புதன், 16 அக்டோபர், 2013

விழிப்புணர்வு அவசியம்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
     தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு    வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                இன்றைய இளைய சமுதாயம் (தங்களுடைய வாரிசாகவும் இருக்கலாம்).புகை,மது,போதை பொருட்களுக்கு மற்றும் கலாச்சார சீரழிவுக்கு ஆளாகி,அடிமையாகி,சிக்குண்டு,சீரழிகிறார்கள்.இவ்வாறு சிக்குண்டு சீரழியும் , தடுமாறும் ,தடமாறும் இளையோர்களுக்கு,நமது பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகம்,தன்னொழுக்கம்,தனிமனித சுகாதாரம்,பெரியோரை மதித்தல்,பெரியோர் சொல் கேட்டல் அதன்வழி நடத்தல்,உடல் நலம் பேணல்,சுகாதாரம் பேணல்,தன் அறிவை பெருக்குதல்,தன்னம்பிக்கையை வளர்த்தல்,வேலை மற்றும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல்,வழிகாட்டுதல்,தனிமனித வருமானம் பெருக்குதல்,பொருளாதாரம் காத்தல்,சமுதாய மதிப்பை பெறுதல் மற்றும் காத்தல்,சட்டவிரோத செயல்களிலிருந்து அறவே விலக நடவடிக்கை எடுத்தல்.போன்ற செயல்களை நமது அத்தியாவசிய கடமையாக கருதி எடுத்தாளவேண்டும்.இல்லையேல் வருங்காலத்தில் மனித சமுதாயமே இல்லாமல் போகும்? இது எச்சரிக்கைங்க!.

நுண்ணறிவு அமைப்புக்கொள்கை

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.
                                    தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நுண்ணறிவுக்கொள்கை அதாவது முப்பரிமாணக்கொள்கை என்பது பற்றி இங்கு நாம் அறிந்து கொள்வோம்.
   
                   முப்பரிமாணம் என்பது-பொருள், செயல்,விளைவு ஆகும்.இவற்றில்       
         பொருள் என்பது உருவம்,குறியீடு,சொற்பொருள்,நடத்தை என நான்காகும்.அடுத்து 
      செயல் என்பது அறிதல் அல்லது உணர்தல்,நினைவு கூர்தல்,குவிசிந்தனை, விரிசிந்தனை,மதிப்பீடு, என ஐந்தாகும்.அடுத்து 
     விளைவு என்பது அலகுகள்,வகைகள்,தொடர்புகள்,ஒருங்கமைப்புகள்,மாற்றியமைப்புகள்,
அனுமானங்கள் என ஆறாகும்.
              ஆக நுண்ணறிவு என்பது பொருள் ,செயல்,விளைவு என 4X5X6=120 மனத்திறன்கள் ஆகும்.
              இந்த மாதிரியை அமைத்தவர் J.P.Guilford ஆவார்.

          IQ-மனதின்  வயது(Mental Age)/ காலத்தின் வயது(Chronological Age) =100 ஆகும்.உதாரணமாக 12/10X100=120 ஆகும்.இதுவே நுண்ணறிவு ஈவு Intelligence Quotient ஆகும்.இதனை 1916-ல் William Sterm என்பவர் கண்டுபிடித்தார்.

அறிவு என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
        தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
   அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் கிடைக்கப்பெறுபவைகளாகும்.
அறிவு என்பது ஒரு மனிதனுக்கு பிறந்த நேரம் முதல் இறப்பு வரை கிடைக்கக்கூடியவையாகவே உள்ளன.ஆனால் 
அதனை படித்தவர்களுக்கு மட்டுமே இருப்பதாகவும்,அதனால் அவர்களே அறிஞர்கள் என்றும் பொதுவான தோற்றப்பாடு ஒன்று உண்டு.
அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது.
அறிவு என்பது விலங்குகள் உட்பட அனைத்து உயிரினத்திற்கும்,எல்லோருக்கும் உண்டு.
அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு,பட்டறிவு,கல்வியறிவு,தொழில்சார் அறிவு,துறைசார் அறிவு,அனுபவறிவு,பொதுஅறிவு,ஆழ்மனப்பதிவறிவு என பலவகைகளாக பிரிக்கலாம்.

