புதன், 29 ஏப்ரல், 2015

அப்பக்கோவை கீரை

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.அப்பக்கோவை கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.
அப்பக்கோவை கீரை கொடிவகையை சார்ந்தது. அறியகோவை எனவும் அழைக்கப்படும் இக்கீரை ஈரப்ப்பசையுள்ள இடங்களில் செழித்து வளரும். வேலிகளில் படர்ந்து வளர்ந்திருக்கக் காணலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய மஞ்சள் நிறமானவை.
அப்பக்கோவையில் கல்சியம், பொஸ்பரசு, இரும்புச்சத்து, விட்டமின் C, விட்டமின் B ஆகியவை உள்ளன.
கோவை கீரைக்கு உரிய மருத்துவ குணங்கள் அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி இருமலை ஆற்றும் சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு சளி இருமல் இருப்பின் அப்பகோவை சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றிக் கொடுப்பார்கள். இயற்கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் அப்பகோவை கீரை ஒரு பயனுள்ள கீரை.
இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், கிழங்கு அனைத்தும் மருத்துவப்பயன் கொண்டவை. மலர்கள் வெள்ளையாகவும் காய்கள் நீண்ட முட்டை வடிவ வரியுள்ளவையாகவும் பழங்கள் செந்நிறமாகவும் இருக்கும். வேர் கிழங்காக வளரும்
இரத்தம் சுத்தமடைய காற்று,நீர் இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவுகளாலும் (fast food) உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது.
மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 கரண்டி அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
கண்நோய் குணமாக கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் சூடு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.
கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
சர்க்கரை நோயை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது
கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம். முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.
இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக்குழு மருத்துவர்கள் கோவைக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒருகிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி, கோவைக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம்.
இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.
கோவைப்பழம்-thamil.co.uk
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்க கூடாது பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.
இதர மருத்துவ பயன்கள்
கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தினமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்றுவேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
இயற்கை வாய்ப்புண் டானிக்
கோவைக்காய் , கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.
இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய் 
கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.
இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு கஷாயம்,  மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்

அஸ்வகந்தா

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரிந்துகொள்வோம்.

அஸ்வகந்தா.
1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.
2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.
3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.
4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.
5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20
6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.
7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.
8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.
‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

கொல்லிமலை

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். கொல்லிமலை பற்றி தெரிந்துகொள்வோம்.
 அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்குத்தான மலைப்பாதை - 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (MINI-BUS) செல்கிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் உள. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் வட்டத்தில்அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது

தல வரலாறு

* இன்று மக்கள் வழக்கில் "கொல்லிமலை" என்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை.

* 'வல்வில்ஓரி' என்னும் மன்னன் ஆண்ட பகுதி.

* காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

* அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.

* இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

* இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

* இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

* இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

* கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

சிறப்புக்கள்

* இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

* பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது 'அறப்பளீசுவரர்' ஆலயம் உள்ளது.

* இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

* நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயருமுண்டு.

* ஊர் - பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.

* அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும்.

* கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.

* செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.

* தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.

* மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

* உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.

* கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.

* இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

சிறுபூனைக்காலி

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.சிறுபூனைக்காலி மருத்துவக்கொடி பற்றி தெரிந்துகொள்வோம்.

 சிறு பூனைக்காலி
இது கொடியாகும். பூனையின் கால் தடம் போன்ற இலையை உடையதால் இப் பெயர்; வயிற்றுப் போக்கிற்கும் செரிமானத்திற்கும் தமிழ்ச் சித்தமருத்துவர்கள் இதனை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் ;பழம் மஞ்சள் நிறம் உடையது,உண்ணக் கூடியது; அதனைச் சுற்றிலும் ஒரு கூண்டு போலப் பாதுகாப்பு இருக்கிறது;நீரில்லா நிலத்திலும் இது மண்டி வளர்கிறது. பழத்தை உண்ணும் பறவைகளால் இக் கொடி எளிதில் பரவுகிறது. தென் அமெரிக்காவின் வட பகுதியும் மேற்கிந்தியத் தீவுகளும் இக் கொடியின் பிறப்பிடம் என்கின்றனர்.
சிறுபூனைக்காலிக் கொடி , காய், பழம், நெற்று ஆகியவற்றுடன்!

சிறியாநங்கை மூலிகைச்செடி

மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.சிறியாநங்கை பற்றி கண்போம்.

பாம்பை விரட்டும் சிறியாநங்கை

சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata. அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

  • சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
  • தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு   சிறியா நங்கையை  சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும்.
  • சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.





பாம்பு , தேள் , பூரான், மனிதன் ,நாய் கடி விடம் 


பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி


நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .

சீத மண்டலி

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .

வண்டுகடி 

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.

செய்யான் விடம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.

பூரான் 


இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விடம் முறியும் .

விரியன் பாம்பு கடித்தால் 


இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாகபொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .

நல்ல பாம்பு கடித்தால் 

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .

தேள் கடித்தால் 


தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .

எலிக்கடிகள்


அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .

மனிதன் கடித்தால் 


சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் .

பாம்பை வீட்டில் நெருங்கவிடாத மூலிகைகள்

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். பாம்பை வீட்டில் அண்டவிடாத மருத்துவச்செடிகள் பற்றி காண்போம்.

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா . . . . அன்றான ஆகாசகருடன் மூலி அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
– சித்தர் பாடல்.
                 ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாசகருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர் த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புக ளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றித்தெளித்துவிட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

கண்வலிக் கிழங்கு

மரியாதைக்குரியவர்களே,      
                                வணக்கம்.கண்வலிக்கிழங்கு பற்றி தெரிந்துகொள்வோம்.

1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு.
2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA.
3) தாவரக்குடும்பம் -: LLIACEAE.
4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை.
5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன.
6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)
7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறிது வரட்சியைத் தாங்கும். வேலி ஓரங்களில்நன்றாக வளரும். இதன் பிறப்பிடம் இந்தியா. மற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தோசீனா, மடகாஸ்கர், இலங்கை, அமரிக்கா போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது. மருந்துப்பயன் கருதி வியாபார நோக்குடன் இந்தியாவில் சுமார் 2000 ஹெக்டரில் சாகுபடியாகிறது. தமிழ் நாட்டில் சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் தற்சமயம் பரவலாகப் பயிரிடுகின்றனர். சுமார் 1000 ஹெக்டர்கள்.பொதுவாக இதைக் கலப்பைக் கிழங்கு என அழைப்பர்கள்.இதன் கிழங்கு 'V' வடிவில் காணப்படும். கிழங்கு நட்ட 180 நாட்களில் பலன் தர ஆரம்பிக்கிறது. தமிழ் நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் (ஆடிப்பட்டம்) நடுவார்கள். இது கொடிவகையைச் சார்ந்தது ஆகும். இது பற்றி வளர்வதற்கு ஊன்றுகோல் தேவை. மூங்கில் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக்கொண்டு ஒரு மீட்டர் அகலத்திற்கு 2 மீட்டர் உயரத்திற்கு பந்தல் அமைத்து அதன் மேல் கொடியை படரவிடவேண்டும். அல்லது காய்ந்த வலாரி மார் பயன்படுத்தலாம். நட்ட 30, 60, மற்றும் 90 நாட்களில் களை எடுத்தல் சிறந்தது. முதலில் நட்ட பின்பு நீர் பாச்ச வேண்டும், பின் 20 - 25 நாட்கள் இடைவெளியில் பாச்சினால் போதுமானது. ஆனால் சராசரி மழையளவு 70 செ.மீ. இருந்தால் போதுமானது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் கிழங்கு ஒவ்வொன்றும் சுமார் 100 கிராம் வரை இருக்கும். கோடை காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை பெற்று மழைக் காலங்களில் மட்டுமே கொடிகள் துளிர்த்து பூத்துக் காய்க்கும். இதன் பூ பளிச்சென்று ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பூக்களைக்கொண்ட கொடியாகும். விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் கருகிவிடும். இத்தருணத்தில் காய்களைப்பறிக்க வேண்டும். காய்கள் மதிர்ச்சி பெற்ற பின் பாசனம்அவசியமில்லை.

ஒரு கொடியில் சுமார் 150 பூக்கள் வரை பூக்கும். பூக்கள் விரிகின்ற சமயம் தன் மகரந்தச் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாக்க, பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில் அரையடி நீளமுள்ள மெல்லிய குச்சி நுனியில் சிறிது பஞ்சைக் கட்டிக் கொண்டு பூக்களில் வெளிப்படும். மகரந்தத்தைப் பஞ்சால் தொடும் போது மகரந்தத்தூள் பஞ்சின் மீது ஒட்டிக் கொள்ளும், இதனைக் கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தலாம். இதைக் காலை 8 - 11 மணிவரை செய்வதால் உற்பத்தி பெருகும். நான்கு மாதத்தில் பூத்துக் கொடி காய்ந்து விடும்.அப்போது காய்களை அறுவடை செய்ய வேண்டும். செடி ஒன்றிக்கு 100 கிராம் விதை மற்றும் ஒரு கிலோ கிழங்கு வீதம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ கிடைக்கும்.காய்களைப் 10 -15 நாட்களுக்கு நிழலில் உலர்த்தி விற்பனைக்கு அனுப்பலாம். விதைகளைக் காற்றுப் புகாதவாறு பைகளில் சேமித்து வைப்பது நல்லது. விதைகள்ஒரு கிலோ ரூ.500-00 க்கு மேல் 1000 வரை விலை போகும்.இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். இதன் விதைமற்றும் கிளங்குகளின் வாயிலாகப் பயிர் செய்யலாம்.எனினும் கிழங்குகள் மூலமே வணிக ரீதியில் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.
8) பயன் படும் பாகம் - விதைகள் கிழங்குகள் ஆகியவை.
9) மருத்துவப் பயன்கள் - வாதம், மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து.பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும்டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன் படுகிறது.
சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிகஅளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள்மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டுபிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்துப் படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக யூரிக் அமிலம்மூட்டுக்களில் தங்குவதால் இந்த 'கௌட்' வருவதாகவும்,இந்த மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால்தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் வட்டத்தினை இதுமுறித்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.
கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும், இன்னும் தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் என்க.

உபயோகிக்கும் முறை -: இந்தக் கிழங்கை 7 வித நஞ்சுபதார்த்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது பாம்புக்கடி, தேள்கொட்டு, தோல் சம்பந்தமான வற்றிக்குச் சிறந்தது.

உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமையத்தில் 3 நாள் வரையில் ஊறப்போட்டு மெல்லிய வில்லைகளாகஅரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்யஅதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில்ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். நினைத்தவாறு குணம் ஏற்பட வில்லையென்றால் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும்.

இந்தக் கிழங்கை நன்றாய் அரைத்து ஒரு மெல்லிய சீலையில் தளர்ச்சியாக முடிச்சுக்கட்டி ஒரு மட்பாண்டத்தில் குளிர்ந்த சலத்தை வைத்துக் கொண்டு அதனில் முடிச்சை உள்ளே விட்டுப் பிசைந்து பிசைந்து சலத்தில் கலக்கி வர மாவைப் போன்ற சத்து வெளியாகும். முடிச்சை எடுத்து விட்டுச் சிறிது நேரம் சலத்தைத் தெளிய வைத்து கலங்காமல் தெளிவு நீரை வடித்து விட்டு மீண்டும் சிறிது சலம்விட்டுக் கலக்கி முன் போல் தெளியவைத்து வடிக்கவும் இப்படி 7 முறை செய்து உலர்த்தி அரைத்துச் சீசாவில் பத்திரப்படுத்தவும். இதனை தேகத்தின் சுபாவத்திற்கு ஏற்றவாறு, 1 அல்லது 2 பயனளவு ரோகங்களுக் குரிய அனுபானத்தில் கொடுத்துவரக் குஷ்டம், வயிற்றுவலி,சன்னி, சுரம், வாதகப சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இந்த பிரோகத்தில் சரிவரக் குணம் ஏற்படா விடின் சிறிது மருந்தை அதிகப் படுத்திக கொள்ளவும்.ஒரு சமயம் கொடுத்த அளவில் ஏதேனும் துர்குணம் செய்திருப்பதாக உணரின் கால தாமதம் செய்யாமல் மிளகு கியாழத்தைக் கொடுத்து மருந்தின் வீறை முறித்துவிட வேண்டும்.

பிரசவ வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புழ், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் சலம் கொண்டு சுத்தப்படுத்தவும். நஞ்சுக்கொடிக்காகச் சிகிச்சை செய்யும் போது கருஞ்சீரகத்தையும், திப்பிலியையும், சமனெடையாகச் சலம் விட்டு அரைத்துசிறு சுண்டைக்காய் பிரமாணம் வைன் சாராயத்தில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சாலச்சிறந்தது.

இந்தக் கிழங்குடன் கருஞ்சீரகம், கார்போகஅரிசி, காட்டுச்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் முதலியவற்றைச் சமனெடை சிறிய அளவாகசலம் விட்டு நெகிழ அரைத்துச் சொறி, சிரங்கு, ஊறல்,படை, முதலியவற்றிக்குத் தேய்த்து நீராடிவரக் குணமாகும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும்.

பிரம்மந்தண்டு

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். பிரம்மந்தண்டு பற்றி அறிந்துகொள்வோம்.
         1. மூலிகையின் பெயர் -: பிரமந்தண்டு.
2. தாவரப் பெயர் -: ARGEMONE MEXICANA.
3. தாவரக்குடும்பம் -: PAPAVERACEAE.
4. வேறு பெயர் -: குறுக்குச்செடி, மற்றும் குயோட்டிப் பூண்டு.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பால், வேர், விதை மற்றும் பூக்கள்.
6. வளரியல்பு -: இது தமிழகமெங்கும் தரிசு நிலங்களில், ஆற்றங்கரைகளில், சாலையோரங்களில் தானே வளரும் சிறு செடி. சுமார் 2-3 அடி உயரம் வரை வளரக்கூடியது. காம்பில்லாமல் பல மடல்களான உடைந்த கூறிய முட்களுள்ளிலைகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும், காய்களுக்குள் கடுகு போன்ற விதைகளையும் உடைய சிறு செடி. நேராக வளரக்கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிறப் பூச்சு (சாம்பல்) காணப்படும் செடி.
7. மருத்துவப்பயன்கள் -: இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும்.

இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விடம் இறங்கும்.

சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.

இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால்,கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.

பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.

இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும், செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.

இதன் சாம்பல் பொடி 1-2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும், இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.

50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல், வலி, சிவப்பு ஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன் படுத்த குணமாகும்.

இச் சாம்பல் பொடியை 2 கிராம் அளவு பசு வெண்ணெயுடன் மத்தித்து காலை, மாலை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும். புளி, புகை, போகம், புலால் நீக்க வேண்டும்.

இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, பாலை தேனில் கொள்ள க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.

இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மி.லி. வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக் குடல்புழு, கீரிப் பூச்சிகள் வெளியேறும்.

இதன் விதையைப் பொடித்து இலையில் சுருட்டிப் பீடி புகைப்பது போல் புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற்சொத்தை, பற்புழு ஆகியவை தீரும்.

50 கிராம் வேரை 200 மி.லி. நீருல் நன்றாகக் கொதிக்க வைத்து, வடித்து குடிநீராகக் குடித்து வர காச நோய், மேக நோய் குணமடையும். ‘ மூலத்தில் பிரமந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குழிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே... பேய் ஓடும்’ இது பாட்டு. இதன் வடபக்க வேரை வழிபாடு செய்து எடுத்து தாயத்தில் வைத்துக் கட்ட பேய், ஓடும்.

வாதநாராயணன்

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். வாத நாராயணன் மரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
. தாவரப் பெயர் -: DELONIX ELATA.
. தாவரக்குடும்பம் -: CAESAL PINIOIDEAE.
. வேறு பெயர்கள் -: வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை வாதமடக்கி எனவும் ஆங்கிலத்தில் TIGER BEAM, WHITE GULMOHUR என்றும் அழைப்பர்..

 பயன் தரும் பாகங்கள் -: இலை, பட்டை, வேர், சேகு மரம் ஆகியவை.
 வளரியல்பு -: வாதநாராயணன் தாயகம் காங்கோ, எகிப்து, கென்யா, சூடன், உகண்டா, எத்தோபியா, போன்ற நாடுகள். பின் இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகளிக்குப் பரவியது. மரவகையைச் சேர்ந்தது. செம்மண்ணில் நன்கு வளரும். ஆற்றங்கறைகளில் அதிகம் காணப்படும். இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.

 மருத்துவப் பயன்கள் -: வாதயாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும். பல ஆண்டுகளான சேகு மரத்தை தண்ணீரில் ஊர வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.

இதன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.

இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.

சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.

மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.

இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தியிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.

இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.

இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.

வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.

இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” -------குருமுனி.

வெள்ளறுகு

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். வெள்ளறுகு பற்றி தெரிந்துகொள்வோம்.


 

வெள்ளறுகு.

மூலிகையின் பெயர் –: வெள்ளறுகு.

தாவரவியல் பெயர் -: ENICOSTEMMA LITTORALE.

;தாவரக்குடும்பம் -: .GENTIANACEAE.

பயன்படும் பாகங்கள் -: செடி முழுதும்.

வளரியல்பு -: வெள்ளறுகு கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களைக் கொண்ட சிறு செடி.இது சுமார் 5 – 30 செ.மீ.உயரம் வளரக்கூட்டயது. இதன் இலைகள்  15 செ.மீ.நீளத்திலும், 5 செ.மீ.அகலத்திலும் இருக்கும்.இதன் இலைகள் சாம்பல் நிறமாக தும்பை இலை போல் வளைந்து சுருண்டு இருக்கும் .பூக்கள் பால் வெள்ளை நிறமாக இருக்கும். கணுக்களில் பூக்கள் கதிர் போல் பூக்ககும்.இதன் தண்டுகள் சாம்பல் பூசினால் போல் இருக்கும்..இந்தச் செடி கசப்புச் சுவையுடையது. இது தென் அமரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவிற்று. இது தமிழக
மெங்கும் வளர்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள் –: வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும் செயலாக உடையது .இது காய்ச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், நீரிழிவு மற்றும் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா, பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது..

வெள்ளறுகு செடியை வேருடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து இருபது மி.லி.. முதல் முப்பது மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்து கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக் கட்டியும் வர, இரண்டொருதரம் வாந்தி அல்லது பேதியாகும்.மீண்டும் ஒரு முறை கொடுக்க நச்சு இறங்கும்.புளி, உப்பு நீக்க வேண்டும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து காலையில் சொறி, தினவு தவளைச சொறி சிரங்கு, மேகத்தடிப்பு, ஊறல் முதலியவை உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய் பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.

வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீல்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகு பூண்டை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.

பெண்களுக்கு மிகுந்த தொல்லை தருகின்ற நாட்பட்ட வெள்ளைப்படுதல்
நோய்க்கு வெள்ளறுகு செடியுடன் சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து
அரைத்து பாலில் கொடுக்கலாம்.  தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன் சேர்த்து அரைத்து குடநீரிட்டு வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் கூட்டி உடல் சூடாக இருக்கும் போது அருந்து வர சூட்டைத் தணிக்கும். வெள்ளறுகு முழுச்செடியையும்  சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படும்.