வெள்ளி, 27 ஜூன், 2014



நீரின் தன்மையை மாற்றி நமக்கு சுகாதாரமான ஆராக்கியம் தரும் கருவியின் செயல்பாடு.

அதன் பெயர் அல்கா பைன் ஆகும்.  அதாவது அல்கலைன் வாட்டர் கருவி.  பொருட்களில் உள்ள ஹைட்ரஜன் வாயுவின் சக்தியைக் குறிப்பிடுவது
PHஆகும்.
(Potentiality  of  Hydrogen)
அதை ’0′ முதல் ’14′
வரை குறிப்பிடுவார்கள்.
குழந்தையாய் பிறக்கும் போது உடல் 7.4 PH  இருந்தது.  திட உணவு மற்றும் அசைவ உணவு சில குளிர்பானங்கள உணவில் சேர்த்ததும் உடல் 4.5 PHக்கு மாறிவிடுகிறது. உடல் 4.5 PHஎன்றால் தோல் மற்றும் சிறுநீரைப் பரிசோதித்தால்  1 PH குறைவாக  3.5 PH என்று காட்டும்.  அப்போது உடல் 4.5 PH இருக்கிறது. என்று அறிந்து கொள்ளலாம்.
PH ன் தேவை என்ன?
நாம் தினசரி உண்ணும் உணவுவகை களின்  PHஐத் தெரிந்து கொள்ளாம்.
‘O’  PH கார் / லாரி பேட்டரி அமிலம்.
1          ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL)
1.2        ஆல்கஹால் (விஸ்கி, பிராந்தி etc., )
2.8        சோடா குளிர்பானங்கள் பெப்சி,
கோகா கோலா
3.2        அசைவம் கறி முட்டை etc.,
3.8        அரிசி, கோதுமை, பயிறு வகைகள்
5.5        மாட்டுப்பால்
6.0        (R.O Reverse Osmotis) தண்ணீர்
(தண்ணீர் கேன் பாட்டில் தண்ணீர்)
7.0        சாதாரணகுடிநீர், குழாய்நீர், கிணறு,
ஆழ்துளை (போர்) நீர்
7.4        காய்கறி, பழங்கள், கீரை,
உலர்ந்த பழங்கள்
தினசரி நாம் உண்ணும் அரிசி, கோதுமை, பயிறு, குளிர்பானங்கள், மாட்டுப்பால், R.O நீர், அனைத்துமே அமிலத்தன்மை அதிகமுள்ளது.  நம் உடல் அமிலத்தன்மை (அசிடிடி)  அதிகமானால் ஆக்சிடேசன் அதிகமாகி உடல் உறுப்புகள், செல்கள், அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது நோய் உண்டாகிறது.
இதைத்தடுக்கத்தான் Anti – Oxidaut அதிக அளவு உட்கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டாலும் மீண்டும் மீண்டும் அமிலத்தன்மை உள்ள உணவையே உட்கொண்டு உடல்நலம குறைந்து மனஅழுத்தம், மன உளைச்சல், கவலை, பயம், மற்றும் மனமாற்றங்களும் ஏற்பட்டு வீட்டை விலாசமாகக் கொண்டவர் அடுத்து மருத்துவமனையை விசாலமாக்கி தங்குகிறார். பிறகு ICU தான் விலாசம்.  நோய் அதிகமானால்   “Mr. Late” என்று ஆகி விடுகிறார்.
நோய்க் கிருமிகள் அபரிமிதமாக வளர்ந்து நம்மைத் தாக்கக் கூடியநிலை 4PH லிருந்து 6 PH வரைதான். அவற்றை முழுவதும் அழித்து நோய்வாய்ப்படுவதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமது தற்போதைய 6 PH லிருந்து நாம் 7 PHம் அதற்கு மேலும் உடலைக் கொண்டு வந்தாக வேண்டும்.
தினசரி 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை காய்கறிகள் அல்லது பழங்கள் அல்லது கீரை உண்டு வந்தால் கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளில் நம் உடல் நடுநிலையான 7PH அடையலாம்.  அவ்வளவு சாப்பிட முடியுமா?
ஆனால் நாம் உடனடியாக ஆரோக்கியம் பெற வேண்டுமானால் என்ன வழி?
நாம் தினமும் இரண்டரை லிட்டர் முதல் மூன்று வரை குடி நீர் குடிக்கிறோம்.  அந்தக் குடிநீரை “10 PH தண்ணீராக” மாற்றி அமைத்து குடித்து வந்தால் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் நம் உடல 4.5PH லிருந்து 7PH ; 7.1 PH வரை வந்தவிடுகிறது.
நாம் தினசரி குடிக்கும் தண்ணீரை ஒரு PETபாட்டிலில் ஊற்றி அல்காபைன் என்று அழைக்கப்படும் அல்கலைன் தண்ணீர் கருவியை அதற்குள் போட்டு வைத்து 20 வினாடிகள் பாட்டிலைக் குலுக்க வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் மேஜை மேல் வைத்து விட வேண்டும். அந்தக் கருவியிலிருந்து வெளியே வரும் ஹைட்ரஜன் நீருடன் கலந்து தண்ணீரை 6 PH அல்லது  7 PHல் இருந்து  10 PH ஆக குடிநீர் மாறுகிறது.
இந்த 10 PH ஒரு கிளாஸ் தண்ணீர்
‘ 10 கிளாஸ் 9 PH நீர்
‘ 100 கிளாஸ் 8 PH நீர்
= 1000 கிளாஸ் 7 PH நீர்
= 10000 கிளாஸ் 6 PH நீர்                                                           (R.O  தண்ணீர்)
1.         இந்த 10 PH  தண்ணீர் தினமும் 10 கிளாஸ் குடித்து வந்தால் எடை அதிகமாக உள்ளவருக்கு 10 வாரத்தில் (இரண்டரை மாதம்) அவர் எடையில் 10 சதவீதம் குறைகிறது.  அதாவது 100 கிலோ எடை இருந்தால் 10 கிலோ எடை குறைந்து 90 கிலோ ஆகலாம். (OBESITY DECREASE)
2.         சர்க்கரை குறைபாடு (DIABETES) இருப் பவருக்கு FREE RADICALS என்ற செல்களின் ஆதிக்க நிலையினால் கோளாறு ஏற்படு கிறது. இந்த FREE RADICALSI சமன்படுத்தும் நெகட்டிவ் சார்ஜ் இந்த 10PH அல்காபைன் தண்ணீருக்கு உண்டு என்பதால் அதிகம் பேர் இதைப் பயன்படுத்தி சர்க்கரை கோளாரை சரிசெய்திருக்கிறார்கள்.
3.         புற்றுநோய் மற்றும் சிறுநீரக ‘கல்’ (Kidney Stone) ஏற்பட்டவர்களின் புற்று நோய் கட்டிகளை சிறுசிறு கட்டிகளாக உடைத்து கரைத்து விடுகின்றது. சிறுநீரககல் உள்ளவர்களுக்கும் அந்தக் கல் இந்த 10PH அல்காபைன் தண்ணீரைக் குடித்து வந்தால் கரைந்து வெளியேறிவிடுகிறது.
4.         உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. இதனால் உடலில் மினரல் களின் செயல்படுவதை, உடலில் உள்ள சுரப்பிகள் என்ஜைம் செயல்படுவதை உதவுகிறது. அத்தியவசியமான மினரல்கள் மூளை, இதயம், இரத்தநாளங்கள், நரம்புகள், தசைகள், ஆகியவற்றிக்கு அளிக்கிறது.  மேலும் பற்கள், எலும்புகள், உருவாகவும் காரணமாகிறது.
5.         குளோரினை அறவே நீக்குகிறது.  அதன் பக்க விளைவுகளான முடிகொட்டுதல், தோலில் வயதான தன்மை போன்ற சுருக்கங்கள், மேலும் பல உடல் உறுப்புகளில் தங்கி குளோரின் கெடுதல் செய்வதைத் தடுத்து அதை முழுவதும் நீக்கி உடலைப் பாதுகாக்கிறது.
6.         அனைத்திற்கும் மேலாக அமிலத்தன்மை  காரத்தன்மையை சமன்படுத்தி மன அமைதி, உடல் ஆராக்கியமும் ஒன்று சேர அளிக்கிறது.  இந்த அல்காபைன் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை.  ஒவ்வொரு குடும்பத்தினரும் அல்கா பைனைத் தண்ணீராக மாற்றி குடித்து உடல் ஆராக்கியம் மேம்பட்டு பலப்பல ஆண்டுகள் ஆனந்தமாக வாழவேண்டும்.

தண்ணீர் பயன்பாடு -உலக அளவில் சிந்தித்து உள்ளூரில் செயல்படுக.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
          
தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
               தண்ணீர் பலவகைகளிலும் நமக்கு பயன்படுகிறது.ஒரு கிலோ தானியத்தை உற்பத்தி செய்ய ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 13ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆசியாவில் தனி மனிதனின் ஒரு நாளின் தண்ணீர் பயன்பாடு 1400லிட்டர் ஆகும்.அதுவே ஐரோப்பா வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனிதனின் தண்ணீர் பயன்பாடு 4000லிட்டர் தண்ணீர் ஆகும்.எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.உலக தண்ணீர்க்குழு இயக்குநர் டேனியல் ஜிம்மர்.WORLD WATER COUNCIL ( ஆதாரம்  - THE HINDU19 - 3-2003)
ஒரு கிலோ தேலைப் பதப்படுத்த 25லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ துணிகளுக்கு சாயம் ஏற்ற 80லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஒரு தேக்கரண்டி பாதரசக்கழிவு 25ஏக்கர் பரப்புள்ள ஒரு குளத்தையே மாசுபடுத்திவிடும்.
     
 உலக அளவில் தண்ணீரின் தேவை மிகுதியாகிக்கொண்டே செல்கிறது.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும்,வறட்சி ஏற்படுவதும் மாறி மாறி வருகிறது.பருவநிலை மாறி வருகிறது.மழைவளம் மிகுந்த நாடு இந்தியா.அப்படியானால் வறட்சியும்,பஞ்சமும் அடிக்கடி ஏன் ஏற்படுகின்றன?இயற்கைதான் காரணமா?அல்லது நாமாக ஏற்படுத்திக்கொண்டோமா? பூமி வெப்பமடைந்து பனிமலைகள் உருகுகின்றன.துருவப்பகுதிகளில் பெரிய,பெரிய பனிமலைகள் 120க்கும் மேல் இருந்தன.ஆனால் இன்று 40 மலைகளே உள்ளன.
காடுகள் மூன்றில் ஒரு பங்கு மழைநீரை சேர்த்து ஆண்டு முழுவதும் தெளிவான தண்ணீரை  மெல்ல,மெல்ல நமக்கு வழங்கி வந்தன.மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் திடீர் வெள்ளம் நாடு நகரங்களை அடித்துச்செல்கிறது.மலைகளில் 60 சதம் அடர்ந்த மரங்கள் இருக்க வேண்டும்.மலைப்பகுதிகளில் ஒரு அடி மண் உருவாக பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.அந்த மண் ஒரே மழையில் அடித்துச்செல்லப்பட்டு மண் வளத்தை குறைக்கிறது.வளமான மண் இல்லையென்றால் பயிர் வளம் குறையும்.உணவு உற்பத்தி குறையும்.உலக அளவிலு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தகுதியான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சமூகவிரோதிகள் ஆற்றின் ஒரு பக்கம் தூய நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.மறுபக்கம் மாசுபட்டகழிவுநீரைக் கலக்கிவிடுகின்றனர்.இதற்கு தீர்வு என்ன?கங்கை,யமுனை,கோதாவரி,காவிரி புனிதமானது,தூய்மையானது என்று கூறியதெல்லாம் பொய்யாகிவிட்டது.தமிழகத்திலுள்ள பவானிஆறு, பாலாறு,நொய்யல் ஆறு,காவிரி ஆறு  அனைத்தும் வறட்சியில் சிக்கி உள்ளன.மாசுபட்ட நீரையே சுமந்து செல்கின்றன.

மழைநீர் சேமிப்பு-குடிநீர் பாதுகாப்பு

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
                தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தண்ணீர் அமுதம்,தண்ணீர் உயிர்,தண்ணீர் உயிர்களுக்கெல்லாம் உயிர்,தண்ணீர் வாழ்வின் அடிப்படை,தாயினும் மேலானது தண்ணீர்.உலகெங்கும் நிறைந்திருக்கும் தண்ணீரில் 98 சதம் தண்ணீர்  பயன்படுத்துவதற்கு தகுதி அற்றது.ஒரு சதம் பனிமலையாக வட/தென் துருவங்களிலும்,உயர்ந்த மலைகளிலும் உறைந்து கிடக்கிறது.அப்படி என்றால் ஒரு சதத்திற்கும் குறைவாகவே தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது.
கடல்,ஆறு,குளம், ஏரி,கால்வாய்,கிணறு,என எல்லாம் தண்ணீர் மயம்.இருந்தாலும் குடிப்பதற்கு,தாகம் தீர்ப்பதற்கு,உயிர் பிழைக்க தகுதியுடைய தண்ணீர் எது?மாசுபடாத தண்ணீர்.தூய்மையான தண்ணீர்.கலப்படம் இல்லாத தண்ணிர்.
நாகரீக உலகில் நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டதால் செயற்கையாக தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதனை சீர் செய்யமுடியும்.எல்லோருக்கும் இந்த உணர்வும்  சிக்கனமாக பயன்படுத்தும் பொது சிந்தனையும் வரவேண்டும். எளிய தொழில்நுட்பங்களை மக்களுக்கு எடுத்து சொல்வோம்.
          மழைநீர் சேமிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு பற்றி இங்கு காண்போம்.

இன்று நாம் அருந்தும் தண்ணீர் 
                   பழமைக்கும் பழமை!.புதுமைக்கும் புதுமை!!

        உயிர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து,பின்னிப்பிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் தண்ணீர் இருக்கும் இடம்.
          தண்ணீரின் முதல் தேவை தாகம் தீர்த்தலுக்கே ஆகும்.இரண்டாவது விவசாய உற்பத்திக்கு.மூன்றாவது தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கு ஆகும்.
      எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபி அல்ல! தண்ணீர் வளம்.அதனைக் கையாளும் விதத்திலேயே தண்ணீரின் தேவை நிறைவேறும்.
வான மழை தூய்மையானது.சுவை,மணம்,நிறம் இல்லாதது.அது பூமியில் வீழ்ந்து உயிர்வாழ்வை மலர வைக்கிறது.இப்படு ஒரு சுழற்சிமுறை.

இயற்கையாய்ப் பெய்வது மழை! தண்ணீரை எளிதாய் சேர்ப்பதில் என்ன பிழை?
வாணிபப் பொருள் அல்ல தண்ணீர்!,வாழ்க்கையின் ஆதாரம் தண்ணீர்!!ஆனால் இன்று தண்ணீர் வியாபாரப் பொருளாகிவிட்டது.நம்மில் எத்தனை பேர் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். 
ஆண்டுக்கு பத்து செ.மீ.மழை பெய்யும் ராஜஸ்தான் மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் ஐந்து ஆண்டுகள்வரை தண்ணீரைப் பாதுகாக்கிறார்கள்.ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியில் (ஆண்டுக்கு 1100 செ.மீ.மழை பெய்கிறது) ஆண்டுக்கு ஒன்பது மாதம் தண்ணீர்த்தட்டுப்பாடு? இதற்கு காரணம் என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதோ தங்களுக்காக ஒரு கணக்கு
 பத்து செ.மீ.மழை ஒரு ஹெக்டேர் பரப்புள்ள நிலத்தில் விழுமானால் பத்து இலட்சம் தண்ணீர் கிடைத்துவிடும்.ஒரு ஆண்டுக்குரிய தண்ணீர் தேவையை அதாவது 24 X 365 = 8760 மணி நேரத்திற்குரிய தண்ணீர் தேவையை வெறும் நூறு மணி நேரத்தில் இந்தியா பெற்றுவிடும்.
 ஐம்பத்தெட்டு செ.மீ. மழை பெய்யும் கிராமத்தில் ஆயிரத்திஇருநூறு  மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அக்கிராம மக்களின் குடிநீருக்கும்,சமையல் தேவைக்கும் உரிய தண்ணீர் தேவையான அறுபத்தாறு லட்சம் லிட்டர் பெற தண்ணீர் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீரை சேகரித்தால் போதுமானது.
     நான்கு பேர் கொண்ட வீட்டில் ஆண்டு ஒன்றுக்கு 90ஆயிரம் லிட்டர் தண்ணீரை கழிவறைக்குப் பயன்படுத்துகிறோம்.

தாகம் தீர்க்க,உணவாக,உணவை உருவாக்க,தூய்மை செய்ய,குளிக்க,நீந்தி விளையாட,மிதவைக்கலனாக,தண்ணீர்ப்போக்குவரத்து செய்ய,வெப்பம் தணிக்க பசுமைக்காடுகள் உருவாக்க,ஆற்றல் தரும் மின்சக்தியாக,தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்த என ஐம்பதிற்கும் மேற்பட்ட தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுகிறது.இவ்வாறாக மனிதவாழ்வோடு தண்ணீர் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறது.
தண்ணீர் கிடைக்காத பொருளா?தண்ணீருக்குத் தட்டுப்பாடா? மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது! ஆனால் குடிக்க தகுதியான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை?

குடிநீர் பற்றாக்குறையும்,மாசு அடைதலும்.

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

    தண்ணீர் பற்றாக்குறையும்,மாசடைதலும் பற்றி காண்போம்.
       
                                                  உலகஅளவில்பூமிவெப்பம்,ஓசோன்அழிவு,மழைகுறைவு,வெள்ளப்பெருக்கு,வறட்சி போன்றவை பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றன.இந்திய அளவில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீர் தட்டுப்பாடு,மாசுபாடு ஆகியவை கவலைதரும் விசயமாக உள்ளது.
                                 
                   இன்றுபல்வேறுஆலைக்கழிவுகள்,மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,என ஊர்கள் பெருக்கத்திற்க்கேற்ப சாக்கடைக் கழிவுகள் ஆறுகளில் கலந்து மாசுபட்டு வருகின்றன.நகரங்களில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன.குடியேறிய பகுதிகளில் காற்றும் மாசுபட்டு வருகிறது.தண்ணீரும் மாசுபட்டு வருகிறது.குப்பைகளும் பெருகி வருகின்றன.
              குறைந்த ஆழத்தில் கிடைத்துவந்த நிலத்தடி நீர் இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தாலும் நிறைவாய்,தூயதாய் தண்ணீர் கிடைப்பதில்லை.
                   வீட்டு முற்றங்களும்,சுற்றுப்பகுதிகளும் கான்கிரீட் தளங்களால் மூடப்பட்டு அதனால் மழைநீரும் வீணாக ஓடி சாக்கடையில் கலந்து சென்றுவிடுகிறது.எல்லா வசதிகளும் படைத்த இந்த வீடுகளில் தண்ணீர் மருந்துக்கும் கிடைப்பதில்லை.வசதி படைத்தவர்கள் தண்ணீரை லாரி போன்ற வாகனங்களில் விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர்.
                மழைநீரை சேமிப்பதே சிறந்தது.
                                      
                    தொழிற்புரட்சி காரணமாக தோல் தொழிற்சாலை,காகிதத்தொழிற்சாலை,சாயத்தொழில், என பல்வேறு தொழிற்சாலைகள் பெருகின.அத்துடன் அந்த ஆலைகள் ஆற்றங்கரைகளில் அமையவும்  அனுமதி பெற்றன.ஆற்றுநீரை உறிஞ்சி எடுத்தும்,ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீரை உறிஞ்சி ஆலைகளுக்கு பயன்படுத்தினர்.இதனால் நிலத்தடி நீர் குறைந்தது.ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலந்து,நிலத்தடிநீரில் கலந்து மாசுபட்ட தண்ணீரையே அப்பகுதி மக்கள் குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

                          கடந்த ஐம்பது ஆண்டுகளில் விவசாயப்புரட்சி என்னும் பெயரில் செயற்கை உரங்களும்,செயற்கை விதைகளும் பயன்படுத்தப்பட்டது.இதனால் தண்ணீரின் இயற்கைத்தன்மை கெட்டது.மண் உவர்ப்பாக மாறி மாசு அடைந்தது.உயிர்த்தன்மை இழந்ததால் பயிர்வளம் கெட்டது.செயற்கை விதை மற்றும் செயற்கை உரங்களினால் தண்ணீர் தேவை மிகுதியானது. தண்ணீர்  மிகுதியாக தேவைப்படும் பயிர்களான நெல்,கோதுமை,கரும்பு பயிரிடப்பட்டன.கம்பு,சோளம்,கேழ்வரகு,சிறுதானியங்கள் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்தது.

                            தண்ணீர் தேவை மிகுதியால் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கிடையே போட்டி அதிகமானது.ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதும்,அடுத்த மாநிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.பூச்சிகளை மனிதனின் எதிரியாக நினைத்து அதனை அழிக்க மருந்து என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகளை அடித்தனர்.வயல்களில் நஞ்சு கலந்தன.உணவுச்சங்கிலி விளைவால் பூச்சிக்கொல்லி மருந்தின் நஞ்சானது பல்வேறு இடங்களுக்கும் பரவியது.

                        நாகரீக உலகில் குடியிருப்புகளுக்கு தண்ணீரின் தேவை மிகுதியானது.கழிவறைகளுக்கு விலைமதிப்பற்ற குடிநீரை பயன்படுத்துகிறோம்.ஒரேமுறை பயன்படுத்தப்பட்டு சாக்கடையில் செலுத்துகிறோம்.சுமாராக நான்கு பேர் கொண்ட வீடு ஒன்றிற்கு ஆண்டிற்கு 90,000லிட்டர் தண்ணீர் கழிவறைக்கு பயன்படுத்தப்படுகிறது.துணி துவைக்க,பாத்திரம் கழுவ,குளிக்க என ரசாயனக்கலவை சோப்புகளும்,பாஸ்பேட் அதிகம் கொண்ட டிடர்ஜென்ட் துவக்கும் சோப்புகளும்,நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களும் பயன்படுத்தி தண்ணீரை மாசுபடுத்துகிறோம்.

                        ஆறுகள் இயற்கையாக ஓடி கடலில் கலப்பதை தடுக்கப்பட்டு இயற்கை சுழற்சி முறைகள் தடையாகின.கடல் குப்பை கொட்டும் இடமாக மாறிவருகின்றது.அணு சோதனை நடத்தும் இடமாக மாறிவருகிறது.ஆலைக்கழிவுகளும்,பாதரசக்கழிவுகளும்,சாக்கடைநீரும் கலக்கும் இடமாக கடல் மாறிவிட்டது.அணுக்கழிவுகளும்,அனல்மின் சாம்பல்,பெட்ரோலியக்கழிவுகள் கடலில் கலக்கின்றன.பெரிய கப்பல்களில் பெரிய வலை கொண்டு மீன் பிடிக்கப்படுகின்றன.பவளப்பாறைகள்,முத்து,அரிய கனிமங்கள் என கடல் வளம் அனைத்தும் மனிதனால் சுரண்டப்படுகின்றன.
    
தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.மாசுபடாமல் காப்போம்.

                   மனிதன் வாழ்வதற்கான இடம் பூமி ஒன்றே!.இதில் அமைந்துள்ள இயற்கை வளங்களும் குறிப்பிட்ட அளவுதான் உள்ளன.எனவே புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான சுயற்சிமுறையில் கிடைக்கும் காற்றையும்,தண்ணீரையும் நேர்மையான வழியில்,சிக்கனமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
                 காற்று மாசுபடும் தொழில்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்.பசுமை இல்லத்தில் வெளியாகும் தீய காற்று ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்.அதனால் புற ஊதாக்கதிர்கள் நம்மை தாக்கும்.பூமி வெப்பம் மிகும்.மழைவளம் குறையும்.
                மழை இப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.மனித மனங்கள்தாம் மாற வேண்டும்.
     தண்ணீர் சமுதாயத்தின் பொதுச்சொத்து.தண்ணீரை மாசுபடுத்தாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மழைநீரை சேமிப்போம்-தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு. .

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
        தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு. வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி. 
                                        


மழை கொடுக்கும் வானத்தை   திருவள்ளுவரே சிறப்பித்து கூறியுள்ளார்.என்றால் மழைநீரின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் அல்லவா? இதோ வான் சிறப்பு.....

11. வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. 
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வை கெடுக்கக்கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் கூட முளைக்காது.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 
      வானமே பொய்த்து விடும் போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். 
    இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 
         உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குறள் வரிசைப்படி:
11 ஆம்குறளில்,

                     மழை இருப்பதால் உலகமும் உலக உயிர்களும் தொடர்ச்சி கொள்வதால் அது சாவா மருந்தென உணரப்படவேண்டும் எனவும
12 ஆம்குறளில்,

                          மழை உணவுப் பொருள்களை வழங்கி தானும் உணவாகப் (நீர் வேட்கை தணிய) பயன்படுகிறது எனவும்
13 ஆம்குறளில், 

                          வான் பொய்த்தால் அகன்ற இவ்வுலகம் பசியால் வருந்தும் எனவும்
14 ஆம்குறளில், 

                        அடித்துப் பெய்யாமல் மழை குன்றிவிட்டால் உழவர்கள் ஏர் பூட்டமுடியாது எனவும்
15 ஆம்குறளில், 

                 பெய்து கெடுத்தும் பெய்யாமல் கெடுத்தும் பின்னர் அதுவே பெய்து கைதூக்கிவிடுவதும் மழையின் தன்மைகள் எனவும்
16 ஆம்குறளில், 

                     மழைத்துளி வீழாவிட்டால் புல்லின் நுனிகூட தோன்றாது எனவும்
17 ஆம்குறளில், 

           இடிஇடித்து மின்னலடித்து பெருமழை இல்லையென்றால், பெருங்கடலும் தன் வளம் குறையும் எனவும்
18 ஆம்குறளில், 

                 மேகம் வழங்காவிட்டால் விழாக்களும் பூசையும் வானிலுள்ள தேவர்களுக்கு இல்லை எனவும்
19 ஆம்குறளில், 

           வானம் தவறினால் தானமும் தவமும் மறைந்து விடும் எனவும்
20 ஆவதுகுறளில், 

            நீர் இல்லாமல் இவ்வுலகு இல்லை; மழை அற்றுப்போனால் எப்பேர்ப்பட்டவரும் ஒழுக்கநிலை குன்றுவர் எனவும் 
                     
       தெய்வப்புலவர் வள்ளுவப்பெருந்தகையார் அவர்கள்   சூரியன் போன்று முக்கியமான இயற்கை வளங்கள்  இருக்க,அதனடிப்படையில் கிடைக்கும்  மழையைப் பற்றி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  வலியுறுத்திக் கூறியிருப்பதிலிருந்து மழைநீரின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து அதன்படி மழைநீரை சேமிப்போம்.மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்..