திங்கள், 14 அக்டோபர், 2013

பெற்றோர்களின் கடமை

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு .வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
             பெற்றோர்களே,உங்களது சிந்தனைக்கு சில தகவல்கள்.
   பெற்றோர்கள் வழிகாட்டுதலில் அக்கறை கொண்டவர்களாக மாற வேண்டும்.மாணவர்கள்,நம் குழந்தைகள்,தனக்கு தெரியாத ஒன்றிலிருந்து எதையும் தேர்ந்தெடுக்க முடியாது.
             பொதுவாக தற்போது என்னென்ன தொழில்கள் உள்ளன?அதில் உபதொழில்கள் என்னென்ன உள்ளன?அதற்கு தேவையான கல்வித்தகுதி என்ன?பயிற்சி என்ன?தகுதி என்ன?இவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது?
                     இது போன்ற தகவல்களை சேகரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.வேகமான அறிவியல்,தொழில்நுட்ப மாற்றங்களால் நாட்டின் சமுதாய மற்றும் பொருளாதார வடிவங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன.
இம்மாற்றங்களினால் பல்வேறான திறமைகள்,ஆற்றல்கள் உள்ள பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.
                      ஆனால் தற்போது வேலைவாய்ப்புகளுக்கும் தனி மனிதனுடைய திறமைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டு வருகின்றன.எனவே,நடைமுறைப்பயன்பாட்டிற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்தகவல்கள் அவசியம் அறிந்து தம் குழந்தைகளுக்கு,மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.வகுப்பறை கலந்துரையாடல், தொழில் கலந்துரையாடல்,தொழில்மாநாடு,தொழில் கண்காட்சி,தொழில் தகவல்கள் பற்றிய சிறுபடக்காட்சி போன்றவற்றிற்கு கலந்துகொள்ள போதுமான ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். 
  வழிகாட்டல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் முடிக்கக்கூடிய எல்லைப்பரப்பு இல்லைங்க.தனியாளின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய செயல்முறையாகும்.
  பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் இருக்கக்கூடியவர்கள்.சில நேரங்களில் அறிவுரை கூறுபவர்,உடலியல் நிபுணர்,உளவியல் நிபுணர்,மனவியல் நிபுணர்,பாடத்திட்ட வல்லுனர், தொழில் வழிகாட்டுபவர்,போன்ற சிறப்பு நிபுணர்களும் தேவைப்படுகின்றனர்.
  இன்றைய உலகம் தற்போது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.எனவே,இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி,தொழில் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
         கல்வி மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவை.தொழில் அமைப்புகள்,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உபயோகங்கள் ,நாட்டின் பொருளாதார அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன.
               நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் எது தனக்கு பொருத்தமானது? என்று அறிந்து தேர்ந்தெடுக்க இன்றைய இளைய சமூகத்தினர் தடுமாறுகின்றனர்.
                வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.ஆனால் வேலைகளை தவறான வழியில் தேர்ந்தெடுக்கப்படுவதால் மனித வளம் வீண்டிக்கப்படுவதுடன் இளைய சமுதாயமும் வாழ்க்கையின்மீது வெறுப்படைந்து தடம் மாறி! தம் வாழ்க்கையை பாழ்படுத்தும் சூழலையும் உருவாக்கிக்கொள்கின்றனர்.போதை பொருட்கள் போன்ற தீங்குகளுக்கு ஆளாகின்றனர்.
      என,
சமுதாய நலனில் அக்கறை கொண்ட,
உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.C,
தாளவாடி,
ஈரோடு மாவட்டம். 
http://konguthendral.blogspot.com