மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிறியாநங்கை பற்றி கண்போம்.
வணக்கம்.சிறியாநங்கை பற்றி கண்போம்.
பாம்பை விரட்டும் சிறியாநங்கை
சிறியாநங்கை
பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது
நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே
பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது
பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata. அதிலும்
பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை,
முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா
நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா
நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே
சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை)
நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து
எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும்
வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும்
(இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை
இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி
இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான்
கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை
தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின்
வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது.
அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன்
செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல்
போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால்
சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும்.
இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா
போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
- சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
- தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும்.
- சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
பாம்பு , தேள் , பூரான், மனிதன் ,நாய் கடி விடம்
![]() |
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை
வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம்
கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது
உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் .
எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .
நாய்க்கடி
![]() |
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம்
சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும்
.(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும்
. இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி
மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .
சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த
இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் /
தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .
வண்டுகடி
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.
செய்யான் விடம்
தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.
பூரான்
![]() |
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விடம் முறியும் .
விரியன் பாம்பு கடித்தால்
![]() |
இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாகபொன்னிறமாக
நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம்
கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து
வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும்
.
நல்ல பாம்பு கடித்தால்
நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .
தேள் கடித்தால்
![]() |
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .
எலிக்கடிகள்
![]() |
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .
மனிதன் கடித்தால்
![]() |
சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக