மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி
வணக்கம்.தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி
களை கட்டிய சிறுதானிய உணவுத் திருவிழா- கலப்பட உணவு வகைகளை களையெடுக்க உறுதி
- மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை
- கேழ்வரகு லட்டு
- குதிரைவாலி பிரியாணி
நாகரிகம் என்கிற பெயரில் உணவு வகைகளில், செயற்கை மற்றும் கலப் படங்கள் கலந்து துரித உணவு கலாச்சாரம் பெருகிவரும் கால கட்டம் இது.
இத்தகைய சூழலில் மக்களுக்கு புரதச் சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை
சமைத்துக் காட்டி விருந்து படைத்தது விருதுநகரில் நடைபெற்ற சிறுதானிய
உணவுத் திருவிழா.
இயற்கை நலவாழ்வுச் சங்கம், விஎம்.ஞானசபாபதி - சரஸ்வதி சாரிட்டீஸ் டிரஸ்ட்
இணைந்து நடத்திய சிறுதானிய உணவுத் திருவிழா விருதுநகரில் நடை பெற்றது.
சிவகாசி இயற்கை வேளாண்மை நம்மாழ்வார் நல வாழ்வு மைய உணவியல் வல்லுநர்
மாறன்ஜீ மற்றும் ஆ.சா.ரமேஷ், அமிர்தவள்ளி குழுவினர் கலந்துகொண்டு
வழக்கத்தில் நாம் மறந்த சிறுதானிய உணவு வகைகளை சமைத்துக் காட்டினர்.
விழிப்புணர்வுத் திருவிழா
ஊட்டச்சத்துகளும் மருத்துவ நற்குணங்களும் நிறைந்த சிறுதானி யங்களான கம்பு,
கேழ்வரகு, சோளம், தினை, சாமை, கொள்ளு, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவை
குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதுபோன்ற
சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் சுவைமிகுந்த உணவுப் பொருள்களை மீட்டு
ருவாக்கம் செய்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் இந்தத்
திருவிழாவின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித் தனர்.
விழாவில் தினைப் பாயாசம், சாமை அரிசி, தயிர் சாதம், வரகரிசி புலாவ், கம்பு
லட்டு, குதிரைவாலி பிரியாணி, மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை, கேழ்வரகுப்
புட்டு, இரும்புச் சோளம் கஞ்சி, பனிவரகு, சாம்பார் சாதம் போன்றவை சமைக்
கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இச்சிறுதானிய உணவுகளில் சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய மாவுச் சத்துக்கள்
இல்லாததால், அந்த நோய் வராமல் தடுப்ப தற்கும், சர்க்கரை நோயாளிகளுக் கும்
சத்து நிறைந்த அவை சிறந்த உணவாக இருக்கும். சிறுதானியங்கள் உடல் ஆரோக்
கியத்தைப் பேண உதவுவதாகவும், நோய் வந்தால் விரைவாக குணப்படுத்த
உதவுவதாகவும் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் நெல் அரிசியைப் போலவே சிறுதானிய அரிசி, தினை, சாமை, வரகு,
குதிரைவாலி ஆகியவற்றைப் பயன்படுத்தி சாப்பாடு, தயிர்சாதம், நெய்சாதம்,
கூட்டாஞ்சோறு, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை, பொங்கல், புட்டு போன்றவை
சமைக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அதோடு, வரகு கறிவேப்பிலை சோறு, சாமை கூட்டாஞ்சோறு, கேழ்வரகு இட்லி,
சுண்ணாம்புச் சத்து நிறைந்த கேழ்வரகு அல்வா, சாமை கார புட்டு, சாமை தட்டை,
வரகு முறுக்கு, குறையாத நார்ச்சத்துக்கு வரகு அதிரசம், குழந்தைகள் ருசித்து
உண்ணும் வகையில் கொள்ளு லட்டு தயாரிப்பு, கொழுப்பைக் குறைக்கும்
கொள்ளுச்சாறு, சாமை கிச்சடி, உடலுக்கு வலுகொடுக்கும் குதிரைவாலி கேசரி,
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சாமை மிளகுப் பொங்கல், தினை மாவு பாயாசம்,
சுவை நிறைந்த வரகுப் பொங்கல், ஜீரணசக்தியை அதிகரிக்கும் சாமை மசாலா
முறுக்கு, குறுந்தானிய கட்லெட், குளிர்ச்சியூட்டும் கம்பு பணியாரம்
தயாரிக்கும் வகைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
உணவுக் கட்டுப்பாடு
மேலும், கனிகளை முதல் உணவாகவும், அடுத்து காய்கறி களையும், பிறகு தானிய வகை
களையும் உண்பது நல்லது என்றும், ஒருவேளைக்கு ஒருவகை உணவு மட்டும் உண்பதே
மிகச்சிறந்தது என்றும் வந்திருந்தவர்களுக்கு அவர் கள் அறிவுறுத்தினர்.
அத்துடன், மனச்சிக்கலுக்குக் காரணம் மலச் சிக்கலே, மூட்டுவலிக்கு புற்றுமண்
பட்டி போடுவோம், தினசரி இருமுறை குளிப்போம், மழைநீரை குடிநீர் ஆக்குவோம்,
மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மாடிவீட்டுத் தோட்டம் அமைப்போம், காலை
காபி அல்சரின் தொடக்கம், கனிகளை உண்க- பிணிகளை நீக்குக என்ற ஆரோக்கியமான
வாழ்வுக்கான பொன்மொழிகளின் அர்த்தங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக