புதன், 29 ஏப்ரல், 2015

மருதாணி என்னும் மருதோன்றி

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். மருதோன்றி பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.

இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, , மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil              Maruthonri
English          Henna
Sanskrit         Rakta garba
Malayalam    Mailanchi
Telugu          Goranti
Hindi            Mehandhi
Botanical Name         Lawsonia inermis


சுருக்கமாக இது ஒரு இயற்கை வண்ணம் தரும் மூலிகை , உடலை குளிரச்செய்யும் ,
வீக்கத்தை கட்டுப்படுத்தும் .,கல்லீரல் தொண்டை நோய் தணிப்பவை.  இதில் கீழ் கண்ட பொருள்கள் அடங்கி உள்ளதாக பத்தாய்வு செய்யப்பட்டுள்ளது .


Lawsone
2-hydroxy-I 4-naphthaquinone
Behenic, arachidic, stearic, palmitic, oleic அசிட்


இதன் முருத்துவ குணங்கள் மிக அதிகம் .வட இந்தியாவில் பல இடங்களிலும்
ராஜஸ்தான் பகுதியிலுள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைவிக்கப் படுகிறது .
பல ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது .


நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். அதனால்  நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் கீழ் கண்ட முறையில் பயன் படுத்தலாம்
மருதோன்றி இலை 6 கிராம் ,பூண்டுப் பல் , மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.


மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும்.

பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பேய் பூதம் என மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் மருதோன்றியின் விதையை நெருப்பிலிட்டு புகைக்க மேல் கண்ட பாதிப்புகள் மாறும் என்கிறார் அகத்தியர்.


சோணித தோடமெலாஞ் சொல்லாம லேகிவிடும்
பேணுவர்க்கி ரத்தமொரு பித்தம் போம் காணா
ஒருதோன்ற லென்னுமத னோதுமெழின் மாதே
மருதோன்றி வேரால் மறைத்து
                                (அகத்தியர் குணபாடம்)


மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம்  குறையும், வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு


கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
.
கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும். மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.


கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் நீங்கும்.. அழகுக்கூடும்…


மருதோன்றிக்கு இன்னும் பல மருத்துவத்தன்மைகளும் மாந்திரீகத் தன்மைகளும் இருக்கின்றன. அதனுடைய பூக்களில்  மூத்தவளும், காய்களில் ஸ்ரீதேவியும் இருப்பதாகச் சொல்வார்கள்.  காய்கள், பேய்களை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். பூக்களைத்
தலையணைக்கு அருகில் வைத்துக்கொண்டால் தூக்கம் அதிகம் வரும்.  மருதோன்றி இலைச் சாற்றால் வலம்புரி ஸ்வஸ்திகத்தை  வரைந்துகொள்வது ஒரு வழக்கம் உண்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக