய்கள், தொட்டிகள் மற்றும் சிங்குகளில் உள்ள கசிவுகளை கவனிக்க அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வாறு கசிவு காணப் பட்டால் நீர் வரத்தை உடனடியாக அடைத்துவிடவும். பின்பு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் தண்ணீர் மீட்டரை கண்காணிக்கவும். மீட்டர் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தால் கசிவுகள் இருப்பது உறுதி ஆகிவிடும். சிறிய கசிவுகள் பெரும் அளவு நீரை அன்றாடம் வீணாக்க வல்லது – நினைவிருக்கட்டும் !
 
Drippigntaps.jpg
 
 
6)  குறைவாக நீர் பாய்ச்சும் ஷவர்கள் :
தண்ணீர் சேகரிப்பில் குறைந்த அளவு நீர் பாய்ச்சும் ஷவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குழாய்க்கு பதிலாக சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தினால் தற்போது உபயோகப்படும் நீரை விட பாதி அளவே நீர் செலவழியும். அதே போல் உங்கள் ஷவர் குளியலை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே குறைத்துக்கொண்டால் மாதத்திற்கு 150 காலன்கள் வரை சேமிக்கப் படுகிறது.
 
 
 
7)  குடிநீர் அல்லாத நீரை மறுபடியும் பயன்படுத்தவும் :
குடிக்க உதவாத நீரை தரை கழுவுதல், கழிவறை கழுவுதல் மற்றும் தோட்டத்திற்கு பாய்ச்சுதல் போன்றவைகளுக்காக பயன்படுத்தவும். இது வாஷ் பேசின், வாஷிங் மஷீன் மற்றும் ஷவர்களில் பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறும் நீரைக் குறிக்கும். இதை சேமித்து வைத்து மறுபடி பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவதை வெகுவாகக் குறைக்கலாம்.
 
graywater.jpg
 
 
8)  மழை நீர் சேகரிப்பை ஊக்குவியுங்கள் :
சில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் மழை நீர் சேகரிப்பு வெகுவாக வலியுறுத்தப் படுகின்றது.1500 சதுர மீட்டர்கள் வரை பரவி உள்ள எல்லாக் கட்டடங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்ற படுகிறது. இதை நிறுவும் செலவு சற்று அதிகம் ஆனாலும் இதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் கட்டணங்களை மனதில் வைத்தால் மிகவும் மலிவான ஒரு வழிமுறையாக இது கருதப் படுகிறது.
 
rainwaterharvesting.jpg
 
 
9)  தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களை தவிர்க்கவும் :
தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் தேவைப்படுவதால் அவ்வாறான பொருள்களை தவிர்ப்பது நல்லது.
 
 
 
10) தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கவும் :
தண்ணீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகளை தவறாமல் தங்கள் நண்பர்களிடமும் சுற்றி உள்ளவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். தங்கள் குடியிருப்பில் தண்ணீர் சேமிப்புக்கான வழிகளை மேற்கொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை பெரியோர்கள் மற்றும் குழந்தைகளிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
savewater.jpg
    நன்றி http://yazhinidhu.bl...save-water.html வலைத்தளத்திற்கு
 என சமூகம் நலன் கருதி
               

சனி, 28 ஜூன், 2014

மழைநீரை சேமிப்போம்..நிலத்தடி நீரை காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



                      மழை ஏமாத்திடுச்சே... இந்த வருஷமும் தண்ணிக்கு "அல்லோல' படணுமே...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், நாம் கூறுவது வழக்கம். வராத மழைக்கு கவலைப்படுவதில் உண்மை இருக்கிறது. அதே நேரத்தில், மழை கொட்டும் போது, அதை சேமிக்காமல், வீணடிக்கும் நம் செயலை, என்னவென்று சொல்வது."கடவுள், இயற்கை, அரசு, அதிகாரிகள்,' என, ஒருவர் விடாமல் குறை கூறும் நமக்கு, நம்மிடம் உள்ள முயற்சி குறைவை, சிந்திக்க மனம் வருவதில்லை.நம்மில் பலர் கண்டுகொள்ளாமல் விட்டது "மழைநீர் சேகரிப்பு' முறை. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெ., அறிமுகம் செய்த 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்', வீடுகளில் கட்டாயமாக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், குடியிருப்புகளில், ஜரூராக செயல்படுத்தப்பட்டது.அதன் பின் பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்டவில்லை. மக்களும், பொருட்படுத்தவில்லை. விளைவு, மழைநீர் சேகரிப்புத் திட்டம், மடிந்தது. மதுரையின் நிலத்தடி நீர் மட்டம், கணிசமாக குறைந்து போனது. போர்வெல்கள் தூர்ந்து போய், வறண்டன. ஆற்றுப்படுகையில் கூட, ஆழ்துளைக்கு வழியில்லை.மதுரையில், ஆண்டிற்கு 880 மி.மி., மழை, சராசரியாக பெய்கிறது. அதை முறையாக சேமித்தாலே, நீர் பற்றாக்குறை இருக்காது. "சிறு துளி, பெரு வெள்ளம்' என, படித்திருப்போம்; அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது நிற்கிறோம். தவறினால், தவிக்கப் போவது, நாமும், நம் சந்ததிகளும் தான்.முதல்வர் ஜெ., தொடங்கிய திட்டம் என்பதை மனதில் வைத்தாவது, மீண்டும் மழைநீர் திட்டத்திற்கு புத்துயிர் தர, உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். "அக்னி வெயிலில், மழைநீரை எப்படி சேமிப்பது' என, கேலி பேசுவதை விட, வரப்போகும் பருவ மழைக்கு முன்பே, நாம் தயாராக வேண்டிய அவசியத்தை, உணர வேண்டும். நிலநடுக்கத்தை கூட அறிய முடிகிறது; நீர் ஓட்டத்தை அறிய முடியவில்லை. இது தான், நம்மை நெருங்கி வரும் ஆபத்தின் அடையாளம். நம்மை விட்டு தூரம் போகிற ஈரத்தை, சேமிக்க மறந்தால், நமக்கு அதுவே பாரமாக அமைந்துவிடும்.எனவே வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவுவோம்.

"மேப்'ல் இருக்கு: "கேப்'ல் இல்லை :நகரமைப்பு விதிகளின் படி, வணிக, குடியிருப்பு கட்டடங்களில், "மழைநீர் சேமிப்பு' நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, அனுமதி தர வேண்டும் என்ற விதி உள்ளது. அனுமதி பெற வரும் கட்டட "மேப்'பில், மழைநீர் சேமிப்பு திட்டம் இடம்பெற்றிருக்கிறது. கட்டுமானம் முடிந்து பார்த்தால், அந்த இடத்தில் சுவர் தான் இருக்கும். அனுமதி அளித்ததுடன் தன் பணி முடிந்து விட்டதாக, அதிகாரிகள் நினைப்பதும், "அதிகாரியை ஏமாற்றிவிட்டோம்...' என, கட்டட உரிமையாளர் நினைப்பதுமே, இதுவரை, மதுரையில் நடந்து வருகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கண்காணித்தாலே, மழைநீர் சேமிப்பு, மீண்டும் புத்துயிர் பெற்றுவிடும். நகரமைப்பு அலுவலர் ராக்கப்பனிடம் கேட்ட போது, ""கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்ற விதி, தற்போதும் நடைமுறையில் உள்ளது. அவை இடம் பெறும் வரைபடத்திற்கு தான், அனுமதி தருகிறோம். சிலர், இடத்தை வீணடிக்க மனமின்றி, அதற்கான இடத்தை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கின்றனர். தன் பயன்பாட்டை உணர்ந்து, நீர் சேமிப்பை மக்கள் தவிர்க்க கூடாது,'' என்றார்.

மழைநீர் வடிகால் "ஓகே': சேமிப்பது "எப்போ':மழைகாலத்தில் மூழ்கும் மாநகராட்சியின் ரோடுகளையும், தெருக்களையும் காப்பாற்ற, மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதற்காக, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 11 கால்வாய்களையும் தூர்வாரி, சிமென்ட் கரைகள் அமைத்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்ற இத்தனை கோடிகளை கொட்டும் போது, மழைநீரை சேகரிக்க, மாநகராட்சி "ரிஸ்க்' எடுக்கலாமே.

வீடுகளில் மழைநீரை சேகரிப்பது எப்படி : நிலத்திற்கு அடியில் பொதுவான பெரிய தொட்டி அமைத்து, ஒரு வீதியிலுள்ள அனைத்து வீட்டுக் கூரைகளிலிருந்து வாய்க்கால் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி, சேகரிக்கலாம்.ஏற்கனவே உள்ள கிணறுகளின் அருகில் வடிஅடுக்கு அமைத்து, மழை நீரை விட்டு, சேமிக்கலாம். இம்முறையில் குறைந்த செலவில் மிகுந்த அளவில் நீரை சேமிக்க இயலும். ஆவியாதல் போன்ற சேதாரங்கள் குறைவு. ஆனால் 4 மாதங்கள் பெய்யும் மழை நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு சேகரித்திட, மிகப்பெரிய அளவிலான நீர்தேக்கத்தொட்டிகள் தேவைப்படும்.

நிலத்திற்கு அடியில் நீர் சேமிப்பு:நிலத்திற்கு அடியில், நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் பெருக்கத்திற்கு உதவும். கால இடைவெளி விட்டு மழை பெய்யுமிடங்களில், மழை நீரை மிகுந்த அளவில் சேமிக்க இயலும். இதனால் மழை நீர் வீணாவது குறையும். வீட்டின் கூரை மேற்பரப்பிலிருந்து மழை நீரை சேமிப்பு, தூர்ந்த கிணறு அல்லது குழாய் கிணறு மூலம் சேமிப்பு, பழுதான அடிபம்புகள் மூலம் சேமிப்பு, துளைக்கிணறுகளுடன் கூடிய கால்வாய், நீர்குழிகள் மூலம் சேமிப்பு என பல வகைகளில் சேமிக்கலாம்.

செலவு எப்படி:வீட்டின் கூரையிலிருந்து மழை நீரை சேகரிப்பது, கோடைகாலங்களில் நீர் தட்டுப்பாட்டை போக்கும். சுமார் 100 ச.மீ., பரப்பு மழை நீர் சேமிப்பு மேற்கூரை அமைக்க ரூ.5 ஆயிரமாகும். பல கட்டடங்கள் கொண்ட வளாகம், நீர் உட்புகும் கிணறு அமைப்புடன் அமைக்க ரூ.ஒரு லட்சத்து 85 ஆயிரமாகும்.குறிப்பிட்ட அளவில் குழி தோண்டி, அதில் சரளை, கூழாங்கற்களை இட வேண்டும். பின் சிறு கற்களை இடலாம். அதன்மேல் மணல் கொட்டி அமைக்க வேண்டும். மழை நீரை நேரடியாக விடாமல், சிறியளவில் வடிகட்டி விட்டால், தூசிகள் செல்வது தவிர்க்கப்படும்.

எவ்வளவு சேகரிக்க இயலும்: கூரை மேற்பரப்பு 100 ச.மீ., இருந்தால், ஓராண்டில் பெய்யும் சராசரி மழையளவு 1100 மி.மீ., இருந்தால், 80 சதவீதம் வரை 61, 600 லிட்டர் சேமிக்கலாம் என பொதுப்பணித்துறையின் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார மையம் குறிப்பிட்டுள்ளது.

மழை நீர் சேகரிப்பின் பயன்கள்:
* நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
* ஏற்கனவே உள்ள கிணறுகளில் நீர் பெருக்கம் ஏற்படும்.
* வீடுகளில் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
* தண்ணீரின் உப்பு தன்மை, மாசுபடுதல் குறைகிறது.
* நிலத்தினுள் உப்பு நீர் உட்புகுவது தடுக்கப்படும்.
* மண் அரிப்பு தடுக்கப்படும்.


கோடையிலும் குடிநீர் பஞ்சம் இல்லை:""வடிகட்டிய மழைநீர் தான், எட்டாண்டுகளாக எங்களது உடம்பை பாதுகாத்து வரும் சத்தான குடிநீர்'' என்கிறார், மதுரை கூடல்நகரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி., ரவீந்திரன்.

மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் வெற்றி கண்ட அவர் கூறியதாவது:நான் திருவாரூரில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, பொதுப்பணித் துறை பொறியாளர் வரதராஜன் அறிமுகமானார். அவர் மூலம் திருவாரூரில் இருந்த வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று, மதுரையில் வீடு கட்டினேன். எட்டாண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தேன். வரதராஜன் தான் மீண்டும் உதவினார். மூன்றாவது தளத்தில் மொட்டை மாடியில் வழிந்தோடும் தண்ணீரை சேகரிக்க, தனியாக "ஷெட்' அமைத்தேன். மொட்டை மாடியிலேயே தனியாக வடிகட்டும் தொட்டி அமைத்தேன். மணல், ஜல்லி, கரித்துகள்களை வடிகட்டியாக பயன்படுத்தி, அங்கிருந்து வடிகட்டிய நீரை தனியாக நான்கு தொட்டிகளில் சேகரிக்கிறேன். மொட்டை மாடியிலோ, பரணிலோ தொட்டி அமைக்க வசதியில்லை. எனவே, வீட்டின் கீழ்த்தளத்தில் "டைனிங் ஹால்' அறையில், தொட்டி அமைத்தேன். இந்த தொட்டி சென்னையில் தான் கிடைக்கிறது. ஒவ்வொன்றும் ரூ.3000 வீதம், நான்கு தொட்டிகள் இருக்கின்றன. சேகரமாகும் மழைநீர் கீழ்த்தொட்டி, மேல்தொட்டி என சேகரிக்கப்படுகிறது. தொட்டி நிரம்பினால் வெளியேறும் உபரிநீர், ஆழ்துளை கிணறைச் சுற்றியுள்ள இடத்தில் சேகரமாகிறது. இந்தத் தண்ணீரை குடிப்பதற்கு தனியாக தொட்டிகளில் சேகரிக்கிறேன். குடிப்பதற்கு இதை மட்டுமே பயன்படுத்துகிறோம். வடிகட்டுவதோடு சரி, காய்ச்சுவதில்லை. ஆனாலும் "மினரல் வாட்டர்' போல, ருசியாக இருக்கிறது.அதிகமாக மழை பெய்யும் காலங்களில் மொட்டைமாடியில் இன்னுமொரு பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீரை சேகரிக்கிறேன். இதை செடிகளுக்கு ஊற்றினால் நன்கு வளர்கின்றன. குடிநீரை எவ்வளவு மாதங்கள் வைத்திருந்தாலும் கெடாது. சுவையும் மாறாது. ஒருநாளில் ஒருமணி நேரம் மழை பெய்தால், மூன்று மாதங்கள் வரை தாங்கும்.எனக்குத் தெரிந்தவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன் என்றார். போன்:83000 35011.

மதுரையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்!மழையின்மை, ஒவ்வொரு வீட்டிலும், நீருக்காக 600 அடி வரை அமைக்கப்படும் ஆழ்குழாய்கள் போன்ற காரணங்களால், பல இடங்களில் ஆழ்துளை அமைத்தால் தண்ணீருக்கு பதில் "காற்று' மட்டுமே வருகிறது. மதுரையில், பல ஆண்டுகளாக ஆழ்துளை பணியில் ஈடுபட்டுள்ள கண்ணன் கூறியதாவது:ஐந்தாண்டுகளுக்கு முன், 60 அடி வரை ஆழ்துளையிட்டாலே போதும், தண்ணீர் பீறிட்டு அடிக்கும். இப்போது, நகரில் பரவலாக 200 அடி வரை துளையிட வேண்டியுள்ளது. அப்படி அமைத்தாலும், சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக, வில்லாபுரம், பெருங்குடி, அவனியாபுரம் பகுதியில், கெட்டி மண்ணாக இருப்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. அதேசமயம், பொட்டப்பாளையம், சாமநத்தம் பகுதிகளில் 60 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. மண்ணின் தன்மையை பொறுத்து, தண்ணீர் கிடைக்கும் ஆழத்தின் அளவுகள் மாறுபடுகின்றன, என்றார்.

850 அடி போட்டும் தண்ணீர் இல்லை! வேணுகோபால், வர்த்தகர், அய்யர்பங்களா: இந்த ஏரியா ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்தவை. 12 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கிறேன். ஏற்கனவே போடப்பட்ட 200 அடி போர்வெல்லில் இருந்து ஓரளவு தண்ணீர் கிடைத்து வந்தது. மழையில்லாததால், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் இல்லை. இதனால் சற்று தள்ளி, சில மாதங்களுக்கு முன் 400 அடிக்கு போர் போட்டும், தண்ணீர் வரவில்லை. எதிர்பிளாட்காரர் 850 அடி வரை போர் போட்டும், தண்ணீர் வரவில்லை. இந்நிலை நீடித்தால், கிராமங்களுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை. நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரூ.500க்கு லாரி தண்ணீரை வாங்கி, தொட்டியில் ஏற்றி வருகிறேன். கண்மாய், நீர்வரத்துகால்வாய்களை காக்க தவறியதால், இந்நிலை.

மாதம் ரூ.500 பட்ஜெட் : *ஆர்.உஷாராணி, குடும்பத்தலைவி, மதுரை:ஏழுபேர் உள்ள எங்கள் குடும்பத்திற்கு மாதத்திற்கு 12 கேன் "மினரல் வாட்டர்' தேவைப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் 15 கேன்கள் வாங்குகிறோம். ஒரு கேனுக்கு ரூ.35 வீதம் மாதம் ரூ.500க்கு பட்ஜெட் ஒதுக்குகிறோம். மாநகராட்சி குடிநீர் கிடைத்தாலும் அதை சுடவைக்க வேண்டும். அதற்காகும் "காஸ்' செலவை ஒப்பிடும் போது, "மினரல் வாட்டர்' வாங்கி விடலாம்.
  பதிவிட்ட 27-5-2013 தேதியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றி


Click Here

வெள்ளி, 27 ஜூன், 2014


வாழ்வு எப்படி ஆரம்பித்தது

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
 
                      வாழ்வு எப்படி ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் சுவையானவை அவற்றை அஸிமோவ் விவரிக்கிறார்.
                17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ரெடி, ஸ்பாலியான்ஸானி, பாஸ்ட்சர் ஆகிய விஞ்ஞானிகள் உயிர் வளர்ச்சி, தானே  இயற்கையாக நடந்தது என்ற கருத்தை ஆராய்ச்சி மூலம் மறுத்தார்கள் கொள்கையை அத்தகைய தானே உயிர் வளர்ச்சி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் அப்பொழுது பூமியின் சூழ்நிலை வேறு விதமாக இருந்திருக்க வேண்டும்.
                  ஊரோ, மில்லர், ஐபரின் முதலிய வேதியல் அறிஞர்கள் ஆர்வம் தூண்டும் ஆராய்ச்சிகள் செய்தார்கள், அவற்றை இளைஞர்கள் இங்கு புரிந்து கொள்ளலாம். சரியான ஆரம்ப வேதிப் பொருட்களும், சக்தி மூலமும் வைத்து உயிருள்ள ஜீவன்களில் அமைந்த எளிய வேதிப் பொருட்களை அவர்கள் உண்டாக்கிக் காட்டினார்கள். வாழ்வு எப்படித் துவங்கியது என்று அறியும் முயற்சியில் இது ஆரம்ப நிலைதான். போக போக ஆர்வத்தை மிகத் தூண்டும் சாத்தியங்கள் உள்ளதை அஸிமோவ் காண்கிறார்.


தானே உருவாதல்.
  மனிதர்களுக்கு குழந்தைகளும், நாய், பூனை, கரடி, மான் போன்ற மிருகங்களுக்கும் குட்டிகள் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு மிருகமும் அதன் தாயிடமிருந்து அந்த தாய் இன்னொரு தாயிடமிருந்து என்று இப்படி வருகிறது. நீங்கள் உங்கள் அம்மாவிடமிருந்து அவர் பாட்டியின் குழந்தை, பாட்டி கொள்ளுப் பாட்டியின் குழந்தை என்று இப்படிப் போகிறது. பறவைகள் முட்டை இடுகின்றன முட்டையில் இருந்து குஞ்சு, பின் அந்தக் குஞ்சு பறவையாகி முட்டையிடுகிறது, செடிகளும் இப்படித்தான் செடிகளை வளர்க்க முந்தைய செடியின் விதைக்குப் போக வேண்டும், அந்தச் செடிகள் அவற்றுக்கு முந்தைய செடியின் விதையிலிருந்து என்று போகிறது. இதெல்லாம் எங்கு தொடங்கின ? பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்குமோ ? இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் முதன்முதலான மனிதன், நாய், பூனை, கரடி, கோழி, டெய்ளிச் செடி என்று இப்படி இருந்திருக்குமோ ? அப்படியானால் முதல் உயிர் எப்படி வந்தது ? கொஞ்ச நாள் முன்பு வரை மக்கள் இது ஒரு பெரிய மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். அதாவது சில உயிர்களைப் பொறுத்தவரை ஒரு மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். எங்கிருந்து என்று தெரியாமல் சில உயிர்கள் வளர்ந்தன அல்லது வந்தன. நம்மைத் தொந்தரவு செய்த அல்லது நமக்குத் தேவையில்லாத சில உயிர்களைப் பற்றி இப்படித் தான் நினைத்தார்கள் உதாரணமாக முதலைகள், பாம்புகள், கொஞ்ச பேருக்குத் தான் அவற்றின் தேவை இருந்தது. நிறையப் பேர் அவற்றை கொல்ல முயன்றார்கள். ஆனாலும் அவை தென்பட்டுக் கொண்டு தான் இருந்தன. ஷேக்ஸ்பியரின் அன்டனியும், கிளியோபாத்ராவும் என்ற நாடகத்தில், லெபிடஸ் என்ற ரோமானியத் தளபதி சொல்வது இது. “உங்களுடைய எகிப்து பாம்பு, சகதியில் சூரியனால் உருவாக்கப்பட்டது முதலையும் அப்படி தான்”.
சூரியனால் சூடாக்கப்பட்ட சகதியில் முதலைகளும், பாம்புகளும் உருவானதாக சிலர் நம்பியிருக்கலாம், ஆனால் அது அப்படி அல்ல முதலைகளும், பாம்புகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இன்னும் சிறிய அளவில் இருக்கும் நிறைய ஜீவராசிகள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன ? குளிர்சாதனப் பெட்டிகள் வருமுன்பு, மாமிசம் கெட்டு, அழுகுதல் அடிக்கடி நிகழ்ந்தது மிகச் சிறிய புழுக்கள் மாமிசத்தின் மீது தோன்றும். செத்த மாமிசத்தின் மீது உயிருடன் புழுக்கள் உருவானது போலத் தோன்றும் உயிரற்ற பொருள்மீது தானே உயிருள்ள பொருள் வந்த மாதிரி புழுக்கள் இப்படி உருவாக முடியுமானல், நிச்சயமாக வேறு உயிர்களும் உருவாக முடியும் சரியான சூழ்நிலையில் ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகளும், முதலைகளும், கோழிகளும், நாய்களும், மனிதரும் உயிரற்ற பொருளிலிருந்து இப்படி உருவானார்களோ ? உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருள் உருவாவது “தானே வருவது” (spontaneous generation) எனலாம் வெளி உதவி ஏதும் இல்லாமல் நடப்பது பழைய காலத்தில் அறிஞர்கள் இத்தகைய “தானே வருதலை” அப்படியே கேள்வி கேட்காமல் எடுத்துக் கொண்டார்கள் 1668 ம் ஆண்டில் ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி என்ற இத்தாலிய மருத்துவர் இதனைச் சோதனை செய்ய வேண்டும் என்றார் கெட்டுப் போன மாமிசத்தின் மீது சிறிய உயிர்கள் முட்டைகள் இட்டிருக்கலாம் அல்லவா ? கண்ணுக்குப் புலப்படாத அளவு சிறிய முட்டைகளிலிருந்து புழுக்கள் வந்திருக்கலாம் 

                ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி, வெவ்வேறு எட்டு குடுவைகளில் புதிய மாமிசத்தை இட்டார். நான்கு குடுவைகளை உள்ளே எதுவும் புகாதபடி இறுக்க மூடினார். மற்ற நான்கு குடுவைகள் திறந்திருந்தன. பூச்சிகள் அவைகளுள் பறந்து சென்று அமர முடியும் நாட்கள் சென்றதும், திறந்திருந்த குடுவைகளின் மாமிசம் கெட்டு, நாறி, புழுக்களுடன் இருந்து ரெடி அப்போது மூடியிருந்த குடுவைகளைத் திறந்து பார்த்தார். மாமிசம் கெட்டு நாறியது ஆனால் புழுக்கள் இல்லை. நல்ல காற்று இல்லாததால் புழுக்கள் உண்டாகவில்லை ?  
                 ஃப்ரான்ஸிஸ்கோ ரெடிஇன்னொரு சோதனை செய்தார். சில குடுவைகளில் புது மாமிசத்தை இட்டு அவைகளை திறந்து வைத்து அவற்றை ஒரு வலையால் மூடினார். நல்ல காற்று உள்ளே போகலாம் ஆனால் பூச்சிகள் போக முடியாது விளைவு ? மாமிசம் கெட்டுப் போனது. ஆனால் புழுக்கள் உருவாக வில்லை. இதில் ஒரு தெளிவான முடிவு தெரிந்தது பூச்சிகள் முட்டையிட்டன. புழுக்கள் அவற்றிலிருந்து பொறிந்து வந்தன. கொஞ்ச நாளில் புழுக்கள் பூச்சிகள் ஆயின.
                 கம்பளிப் புழுக்களிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் வருவது போல தானே உருவாதல் என்ற கொள்கைக்கு எதிரான வலுவான சான்று

                 .ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி இதனைக் கண்டுபிடித்த காலத்தில் விஞ்ஞானிகள் “மைக்ரோஸ்கோப்புகளை” உபயோகிக்கத் தொடங்கியிருந்தார்கள் மைக்ரோஸ்கோப்புகள் வெறும் கண்ணுக்குப் தெரியாத நுண்ணுயிர்களைப் பெரிதுபடுத்தி புலப்படுத்திக் காட்டின. 
                   ஆன்டன் வான் லூவன் ஹீக் 1632 – 1723 என்ற டச் நாட்டு விஞ்ஞானி, 1675 ம் ஆண்டில் வெறும் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களை மைக்ரோஸ்கோப் மூலம் காட்டினார் அவைகள் “நுண்ணுயிர்கள்” என்று அழைக்கப்பட்டன அவைகள் அங்கும் இங்கும் செல்வதையும் மற்ற உயிர்களை உண்ணுவதையும் அவர் பார்த்தார். இந்த நுண்ணுயிர்கள் எங்கிருந்து வந்தன ? அவைகள் அநேகமாக ஒரு அங்குலத்தின் நூற்றில் ஒரு பங்குக்கு கீழே தான் இருந்தன அவைகள் முட்டையிட முடியுமா ?

                   ஒரு குட்டை அல்லது குளத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து இவைகளைப் பார்க்கலாம் உணவுப் பொருளைத் தண்ணீரில் கலந்த சாறை, குட்டை நீருடன் சேர்த்தால் நுண்ணுயிர்கள் அவற்றை உண்பதைக் காணலாம். அவைகள் உண்டு, வளர்ந்து பெருகுகின்றன. ஆனால் உணவுச் சாறுடன் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை, புதிதாகத் தயாரிக்கப்பட்டு வடிகட்டின
சாறாக இருந்தாலும், அதனில் நுண்ணுயிர்கள் முதலில் இல்லாவிட்டாலும், கொஞ்ச நேரத்தில் ஏராளமான நுண்ணுயிரைப் பார்க்கலாம். உயிர் தானே உருவாதலுக்கு இது ஒரு உதாரணம். உயிருள்ள நுண்ணுயிர்கள் உயிரில்லாத சாறு ஒன்றிலிருந்து உருவாயின இப்படிச் சொல்வது சரியா ? ஒரு வேளை நுண்ணுயிர்கள் காற்றில் மிதந்து கொண்டு இருந்திருக்கலாம். 
                 அவற்றுள் சில “சாறில்” விழுந்து பெருகியிருக்கலாம். இந்தக் கொள்கையை மறுபடியும் சரிபார்க்க 1748 இல், ஜான் டி நீடம் 1713 – 1781 என்ற இங்கிலீஷ் விஞ்ஞானி புதிய மாமிச சாறுடன் சோதனை தொடங்கினார் அதில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்ல ஒரு குடுவையில் அதனைக் கொதிக்க வைத்தார் குடுவை சூடாக இருந்த போதே அதை இறுக்கி மூடினார். சில நாட்கள் கழித்து குடுவையைத் திறந்து, மைக்ரோஸ்கோப்பின் மூலம் அதில் நிறைய நுண்ணுயிர்கள் இருக்கக் கண்டார். 
            குடுவை மூடி இருந்ததால், அதில் எதுவும் விழுந்திருக்க முடியாததால், “தானே உருவாதல்” என்ற கொள்கை நீருபிக்கப்பட்டது என்று அவர் நினைத்தார்.

               ஆனால் லாஸரோ ஸ்பாலன்ஸானி 1729 – 1799 என்ற இத்தாலிய விஞ்ஞானி இதனை ஒத்துக் கொள்ளவில்லை நீடம் முதலியே எல்லா நுண்ணுயிர்களையும் அழித்திருப்பாரா என்று அவர் கேட்டார். ஏனென்றால் குடுவை சில நிமிஷங்களே கொதிக்க வைக்கப்பட்டது.
              ஸ்பாலன்ஸானி மறுபடி அதே சோதனைச் செய்தார் மாமிச சாறை அரை மணிக்கு மேல் கொதிக்க வைத்தார். அப்புறம் இறுக்க மூடினார். எத்தனை நாட்கள் கழித்து திறந்து பார்த்தாலும் குடுவையில் நுண்ணுயிர்கள் உருவாகி இருக்கவில்லை. எனவே, நுண்ணுயிர்கள் காற்றில் மிதந்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும் அவற்றில் சில மாமிச சாறில் விழுந்து பெருகியிருக்க வேண்டும் என்று ஸ்பாலன்ஸானி நினைத்தார்.

                 ஸ்பாலன்ஸானி நுண்ணுயிர்களை மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்தார். ஒன்று, இரண்டாகத் தன்னை பகுத்துக் கொள்வதை அறிந்தார். இப்படித்தான் இனப்பெருக்கம் நிகழ்கிறது. 
                       நுண்ணுயிர்கள் காற்றில் எப்போதும் மிதந்து கொண்டிருக்கின்றனவா ? 
                   தியோடர் ஷிபான் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி (1810 – 1882) 1836 இல் இதனைச் சோதனை செய்தார், ஸ்பாலன்ஸானி செய்தது போல அவரும் மாமிச சாறைக் கொதிக்க வைத்தார். ஆனால் குடுவையை மூடவில்லை. அதற்கு பதிலாக, நுண்ணுயிர்களைக் கொல்லும் அளவுக்குச் சூடானக் காற்றை குடுவையில் வரச் செய்தார்.
                   மாமிச சாற்றில் நுண்ணுயிர்கள் உருவாகவில்லை. உயிர்கள் தானே உருவாவதற்கு ஏற்ற ஒரு உயிர் தத்துவம் காற்றில் பொருந்தி இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைத்தார்கள் அதிகமான சூட்டில் நுண்ணுயிர்கள் அழிந்து போவதால் உயிரற்ற மாமிச சாறில் நுண்ணுயிர்களை காணமுடியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். 
               இதனை சோதிப்பதற்கு லூயிபாஸ்டர் என்ற பிரான்சு வேதியல் அறிஞர் (1822 - 1895) 1860 ல் ஒரு புதிய சோதனைச் செய்தார். மாமிச சாறில் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கும் வரை கொதிக்க வைத்தார். சாறு நீண்ட மெல்லிய கழுத்துடைய குடுவையில் வைக்கப்பட்டது. குடுவையின் கழுத்து ‘S’ என்ற ஆங்கில எழுத்து பக்கவாட்டில் கிடப்பது போல் அமைக்கப்பட்டது. மாமிச சாறு குளிர்ந்ததும் குளிர்ந்த காற்று நீண்ட மெல்லிய கழுத்தின் வழியாக உள்ளே போய் வர முடியும். காற்றில் இருந்த உயிர்ச்சத்து அல்லது தத்துவமும் கூட காற்று மட்டும் உள்ளே வந்தது. தூசி ஏதும் இருந்தால் அது குடுவையின் கழுத்தின் கீழ் வளைவில் இருந்தது. நுண்ணுயிர்களும் தூசியோடு சேர்ந்து கீழ் வளைவில் அமரும் என்று பாஸ்ட்சர் கருதினார். அப்படித்தான் நடந்தது. மாமிச சாறில் நுண்ணுயிர்கள் இல்லை. குடுவையின் கழுத்தை உடைத்து, தூசியும் காற்றும் உள்ளே வரச் செய்தால் நுண்ணுயிர்களும் தோன்றத் தொடங்கின.

                        பாஸ்ட்சரின் இந்தப் பரிசோதனைக்குப் பிறகு “தானே உயிர் உருவாதல்” என்ற கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது மாதிரி இருந்தது.       
               ருடால்பஃ ஃவீரசௌ என்ற ஜெர்மன் விஞ்ஞானி (1821 - 1902), பாஸ்ட்சரின் சோதனை பற்றி கேள்விப்பட்டு, “எல்லா உயிரும் உயிரிலிருந்தே வருகிறது” என்றார் விஞ்ஞானிகள் எல்லாம் இதனை ஒத்துக் கொண்ட மாதிரி இருந்தது.

டார்வினின் கொள்கையும் மற்றவர்களின் கொள்கையும்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                     எல்லா உயிரும் உயிரிலிருந்து தான் வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் தன் முந்தைய உயிரினத்திலிருந்து தான் வருகிறது. நாய், பூனை, தம் குட்டிகள் போடும். ஒரு பீவர், தன் பீவர் குட்டியே போடும். ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டையிலிருந்து ஆஸ்ட்ரிச் குஞ்சுகள் வரும். ஓக் மரம் அகார்ன் பழம் தரும் அதன் விதையிலிருந்து இன்னொரு ஓக் மரம் வரும். ஒவ்வொரு தாவரமும், மிருகமும், நுண்ணுயிரும் தன் போன்ற இன்னொன்றையே உருவாக்கும்.

            ஒவ்வொன்றும் ஒரு உயிரினமாகும்.

           மனித இனம் ஒன்று, 
யானைகளில் இந்திய ஆப்பிரிக்க யானை என்று இரண்டு  இனங்கள் .ஹையனக்களில் மூன்று, 
பேட்ஜர்களில் எட்டு, 
நரிகளில் ஒன்பது, 
ஈக்களில் 500, 
வேறு பூச்சிகளில் 660,000 என உயிரின வகைகள் உள்ளன.

            விஞ்ஞானிகள் ஏறத்தாழ பத்து லட்சம் வேறுவேறு உயிரினங்களைக் கண்டுபிடித்தனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத பூச்சிகளும், சிறிய உயிர்களும் இன்னும் ஒரு பத்து லட்சம் இருக்கலாம்.

               இந்தப் புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது. இருபது லட்சமோ மேலோ உள்ள உயிரினங்களில் ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது என்று அவர்கள் கண்டறிய வேண்டும். 

                  எல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பித்தனவா ? ஒரே இடத்தில் ? ஒரே வழியில் ? ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு நிலைமையில் ஆரம்பித்ததா ? வெவ்வேறு உயிரினங்கள் வித்தியாசங்கள் ஒரே மாதிரி இல்லை. ஒரே மாதிரியான சில உயிரினங்கள் ஒரு குழுவாய் அமைந்தன. அது போல வேறு குழுக்கள் அமைந்தன.

                  எடுத்துக்காட்டாக, ஓநாய்களும், நரிகளும் வேறு குழுக்களாய் இருந்தாலும், அவை எல்லாம் நாய் போன்ற மிருகங்கள் என்ற அமைப்பில் வந்தன. 
               சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், வலியச் சிறுத்தைகள் ஆகிய எல்லாம் பூனை போன்ற விலங்குகள். நாய் போன்ற விலங்குகளும், பூனை போன்ற விலங்குகளும், கரடிகளும், ஒருவகைக் கீரிகளும், கடல் நாய்களும் இன்ன பிறவும் மாமிசம் தின்னும் விலங்குகள்.

              மாமிசம் தின்னும் விலங்குகள் (உயிரினங்கள்) போல தாவரம் (செடி, கொடிகள்) உண்ணும் விலங்குகள், ஆடு, மான், முயல், எலி போன்றன உள்ளன. 

                ஆனால் இந்த இரு இனங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன உடம்பில் மயிர், வெதுவெதுப்பான இரத்தம், தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுத்தல், இவைகள் பாலூட்டிகள் எனப்படுகின்றன.

            பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலில் திரிவன ஆகிய உயிர்களில் பல வகைகள் உள்ளன. இவைகளும் பாலூட்டிகளும் முதுகெலும்பு உள்ளவை. 

             உயிரினங்களை வகை பிரிப்பதில் 18,600 வகையான தாவரங்களை ஆங்கில இயற்கை இயல் அறிஞரான ஜான் ரே (1628 – 1705 ) 1660 இல் ஆராய்ந்து தொகுத்தார். அவற்றை அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார். முதல் பிரிவின் தாவரங்களில் விதைகள் ஒரு சிறிய விதை இலையில் இருந்தது. இரண்டாவது பிரிவின் விதைகள் இரண்டு விதை இலைகளில் இருந்தன.

                    1693 ல் அவர் விலங்குகளைப் பாகுபாடு செய்தார். குளம்புகள் உள்ளன. குளம்புகள் (குதிரையின் கால் பகுதி) உள்ளவற்றில் ஒவ்வொரு காலிலும் ஒன்று, இரண்டு, மூன்று குளம்புகள் என்று இப்படி ஸ்வீடிஷ் இயற்கை இயல் விஞ்ஞானியான கரோலஸ் லின்னேயஸ் ( 1707 – 1778 ) அவர்களின் ஆராய்ச்சி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1735 இல் தாவரங்களையும், விலங்குகளையும் துல்லியமாக பகுத்து அவர் புத்தகம் வெளியிட்டார். ஒரே மாதிரியான உயிரினங்களை ஜெனரா என்றார். ஒரே மாதிரி ஜெனராக்களை குடும்பங்களாகப் பகுத்தார். குடும்பங்களை வரிசைகளாகவும், வரிசைகளை வகுப்புகளாகவும் பகுத்தார். 

                   அதன்பின்னர், ஜார்ஜ் கூவ்யாய் என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானி ( 1769 – 1832 ) வகுப்புகளை ஃபைலா என்றும், ஃபைலாவை அரசுகள் என்றும் பகுத்தார். இந்தப் பிரிவுகள் நன்றாக இருந்தன எல்லா உயிரினங்களும் ஒரு மரம் போன்ற அமைப்பில் வரிசைப் படுத்தப் பட்டன.

             மரத்தின் அடிப்பாகமே வாழ்க்கை அது நான்கு அரசுகளாகப் பிரிகிறது. விலங்குகள், தாவரங்கள் இரண்டு விதமான நுண்ணுயிர்கள் ஒவ்வொரு அரசும் பல ஃபைலாக்களாகப் பிரிந்தது. 

                 அவைகள் வகுப்புகளாக, வரிசைகளாக, குடும்பங்களாக, பின்னர் ஜெனராக்களாக கடைசியாக ஜெனராக்கள் இருபது லட்சம் கிளை உயிர்களாக. நிஜமான மரம் வளர்ந்து பிரிவது போல இந்த வாழ்க்கை / உயிர் மரமும் உள்ளது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள். 

                 பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வனவும் பிறவும் ஒரு அடிப்படையான முதல் முதுகெலும்பியிலிருந்து வந்தனவா ?
 இப்போது உள்ள எல்லாப் பாலூட்டிகளும் ஒரு முதல் பாலூட்டியிலிருந்து வந்தனவா ? 
ஒரு இனம் மற்றொரு இனமாக மெதுவே மாறியதா அல்லது அதே மாதிரியான இன்னொரு முழு இனமாக மாறியதா ? 

                 ஒரு இனம் மற்றொரு இனமாக மாறும் “கற்பனைக் கொள்கை” பரிணாம வளர்ச்சி எனப்பட்டது. மாற்றத்தை ஒருவரும் நேரில் பார்ப்பதில்லை. நமது வரலாற்றில் பூனைகள் என்றும் பூனைகளாகவே இருந்தன. நாய்களும் நாய்களாகவே இருந்தன. ஆனால் நமது வரலாறு ஐந்து ஆயிரம் ஆண்டுகள் தான் தெரியும்.

                   மாற்றங்கள் மிகமிக மெதுவாகவே நடக்கின்றது ஒரு மாற்றத்தை உணர ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். கி.பி. 1800 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த உலகம் பலப்பல லட்சம் 1 கோடி ஆண்டுகளுக்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். பரிணாம வளர்ச்சிக்கு, வேண்டிய ஏராளமான நேரம் இருந்தது.

               இந்த பூமி ஏறத்தாழ 4600,000,000 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு உயிர் இனம் ஏன் மாற வேண்டும் ? 
               எவ்வளவு மெதுவாக இருந்தாலும் அதற்கு எவ்வளவு நேரம் இருந்தாலும் ஏன் மாற வேண்டும் ?

                  ஃப்ரென்ச் இயற்கை இயல் அறிஞர் லாமார்க் ( 1744 – 1829 ) இதற்கு ஒரு விளக்கம் தந்தார். 1809 ம் ஆண்டு அவர் வெளியிட்ட புத்தகத்தில், ஒவ்வொரு தாவரமும், விலங்கும் தன் வாழ்நாளில் மாறுகிறது என்றும், அம்மாற்றத்தை இளைய தலைமுறை ஏற்றுக் கொள்கிறது என்றும், இப்படியே அந்த உயிரினம் முற்றும் மெல்ல மாறுகிறது என்றும் சொன்னார். உதாரணமாக, ஒருவகை மான் இலைகளைச் சாப்பிட்டது. இலைகளைக் கவ்வுவதற்காகக் கழுத்தை நீட்டி நீட்டி மரங்களின் உயரத்தில் இருந்தவற்றை பறித்தது. அதனால் அதனுடைய கழுத்து நிரந்தரமாக நீண்டு கொண்டே வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக. அதன் குட்டிகளும் இந்த முயற்சியைக் குணமாகப் பெற்றன, மீண்டும் முயன்றதில் அவற்றின் கழுத்து இன்னும் கொஞ்சம் நீண்டது தலைமுறை, தலைமுறையாக இப்படி நடந்து, ஆயிரக்கணக்கான வருஷங்களில் அந்த மான் இனம் ஒட்டகச்சிவிங்கியாக மாறியது.

                இது போல, வேறு சில இனங்கள் வேகமாக, பெரிதாக, சிறிதாக இப்படி மாறின. ஆனால் உயிர்கள் தாங்கள் அடைந்த மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு உடனே தருவதில்லை. திரும்பத் திரும்ப சோதனைகள் நடத்தியதில் லாமார்க்கின்க் கொள்கை தவறு என்று சொல்லபட்டது.


               அதுவரை வழக்கில் இருந்த கொள்கையிலிருந்து இன்னும் நல்ல கொள்கையை ஆங்கில இயற்கை இயல் அறிஞர் சார்லஸ் டார்வின் (1809-1882) முன்வைத்தார். 1859'ல் அவர் 'உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species') என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒரு உயிரினத்தின் வேறுவேறு உறுப்பினர்களிடையே சிறு வேறுபாடுகள் உள்ளன என்று அவர் சொன்னார். பலம், வேகம், நிறம், கண்பார்வை, முகரும்திறன் .. என்பது போன்ற விஷயங்களில்.
எளிதில் இரையைப் பிடிப்பவை, எதிரிகளுடன் சண்டையில் வெல்பவை, எதிரிகளிடமிருந்து திறமையுடன் ஒளிந்து கொள்பவை, பட்டினி பொறுப்பவை ஆகியன, நிறைய நாள் உயிருடன் இருக்கும்; நிறைய குட்டி போடும். 

                 அவைகள் தங்கள் குணங்களை அடுத்த தலைமுறைக்கு தரும்; ஏனெனில் அவை அவற்றுடன் பிறந்தவை. அக்குணங்கள் உடனடியாக ஒரே தலைமுறையில் பெற்றவை இல்லை.
                   இப்படி தலைமுறை தலைமுறையாக நடக்கும் உயிரினங்கள் மெதுவாக தம் சூழலுக்கு ஏற்ப மாறும். தினுசு தினுசாகச் சூழ்நிலைக்கேற்ப மாறுதலால் வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் வரப்பெறும் வேகமாய் ஓடுபவை, நன்கு ஒளிந்து கொள்பவை அல்லது நன்கு சண்டை போடுபவை என்று. 

                டார்வினின் கொள்கையான "இயற்கை தேர்வு" பரிணாம வளர்ச்சி' ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் பல விஞ்ஞானிகள் அதனை நிரூபிக்கும் சான்றுகள் கண்டனர். டார்வினின் காலத்திற்குப்பின் அவர் கொள்கைகள் மேலும் விரிவடைந்தன. பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பமான விஷயங்கள் இன்னும் பேசப் படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன, என்றெல்லாம் உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பரிணாம வளர்ச்சி பெற்றதை விஞ்ஞானிகள் இன்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.

உயிரனங்களும்,மாலிக்யூள்களும்.

மரியாதைக்குரியவர்களே,
                                வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


                             பூமி எங்கும் இன்று உயிரினங்கள் உள்ளன. எல்லா இடத்திலும், நீரில், நிலத்தில், கடல்பரப்பில், கடல் ஆழத்தில், மலைகளில், சமவெளிகளில், பாலைவனங்களில் கூட பூமி உருவானபோது மிகச் சிறிய, லேசான ஹைட்ரஜன் மாலிக்யூல்களை வைத்துக் கொள்ள முடியவில்லை (2 ஹைட்ரஜன் அணுக்களை ஒரு மாலிக்யூலாக வைத்துக் கொள்ள முடியவில்லை) 

                        ஆதிகால கடல் நீரில் நிறைய அம்மோனியாவும் ஹைட்ரஜன் சல்பைடும் கலந்து இருந்தன. காற்றில் நிறைய மீத்தேனும், கொஞ்சம் அம்மோனியாவும், ஹைட்ரஜன் சல்பைடும், நீராவியும் இருந்தன.

                    சூரிய ஒளி வாயு மண்டலத்தில் பட்டபோது தண்ணீர் மாலிக்யூல்களை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரித்தது. ஆக்ஸிஜன், மீத்தேனுடனும், அம்மோனியாவுடனும் சேர்ந்து அவைகளை கார்பன் – டை – ஆக்ஸைடாகவும், நைட்ரஜனாகவும் மாற்றியது  தாவரங்கள் வந்த பிறகு கார்பன் – டை – ஆக்ஸைடு ஆக்ஸிஜனாக மாறியது. 

                     இந்த முறையில் பூமி மூன்று வாயு மண்டலங்களுடன் இருந்தது. நாம் இப்போது மூன்றாவது மண்டலமாகிய நைட்ரஜன் + ஆக்ஸிஜன் மண்டலத்தில் இருக்கிறோம். நைட்ரஜனும் கார்பன் – டை – ஆக்ஸைடும் ஆன இரண்டாவது மண்டலத்தில் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்கலாம். ஒரு வேளை அம்மோனியாவும் மீத்தேனும் ஹைட்ரஜன் சல்பைடும் இருந்த முதல் மண்டலத்தில் கூட உயிர்கள் தோன்றியிருக்கலாம். 

               இப்பொழுது நாம் இருக்கும் வாயுமண்டலத்தை தவிர, வேறு ஒரு மண்டலத்தில் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்கலாம் என்று ஆங்கில வேதியியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (1892 - 1964) 1929 ல் ஒரு கருத்தை வெளியிட்டார். 1936 ல் அலெக்ஸார் ஜ. ஓபரின் (1894 - 1980 ) மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் உயிர்வாழ்வு முதல் மண்டலத்திலேயே ஆரம்பித்திருக்கலாம் என்று சொன்னார். 

                              மீத்தேன், அம்மோனியா, தண்ணீர், ஹைட்ரஜன், சல்பைடு, ஆகிய எல்லாம் சிறிய மாலிக்யூல்கள். 

                 ஒவ்வொன்றிலும் மூன்று முதல் ஐந்து அணுக்கள் அமைந்தன. அவற்றுள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், சல்பர் அணுக்கள் இவைகள் எல்லா அமினோ அமிலங்களுடன் சேர்ந்து பெரிய மாலிக்யூல்கள் ஆகக் கூடியன. 

          இதில் சிக்கல் என்னவென்றால், பொதுவாக சிறிய மாலிக்யூல்கள் நிலையானவை. பெரிய மாலிக்யூல்கள் உடையக் கூடியவை. ஆகவே சிறிய மாலிக்யூல்கள், தாங்களாகவே சேர்ந்து பெரியவை ஆவதில்லை. மாறாக, பெரிய மாலிக்யூல்கள் உடைந்து சிறியவை ஆகும். பெரியவை, சிறியவை ஆவது மலையிலிருந்து கீழே உருண்டு வருவது போன்றது, 

          சிறியவை, பெரியவை ஆவது தாங்களே மலை மேல் ஏறுவது போன்றது சிறிய மாலிக்யூல்களை மலை மேல் ஏற பலவந்தப்படுத்த வேண்டும் மலை மேல் ஏறி பெரிய மாலிக்யூல் ஆகி, உயிர் வாழ்வை உருவாக்க ஒரு பெரிய சக்தியால் தான் சிறிய மாலிக்யூல்களை மலை ஏற வைக்க முடியும். 

               பூமியின் ஆதிகாலத்தில் சக்தி நிறையக் கிடைத்தது. மின்னல், எரிமலைச் சூடு, சூரிய வெளிச்சம் முதலியவற்றைச் சொல்லலாம். தற்காலத்தில், சாதராண வெளிச்சத்தை விட அதிக சக்தி உடைய, அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியின் மேற்பரப்புக்கு அதிகம் வருவதில்லை. 

             பூமியின் மேல் பதினைந்து மைல் தொலைவில் உள்ள ஓஸோன் என்ற ஒருவிதமான ஆக்ஸிஜன் அடுக்கு அல்ட்ரா வயலட் கதிர்களைத் தடுத்துவிடுகிறது. உயிர் வாழ்வு ஆரம்பித்த நாட்களில் வாயுமண்டலத்தில் ஓஸோனும் இல்லை. ஆக்ஸிஜனும் இல்லை. அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் முழுச் சக்தியுடன் பூமியின் மேற்பரப்புக்கு வந்தன. இவ்வித சக்தியினால், சிறிய மாலிக்யூல்கள் மலை மேல் ஏறுவது போல் உந்துதல் பெற்று பெரிய மாலிக்யூல்களை உருவாக்கின. உயிர் வாழ்வும் ஆரம்பம் ஆனது.

பரிணாம வளர்ச்சி

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  

                  பரிணாம வளர்ச்சி தொடங்கும் நிலை  மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்வாழ்க்கை இல்லை. புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் ஆதி காலச் சமுத்திரங்களில் உருவாயின. தங்களைச் சுற்றி இருந்த வேதியியல் பொருட்களை உண்டு, பெருகின. அவைகள் பலத்தில் தம்முள் வேறுபட்டன. இயற்கைப் பொருட்களில் சில நன்கு வளர்ந்தன, சில அழிந்து பட்டன. . பின்னர் நீண்ட பரிணாம வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம்மும் உயிரினங்களும் வந்துள்ளன. 
                           புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும், எப்படிச் செயல்படத் துவங்கின ? 
                  அவைகள் எளிய, உயிரற்ற மாலிக்யூல்களிலிருந்து தாமே உருவாகத் தொடங்கினால் அவைகள் தோன்றிய உடனேயே வாயு மண்டல ஆக்ஸிஜன் அவைகளை அழித்து விட்டிருக்கும். ஆனால் வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜன் எப்போதும் இல்லை. தாவரங்கள் வாயுமண்டல கார்பன் – டை – ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜன் வெளியிட்டன.


                  இப்பொழுது தாவரங்களின் செயல்பாடுகளில் பூமியின் வாயுமண்டலம் 4/5 பங்கு நைட்ரஜனும், 1/5 பங்கு ஆக்ஸிஜனுமாய் உள்ளது. கார்பன் – டை – ஆக்ஸைடு 1/3000 பங்கே உள்ளது. (ஒரு கார்பன் – டை – ஆக்ஸைடு மாலிக்யூலில் ஒரு கார்பன் அணுவும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன) 

                     பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தாவரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜனும் இல்லை. கார்பன் – டை – ஆக்ஸைடே இருந்தது. அப்பொழுது பூமியின் வாயுமண்டலம், நைட்ரஜனும், கார்பன் – டை – ஆக்ஸைடும், கலந்திருந்தது. 
                          மார்ஸ், வீனஸ், ஆகிய கிரகங்களின் வாயுமண்டலம் இன்னும் நைட்ரஜன், கார்பன் – டை – ஆக்ஸைடு கலந்த கலவையாய் இருக்கிறது. அவ்விடங்களில் உயிர்வாழ்வு இல்லை. பூமியின் ஆதி வாயுமண்டலம் அப்படி இருந்திருக்காது. சூரியனும், ஜீபிடர், சனி, போன்ற பெரிய கிரகங்களும் அநேகமாக வாயுமண்டல ஹைட்ரஜன் நிரம்பி உள்ளன. 
                 தூசியும், வாயுவும் மேகக் கூட்டமாய் சூரியப் பிரபஞ்சத்தை உண்டாக்கின அவைகள் ஹைட்ரஜனும், ஹைட்ரஜன் அணுக்களும் வேறு சில அணுக்களும் சேர்ந்தன. சாதாரணமாக, மீத்தேன் (4 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு கார்பன் அணு), அம்மோனியா (3 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு நைட்ரஜன் அணு), தண்ணீர் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு ஆக்ஸிஜன் அணு) ஹைட்ரஜன் சல்பைட் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு சல்பர் அணு) ஆகியவை அமைந்தன.

                  1953 ல் பிரான்சிஸ் H.C. க்ரிக் (1916 --) என்ற ஆங்கில விஞ்ஞானியும், ஜேம்ஸ் டி. வாட்ஸன் (1928 - ) என்ற அமெரிக்க விஞ்ஞானியும் சேர்ந்து ஆராய்ந்து, ஒரு நீயூக்ளிக் அமிலத்தின் அமைப்பைக் காட்டினார். ஒரு நீயூக்ளிக் அமில மாலிக்யூல் எப்படித் தன்னைப் போலப் பிறிதொன்றை உருவாக்க முடியும் என்று காண்பித்தார்கள். 

              நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள், புரோட்டீன் மாலிக்யூல்களின் அமைப்பை நிர்ணயிக்கின்றன. புரோட்டீன் மாலிக்யூல்கள் உயிர்ப் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றன. இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், 
                    நீயூக்ளிக் அமிலங்கள் ஒரு வாழும் உயிரில் தம்மைப் போலச் சரியாக பிற உயிர்களை உருவாக்குகின்றன. சில நீயூக்ளிக் அமிலங்கள் இளைய உயிர்களுக்குக் கொடுக்கப் படுகின்றன. இளைய உயிர்களில் உள்ள நீயூக்ளிக் அமிலங்கள் பெற்றோரில் உள்ளது போன்ற புரோட்டீன்களை உருவாக்குகின்றன. இதனால் குட்டிகள் பெற்றோரைப் போலுள்ளன. 
                            நாய் போன்ற குட்டிகள், பூனை போன்ற குட்டிகள் சில நேரங்களில் நீயூக்ளிக் அமிலங்கள் தங்களைச் சரியாக பிரதி எடுப்பதில்லை. ஒன்று தவறிய நீயூக்ளோடைட் (Nucleotide) இங்கும் அங்கும் வந்து விடலாம். அப்போது சில மாற்றங்கள் ஏற்படலாம். ‘உயிரின மாறுதல்’ (Mutation) மாற்றம் மிகச் சிறியதாய் இருக்கலாம். ஒரு நாய்க்குட்டி அந்த மாற்றத்தோடு தன்னுடைய நாய்க் கூட்டத்தில் இருக்கலாம் இதுபோன்ற நுண்ணிய மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கின்றன. 

                     அதனால் தான் பல லட்சக்கணக்கான மனிதர்களில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனித்துவமான முகம், குரல், தோற்றம் அமைந்து அவர்களை நாம் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த மாறுதல்கள் (Mutations) இயற்கையின் செயல்களுக்கு  உந்துதல் தந்து, பரிணாம வளர்ச்சி நடைபெற வழி செய்கின்றன.
               விஞ்ஞானிகள் கண்டறிந்தவரை, அவர்கள் ஆராய்ந்த ஒவ்வொரு உயிரினமும், சிறியதிலிருந்து பெரியது வரை புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் உடையவை. அதனால்தான் , மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த முதன்முதல் உயிரினங்கள் புரோட்டீன்களாலும், நீயூக்ளிக் அமிலங்களாலும் ஆனவை என்கிறோம்.

                   உலகில் உயிர்வாழ்வு எப்படித் தொடங்கியது என்று கேள்வி எழுப்பினால், முதன் முதலில் புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் எப்படி உண்டாயின, அவை எப்படி முதல் உயிரை உண்டாக்கின என்று கேட்பதற்குச் சமம்.

மாலிக்யூல்கள்-

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

                     1700 ம் ஆண்டின் பின்பகுதியில் விஞ்ஞானிகள் மாலிக்யூல்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
             வில்லியம் ப்ரெளட் (1785 - 1850) என்ற ஆங்கில விஞ்ஞானி 1827 ல் அவற்றை மூன்று முக்கிய வகையாகப் பிரித்தார்.

                 முதல் வகை மாவுச்சத்தும், சர்க்கரைகளும், இரண்டாம் வகை கொழுப்புகளும், எண்ணெய்களும், மூன்றாம் வகை முட்டையின் வெள்ளை போன்ற பொருட்கள், மூன்றாம் வகைப் பொருட்கள் அல்புமின்கள் (Albumins) எனப்பட்டது. 


           லத்தீன் மொழியில் அல்புமின் என்றால் முட்டை வெள்ளை. மாவுச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் இவற்றின் ‘மாலிக்யூல்கள்’, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் அணுக்களால் ஆனது. அல்புமின் மாலிக்யூல்கள் ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், என்னும் இவற்றோடு நைட்ரஜன், சல்பர், அணுக்களும் சேர்ந்தது. 

                 ஆல்பியுமின்களில் மற்ற கூட்டுப் பொருட்களில் இல்லாத வேறு கூறுகள் இருந்தன. 1838 ல் ஜரார்டஸ் ஜே மல்டர் (1802 - 1880) அவற்றை புரோட்டீன்கள் என்று அழைத்தார். 
                     லத்தீன் மொழியில் புரோட்டீன் என்றால் முதல் என்று அர்த்தம். உயிருள்ள பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் காலப் போக்கில் புரோட்டீன்களில் பல்வேறு கூறுகள் தெரிந்தன. அவற்றின் மாலிக்யூல்கள் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான அணுக்களால் ஆனது புரோட்டீன் மாலிக்யூல்களில் இருந்த அணுக்கள் பழைய மாதிரி சேர்ந்து அமையவில்லை. அவைகள் எளிய மாலிக்யூல்களால் ஆன நீளச் சங்கலிகளாக இருந்தன, அவற்றிற்கு அமினோ அமிலங்கள் என்று பெயர். 

                புரோட்டீனில் காணப்படும் அமினோ அமில மாலிக்யூல் சாதாரணமாக பத்து முதல் இருபத்தி இரண்டு அணுக்களால் ஆனது. அவை எல்லாவற்றிலும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உண்டு. சிலவற்றில் சல்பர் (sulphur) அணுக்களும் சேர்ந்திருக்கும் .

                  ஒவ்வொரு புரோட்டீன் மாலிக்யூலிலும் அநேகமாக 20 அமினோ அமிலங்கள் உண்டு. அவைகளை எந்தவிதமாகவும் வரிசைப்படுத்தி புரோட்டீன் சங்கிலி அமைக்கலாம். ஒவ்வொரு வித்தியாசமும் சிறிது வித்தியாசமான குணங்கள் உள்ள புரோட்டீன் மாலிக்யூலைத் தரும். இதனால் வேறு,வேறு அளவில்லாத புரோட்டீன் மாலிக்யூல்களை அமைக்கலாம்.


                     உதாரணமாக 1,2,3,4 என்று குறியிட்ட அமினோ அமிலங்களை எடுத்துக் கொள்வோம். இவற்றை 1-2-3-4, 1-2-4-3, 2-3-4-1, 3-4-2-1, என்று இப்படி 24 வகைகளில் அமைக்கலாம். 
                    20 அமினோ அமிலங்களை எடுத்துக் கொண்டால் அவற்றை 24 பில்லியன் – பில்லியன் (24,000,000,000,000,000,000) வகைக்கு மேல் அமைக்கலாம். 
                        20 அமினோ அமிலங்களில் டஜன் கணக்கில் புரோட்டீன் மாலிக்யூல்களை அமைத்தால், கிடைக்கும் எண்ணிக்கை பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதல் அமினோ அமிலங்களின் வரிசையில் நுண்ணிய வேறுபாடுகள் சாத்தியம். 
                    அதனால் தான் புரோட்டீன் மாலிக்யூல்கள் ஒரு டெய்ளிச் செடிக்கும், ஒரு திமிங்கலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துகின்றன. 
                    அமினோ அமிலம் ஏன் இப்படி இருக்கிறது ? 
             டெய்ளிச் செடியின் விதை ஏன் அதே புரோட்டீன்கள் உள்ள இன்னொரு டெய்ளிச் செடியை தருகிறது ? 
               திமிங்கலம் ஏன் அதே புரோட்டீன் கள் உள்ள இன்னொரு திமிங்கலத்தையே தருகிறது ? 
         போன்ற கேள்விகளுக்கு நீண்ட நாட்கள் கழித்தே விடை கிடைத்தது. 1869 ல் விடையின் ஆரம்பம் கிடைத்தது.

                 ஸ்விஸ் வேதியல் அறிஞர் ஜோஹான் F. மீஷர் (1844 - 1895) ஒரு செல்லின் நடுவில் இருக்கும் சிறுப் பொருளைக் கண்டறிந்தார். அது செல்லின் நியூகிளியஸ் (Nucleus) ஆகும். மீஷர் கண்டுபிடித்த பொருள் நீயூக்ளிக் அமிலம் (Nucleic Acid) எனப்பட்டது. நீயூக்ளிக் அமிலத்தின் மாலிக்யூல்கள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், அணுக்களோடு பாஸ்பரஸ் சேர்ந்திருந்தது. நீயூக்ளிக் அமிலங்கள், புரோட்டீன்கள் போல, சிறு மாலிக்யூல் சங்கிலிகளால் ஆனது. 

                 சிறு மாலிக்யூல்களின் தன்மை 1909 ல் ஃபீபஸ் A.T. லெவின் (Phoebus A.T. Levue 1869 - 1940) என்ற ரஷ்ய – அமெரிக்கா வேதியல் அறிஞரால் காணப்பட்டது. அந்த சிறு மாலிக்யூல்கள் நீயூக்ளியோடைட்ஸ் (Nucleotides) எனப்பட்டன. ஒன்றில் சுமார் 40 அணுக்கள் இருந்தன. எந்த நீயூக்ளிக் அமிலத்திலும் நான்கு வித்தியாசமான நீயூக்ளியோடைட்ஸ் உண்டு. ஆனால் நீயூக்ளிக் அமிலச் சங்கிலிகள் நீளமானவை. நான்கு என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு சிறு துணுக்கிலும் மொத்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமானது.

                    1944 ல் ஆஸ்வல்ட் T. அவெரி என்ற கனடிய விஞ்ஞானி (1877 - 1955) புரோட்டீன்களை விட நீயூக்ளிக் அமிலங்கள் முக்கியமானவை என்று காட்டினார். ஒரு நுண்ணுயிரை அதே மாதிரியான இன்னொரு நுண்ணுயிராக மாற்ற DNA என்ற நீயூக்ளிக் அமிலத்தை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி காட்டினார். புரோட்டீன்கள் இதைச் செய்ய முடியாது. அதுவரை விஞ்ஞானிகள் நீயூக்ளிக் அமிலத்தை அவ்வளவு கவனிக்கவில்லை.இதன் பின்னர் அவர்கள் நீயூக்ளிக் அமிலத்தை நன்றாக ஆராயத் தொடங்கினார்கள். 

                       புரோட்டீன் மாலிக்யூல்களும் அல்லது நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள் என்று வந்தால் ஏதாவது ஒரு உயிர் உருவம் அவற்றை உடனே தின்று விடும். அதனுடைய முடிவு அவ்வளவு தான். ஒரு வாழும் உயிராக ஆவதற்கு முன்பே அவை முடிந்து விடும்.

வாழ்க்கை தோன்றிய விதம்?????

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                           
                 பூமியின் வாயுமண்டலம் இப்படி, அப்படி இருந்தது, அதனால் சக்தி இப்படிச் செயல்பட்டது. உயிர் வாழ்வு உருவானது என்றெல்லாம் கூறுவதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சரிபார்ப்பது ?
         
                   கால இயந்திரம் இருந்தால் மூன்றரை பில்லியன் (ஆயிரம் கோடி) ஆண்டுகள் பின் சென்று பார்க்கலாம் ஹெரால்ட் சி.ஊரே (Harold C.urey 1893 - 1981) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், ஆதிகாலப் பூமியின் வேதியியல் பண்புகள், உயிர் வாழ்வின் தோற்றம் இவற்றில் நாட்டம் காட்டினார்.         
                            
                   ஆதிகாலப் பூமியில் முதல் உயிர்வாழ்வு துவங்கிய போது இருந்த சூழ்நிலையை (Conditions) பரிசோதனைச் சாலையில் உண்டாக்க முடியுமா என்று யோசித்தார். அது முடிந்தால் என்ன நடந்திருக்கும் என்று கண்டுபிடிக்கலாம். ஸ்டான்லி L.மில்லர் (1930 - 2007) ஊரே யின் மாணவர் 1952 ல் ஊரே அவரை ஒரு சோதனை செய்யச் சொன்னார். 
                        
                      மில்லர் சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் எந்த விதமான உயிரும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் ஆகிய வாயுக் கலவையை அதில் சேர்த்து ஆதிகாலப் பூமியின் சூழ்நிலையை உண்டாக்கினார். இந்தக் கலவையை (தண்ணீரும், வாயுக்களும்) தன்னுடைய உபகரணத்தில் சுற்ற வைத்தார். ஓரிடத்தில் அதில் மின்சாரம் பாய வைத்தார். மின்னலிலிருந்து வெளிப்படுவதைப்போன்ற சக்தியாக மின்சாரத்தை பயன்படுத்தினார்.ஒருவாரம் இந்தக் கருவி இப்படிச் செயல்பட்டது. வார முடிவில் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாகியிருந்தது. 

                 அப்போது அவர் கருவியைத் திறந்து உள்ளிருந்ததை கவனமாக ஆராய்ந்தார். உயிர்ப்பொருட்கள் அதில் இல்லை. ஆனால் அவர் முதலில் சோதனை ஆரம்பித்த போது இருந்ததை விட வேறு விதமான, வளர்ந்த மாலிக்யூல்கள் இருந்தன.

                    மீத்தேன் வாயுவின் ஆறில் ஒரு பங்கு நிறைய சிக்கலான மாலிக்யூல்கள் ஆகி இருந்தது. மின்சாரம் பாய்ந்த சக்தி மீத்தேன் வாயுவை மேல் நோக்கிச் செலுத்தியது, புரோட்டீனில் காணப்பெறும் இரண்டு எளிய அமினோ அமிலங்கள் இருந்தன. ஒரு சிறு குடுவையில், ஒரு வாரத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் உருவாக முடியுமானால், கடலில் ஆயிரம் கோடி வருஷங்களில் எவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் ? 
                மில்லரைத் தொடர்ந்து வேறு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். பிலிப் K. ஏபல்ஸன் (1913 - 2004) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், எளிய கூட்டுப் பொருள்களினால் பல விதமான கலவைகளைச் சோதித்தார். கலவை எதுவாக இருந்தாலும் சரி, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உள்ளவரை, சோதனையில் அமினோ அமிலங்கள் கிடைக்கும். 
                              
                   1959 ல் வில்ஹெல்ம் க்ராத், H. வான் வேஸென்ஹாஃப் என்ற இரண்டு ஜெர்மானிய வேதியியல் அறிஞர்கள் மின்சாரம் பாய்ச்சுவதற்கு பதிலாக அல்ட்ரா வயலட் கதிர்களை சக்தியாகப் பயன்படுத்தினார்கள். அப்போதும் அமினோ அமிலங்கள் உண்டாயின. 

        இன்னும் நிறைய அளவும், அதிக காலமும் கொண்டு வேதியியல் அறிஞர்கள் பரிசோதனைகளை நிகழ்த்தினால் இன்னும் சிக்கலான அணுக்கள் கிடைக்குமா ? 
                 ஆம். உருவான கூட்டுப் பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு புதிய பரிசோதனை செய்தனர். 1961 ல் ஹ்வான் ஓரோ என்ற ஸ்பானிஷ் அமெரிக்கன் வேதியியல் நிபுணர் ஹைட்ரஜன் சயனைடை ஒரு ஹைட்ரஜன் அணு + ஒரு கார்பன் + ஒரு நைட்ரஜன் ஆரம்பக் கலவையில் சேர்த்தார்.
மில்லரின் ஆரம்ப சோதனையில் ஹைட்ரஜன் சயனைடு உருவாகியிருந்தது. இப்போது இன்னும் அதிகமாக அமினோ அமிலங்கள் கிடைத்தன. சில அமினோ அமிலங்கள் இணைந்து கொண்டு சிறு சங்கிலிகள் ஆயின. ஓரோ ப்யூரைன்கள் என்ற மாலிக்யூலை அறிந்தார். ப்யூரைன்கள் நியூக்ளோடைடுகளின் ஒரு பகுதி, இவையே நியூக்ளிக் அமிலங்கள் ஆகின்றன. 

                 1962 ல் ஓரோ ஃபார்மல் டிஹைடை (ஒரு கார்பன் அணு + இரண்டு ஹைட்ரஜன் அணு + ஒரு ஆக்ஸிஜன் அணு) ஆரம்பக் கலவையில் சேர்த்தார். நியூக்ளோடைடின் பகுதியாக சர்க்கரை மாலிக்யூல்கள் கிட்டின. 

             1963 ல் இலங்கை அமெரிக்க வேதியியல் அறிஞர் ஸிரில் பொன்னம் பெருமா (1923 - 1994) ஏற்கெனவே சோதனைகளில் உருவான பல பொருட்களுடன் ஃபாஸ்பரஸ் சேர்ந்த கூட்டுப் பொருளைச் சேர்த்தார். முழுதாக நியூக்ளோடைடுகளும், சங்கிலி நியூக்ளோடைடுகளும் அமைப்பதில் வெற்றிகண்டார். 

                   ஸ்ட்னி.W.ஃபாக்ஸ் என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர் வேறு வழியில் ஆராய்ந்தார். 1958 ல் அமினோ அமிலங்களும் தொடங்கி, தண்ணீருக்குப் பதிலாக வெப்பத்தைப் பயன்படுத்தினார். அமினோ அமிலங்கள், புரோட்டீன் போன்ற மாலிக்யூல்களாக சங்கிலிக் கோர்வையுடன் உருவாயின. அவைகளை வெந்நீரில் கரைத்தபோது அவை சிறு செல் கோளங்களாக (உருண்டைகளாக) ஒட்டிக்கொண்டு நின்றன.

              மில்லரின் முதல் சோதனைக்குப் பிறகு செய்த எல்லாச் சோதனைகளும் ஏற்பட்ட மாற்றங்கள் உயிர்வாழ்வினை சுட்டிக் காட்டின, அப்போது உருவான வேதிப் பொருட்கள் உயிருள்ள பொருட்களில் இருப்பன போன்று இருந்தன.
                        பூமியின் உயிர்வாழ்வு தோன்றியது விந்தை அல்ல. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆரம்பிக்கும் போது தந்த வேதியியல் பொருட்களும் சக்தியும், உயிர் வாழ்வின் திசையிலேயே சோதனையை எடுத்துச் செல்லும் கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும் எந்தக் கிரகத்திலும் உயிர்வாழ்தல் இருக்கும் என்று நாம் சொல்லலாம். ஒருவேளை வேறு உலகத்தில் உயிர்களைக் காண நேரிடலாம் ! 

   நாம் தெரிந்துகொண்ட அல்லது செல்லகூடிய கோள்கள் எல்லாம் நம் பூமியிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உயிர் வாழ்வு இருக்க வாய்ப்பே இல்லை. சந்திரனில் காற்றும், தண்ணீரும் இல்லை. மெர்க்குரியும், வீனஸும் மிக அதிக உஷ்ணமான இடங்கள். மார்ஸிக்கு அப்பாலுள்ள கிரகங்கள் மிகவும் குளிர்ந்தவை அவற்றின் வேதியியல் பூமியை விட மிகவும் வேறுபட்டது. எல்லாவற்றிலும் மார்ஸ்(செவ்வாய்) உயிர்வாழ்வுக்கு ஏற்றது போல் தோன்றும் அங்கே காற்று இலேசானது, மிகக் கொஞ்சம் தண்ணீரும், மிக அதிகக் குளிரும் உள்ள கிரகம் ஒருவேளை எளிய உயிரினங்கள் அங்கு இருக்கலாம் அல்லது உயிர் வாழ்விற்குத் தேவையான வேதியியல் பொருட்கள், அமினோ அமிலங்கள் அங்கு இருக்கலாம்

            1976 ல் ராக்கெட்டால் செலுத்தப்பட்ட இரண்டு விண்கலங்கள் மார்ஸை அடைந்தன. அதன் பரப்பில் இறக்கி, மண்ணைச் சோதனை செய்தன. கார்பன் அணுக்கள் உள்ள மாலிக்யூல்களின் அறிகுறிகள் இல்லை அத்தகைய மாலிக்யூல்கள் இல்லாமல் நமது பூமியைப் போன்ற உயிர்வாழ்வு உண்டாக முடியாது.
மற்ற கோள்களைப் பற்றி நமக்கு சில விஷயம் தெரிய வேறு வழி உண்டு. வெளி வானிலிருந்து நம் பூமி மேல் விழும் விண்கற்கள். அநேகமாக விண்கற்கள் உலோகம் சம்பந்தப்பட்டோ, பாறையாகவோ உள்ளன. எப்போதாவது, அபூர்வமாக, கொஞ்சம் தண்ணீரும் கார்பன் கூட்டுப் பொருளும் உள்ள விண்கற்கள் வரும்.

               1969 ல் ஒரு விண்கல் ஆஸ்திரேலியாவில் விழுந்தது. நிறைய பவுண்டுகள் எடையுள்ள பாறைச் சிதறல்கள் எடுக்கப்பட்டன. அவைகளை பொன்னம் பெருமா உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். விண்கற்களில் இருந்த சோதனை இயற்கைப் பொருள் பதினெட்டு விதமான அமினோ அமிலங்களை கொண்டிருந்தது, அவற்றில் ஆறு அமினோ அமிலங்கள் உயிருள்ள பொருட்களின் புரோட்டீனில் வருவன. விண்கற்களில் உயிருள்ள பொருள் ஏதாவது இருந்தது என்று இதற்குப் பொருளல்ல அப்படி ஒன்றும் இல்லை, இந்த பொருட்கள் உயிர்வாழ்வின் துவக்கம் என்ற நிலைக்குப் போகும் வழியில் இருப்பன. வேதியியல் மாற்றங்கள் உயிர்வாழ்வின் ஆரம்பம் நோக்கிப் போதல், சோதனைகளில் மட்டுமல்ல. மனித ஊடுருவலோ அல்லது திசைகாட்டலோ இல்லாத விண்கற்களிலும் இது நடக்கிறது இன்னுமொரு இடத்தில் கூட இத்தகைய விளைவுகள் உண்டு. பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவே காணப்பெறும் மிகப் பெரிய தூசி, வாயு மேகங்கள் இடத்திலும் இந்த விளைவுகள் உண்டு.

             இத்தகைய தூசி, வாயு மேகங்கள் (சூரியபிரபஞ்சம் உருவாகக் காரணமானவை போன்றவை) அநேக ட்ரில்லியன் மைல்கள் தாண்டி உள்ளன. என்றாலும் அவைகளை அவைகள் அனுப்புகிற ரேடியோ அலைகள் மூலம் ஆராயலாம் ஒவ்வொரு பொருளும் ரேடியோ அலைகளை அனுப்புகிறது. ஒவ்வொரு வேறுவிதமான மாலிக்யூலும், வேறு வகையான ரேடியோ அலைகளை அனுப்பும். ஒவ்வொரு மாலிக்யூலுக்கும் அதனுடைய ரேடியோ “கைரேகை” உண்டு. 

                     1960 ல் பின்பகுதியில் மனிதர்கள் ‘ரேடியோ டெலஸ்கோப்புக்களை’ உருவாக்கி இத்தகைய மெல்லிய ரேடியோ அலைகளை சரியாக ஆராயும் உத்தியைக் கண்டார்கள்.

                     1968 ல் தண்ணீர், அம்மோனியா ஆகியவற்றின் ‘ரேடியோ அலை-கைரேகையைக் கண்டு பிடித்தார்கள் 1969 ல் முதன் முதலாய், கார்பன் உள்ள கூட்டுப் பொருள் – ஃபார்மால்டிஹைடு (Formaldehyde) கண்டு பிடிக்கப்பட்டது. 

                    1970 ல் நிறைய கூட்டுப் பொருட்கள், சிக்கல் நிறைந்து காணப்பட்டன. அவை எல்லாம் கார்பன் கலந்த பொருட்கள். அவற்றுள் சில, ஒன்றில் ஏழு அல்லது எட்டு அணுக்களுடன் இருந்தன.

                     ஃப்ரெட்ஹாயில் (1915 - ) என்ற ஆங்கில வானவியல் அறிஞர், அந்த மேகங்களில் சிறு அளவில் புரோட்டீன்களும், நியூக்ளிக் அமிலங்களும் இருக்கும் என்று கருதினார், அவைகள் நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிறியவை, ஆனால் உயிர்வாழ்தலைக் குறித்தன. ஒருவேளை அங்கு தான் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்குமா?. அங்கிருந்து தான் பூமிக்கு வந்திருக்குமா?  என்று சொல்லமுடியாது .

                  ஆனால் விஞ்ஞானிகள் வாழ்வு எங்கு/எப்படி ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளின் முதல் கட்டத்தில் இருக்கிறார்கள். எவ்வளவு காலங்கள் முன்னர் இது நடந்திருக்க வேண்டும், எவ்வளவு மெல்லிய தடயங்கள் உள்ளன என்பதை நினைக்கும் போது அவர்கள் எப்படி இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளனர் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
எதிர்க்காலத்தில் அவர்கள் இன்னும் நிறைய சாதிப்பார்கள்.