 

உலக தண்ணீர் தினம்,மார்ச் - 22.


மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு. வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

            
  சென்னை: இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22&ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
                          உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

                              உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

           தினகரன் நாளிதழுக்கு நன்றிங்க!.. 

தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு.
 வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                  பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனதுதான் இந்த பிரபஞ்சம். இந்த பூமி பிரபஞ்சத்தின் இயக்கமும் இதை சார்ந்தே இருக்கிறது. உலக உருண்டையை சுற்றி பார்த்தால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை எண்ணி பார்க்க முடியும். ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

மொத்த நாடுகளின் நிலப்பரப்பு 20 சதவீதம்தான். உலகை சூழ்ந்துநிற்கும் தண்ணீரில் 97 சதவீதம் உப்பு தண்ணீர். வெறும் 3 சதவீதம்தான் நல்ல தண்ணீர். அதிலும் 2 சதவீதம் பனிக்கட்டியாய் பயன்படுத்த தகுதியற்று கொட்டிகிடக்கிறது.

குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 1 சதவீத தண்ணீர்தான் இருக்கிறது. ஒரு சதவீத நீர் ஆதாரத்தை வைத்துதான் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் வாழ்கிறது. ஆனால் மாறிவரும் தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் நீருக்காய் கண்ணீர் சிந்தும் காலம் வரும் என்பதை நினைவு படுத்துகின்றன.

வற்றாத ஜீவ நதிகளெல்லாம் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது வறண்டும் விடுகிறது. தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! தாகம் தீர்க்க தண்ணீர் தேடும் மக்கள்.

குடம் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விற்றது ஒரு காலம். இன்று ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.15-க்கு வாங்கி குடிக்கும் காலத்தில் வாழ்கிறோம். உயிரினங்களின் இயக்கத்துக்கு உயிராய் இருக்கும் தண்ணீர் தேவையை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கேள்வி நம் முன் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.

விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நீர் ஆதாரங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. ஏரி, குளமெல்லாம் பாழ்படுத்தப்படுகிறது. ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் வீடுகளாய், கட்டிடங்களாய் உருமாறி வருகிறது. குளக்கரை சாலை பல இருக்கிறது. ஆனால் குளத்தை காணோம். லேக் வியூ சாலைகளும் உள்ளன.

ஆனால் ஏரியை காணோம். கடலோர பகுதிகளில் அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரும் உப்பு நீராய் மாறி வருகிறது. உட்புற பகுதிகளில் பல இடங்களில் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.

மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீரை காக்க வேண்டும். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து நீர் நிலைகளை மீட்க வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்க முடியும். மற்ற நகரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் நீர் ஆதாரம் குறைவு.

வட மாநிலங்களில் கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல வற்றாத ஜீவ நதிகள் உள்ளன. ஆனால் சென்னையில்....? மழையை நம்பிதான் இருக்கிறோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 150 லிட்டர் தண்ணீர் தேவை.

சென்னையை பொறுத்தவரை 130 லிட்டர் வழங்கப்படுவதாக மெட்ரோ வாட்டர் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கிருஷ்ணா நதிநீர், வீராணம் தண்ணீர் என்று தொலை தூரத்தில் இருந்துதான் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. எனவே தண்ணீர் சிக்கனம் இன்றியமையாதது.

‘டேப்பை’ திறந்து வைத்து கொண்டு ஹாயாக நின்று பல்துலக்குவது, முகச்சவரம் செய்வது முதல் எல்லா தேவைகளுக்கும் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். வீடுகள், கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். தண்ணீரை சேமிப்போம்... சிக்கனமாய் பயன்படுத்து வோம்... வரும் தலைமுறையின் கண்ணீரை துடைப்போம். 

           நன்றி மாலை மலர் சென்னை 27-06-2014 (வெள்ளிக்கிழமை) பதிப்புக்கு..