மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நித்திய கல்யாணி பற்றி தெரிந்துகொள்வோம்.
பொதுவாக இந்தச் செடி ஐந்து இதழ்களுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதை உண்பதில்லை. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தாவரமான நித்திய கல்யாணி எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையது.
அழகுத் தாவரமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. தற்போது இந்தச் செடி முழுவதும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக இருப்பதால் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவையாக உள்ளன. இதில் இருந்து செயல்திறன்மிக்க வேதிப்பொருள்களான வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் போன்ற உயிர் வேதிப்பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மேலும் ஆல்கலாய்டுகள், அஜ்மாலின், ரவ்பேசின், செர்பென்டைன், ரிசெர்பைன் போன்ற வேதிப்பொருள்களும் கிடைக்கிறது.
இந்த உயிர்வேதிப் பொருள்கள் மனநோய்களை குணமாக்கவும், ரத்த அழுத்தம், சிறுநீர்ச் சர்க்கரையை குறைக்கவும், அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி அதிக மருத்துவக் குணங்கள் கொண்ட நித்தியகல்யாணி செடியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செடி வளர்ந்த 6-வது, 9-வது மற்றும் 12-வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. 12-வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்களை எடுத்துப் பதப்படுத்தி வியாபாரத்துக்கு அனுப்புகின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா மற்றும் ஹங்கேரிக்கும், வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது. லாபம் தரும் நித்திய கல்யாணி செடியை தனியார் நிறுவனங்கள் விவசாயிகளை அணுகி பயிரிடுவதற்கான ஆலோசனைகளையும், உதவிகளை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக