புதன், 29 ஏப்ரல், 2015

பிரண்டை

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். பிரண்டை பற்றி அறிவோம்.
 
          பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது ஆண் இனம்.
                 ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது.  இது. ஒரு காயகல்ப்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

Tamil - Pirandai
English - Bone-setter
Telugu - Nalleru
Mala yalam - changalam paranda
Sanskrit - Astisringala
Hindi - Hadjora
Botanical Name - Cissus quadrangula


சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.  எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
 வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள்  குணமாகும்.


வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
 இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும . இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.


பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.


பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.  வச்சிரவல்லி.

தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.
தாவரக்குடும்பம் - :VITACEAE.
இது ஒரு சிறந்த கரு கலைப்பானாக நீண்ட காலம் பயன்பாட்ட்டில் இருந்து வந்துள்ளது .எனவே தான் மனதிற்கு பிடிக்காமல் போன மகனையோ ,மகளையோ
உன்னை பெற்றதற்கு வயிற்றில் பிரண்டை வைத்து கட்டி இருக்கலாம் என்கிற வசவு சொல் இன்றும் வழக்கில் இருக்கிறது .
 

அறிவிப்பு    இந்த மூலிகை பற்றிய விபரங்கள் அறிமுகமே .
உபயோகப்படுத்தும் போது இதில் வல்லுனரை கலந்து ஆலோசித்து செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக