புதன், 29 ஏப்ரல், 2015

முருங்கை

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.முருங்கை பற்றி தெரிந்துகொள்வோம்.
தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் 
முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு  இயற்கையின் அற்ப்புதம் தான்.  இது கடவுளின்  கொடை .


 இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் ,இலை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை .

இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய் எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகாதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசகு எண்ணெய்  ,இன்னும் என்னவோ உபயோகம் .
 

ஆரஞ்சை  போல்  7  மடங்கு வைட்டமின்  c  அடங்கியது .

பாலில் இருப்பதை போல்  4  மடங்கு சுண்ணாம்பு  சத்து அடங்கியது
 

காரட்டில் இருப்பதைப் போல் 4  மடங்கு வைட்டமின்  A  அடங்கியது
 

வாழைப் பழத்தைப் போல்  3  மடங்கு பொட்டாசியம்  அடங்கியது
 

தயிரில் இருப்பதை விட 2    மடங்கு புரோட்டின்  அடங்கியது
 

இரும்பு சத்து அபரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75  மடங்கு இரும்பு சத்து அதிகம்.

இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது  இது  200  நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.


Moringa oleifera, commonly referred to simply as "Moringa"

(Hindi: सहजन sahjan;
Tamil murungai', முருங்கை;
Kannada Nuggekai ನುಗ್ಗೆ ಕಾಯಿ; మునగకాయ
Telugu; Marathi Shevaga;
Muringakkaya in Malayalam

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.


இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .


இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.


விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி

                                               - அகத்தியர் குணபாடம்


வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.


முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.


முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
 இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .


இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.

.
இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .
காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட
வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .
சாப்பாட்டிற்கும் கவலையில்லை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக