வெள்ளி, 27 ஜூன், 2014
வாழ்வு எப்படி ஆரம்பித்தது
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி, வெவ்வேறு எட்டு குடுவைகளில் புதிய மாமிசத்தை இட்டார். நான்கு குடுவைகளை உள்ளே எதுவும் புகாதபடி இறுக்க மூடினார். மற்ற நான்கு குடுவைகள் திறந்திருந்தன. பூச்சிகள் அவைகளுள் பறந்து சென்று அமர முடியும் நாட்கள் சென்றதும், திறந்திருந்த குடுவைகளின் மாமிசம் கெட்டு, நாறி, புழுக்களுடன் இருந்து ரெடி அப்போது மூடியிருந்த குடுவைகளைத் திறந்து பார்த்தார். மாமிசம் கெட்டு நாறியது ஆனால் புழுக்கள் இல்லை. நல்ல காற்று இல்லாததால் புழுக்கள் உண்டாகவில்லை ?
ஃப்ரான்ஸிஸ்கோ ரெடிஇன்னொரு சோதனை செய்தார். சில குடுவைகளில் புது மாமிசத்தை இட்டு அவைகளை திறந்து வைத்து அவற்றை ஒரு வலையால் மூடினார். நல்ல காற்று உள்ளே போகலாம் ஆனால் பூச்சிகள் போக முடியாது விளைவு ? மாமிசம் கெட்டுப் போனது. ஆனால் புழுக்கள் உருவாக வில்லை. இதில் ஒரு தெளிவான முடிவு தெரிந்தது பூச்சிகள் முட்டையிட்டன. புழுக்கள் அவற்றிலிருந்து பொறிந்து வந்தன. கொஞ்ச நாளில் புழுக்கள் பூச்சிகள் ஆயின.
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்வு
எப்படி ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள்
சுவையானவை அவற்றை அஸிமோவ் விவரிக்கிறார்.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ரெடி,
ஸ்பாலியான்ஸானி, பாஸ்ட்சர் ஆகிய விஞ்ஞானிகள் உயிர் வளர்ச்சி, தானே இயற்கையாக நடந்தது என்ற கருத்தை ஆராய்ச்சி மூலம் மறுத்தார்கள் கொள்கையை
அத்தகைய தானே உயிர் வளர்ச்சி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்திருக்க வேண்டும் அப்பொழுது பூமியின் சூழ்நிலை வேறு விதமாக
இருந்திருக்க வேண்டும்.
ஊரோ,
மில்லர், ஐபரின் முதலிய வேதியல் அறிஞர்கள் ஆர்வம் தூண்டும் ஆராய்ச்சிகள்
செய்தார்கள், அவற்றை இளைஞர்கள் இங்கு புரிந்து கொள்ளலாம். சரியான ஆரம்ப
வேதிப் பொருட்களும், சக்தி மூலமும் வைத்து உயிருள்ள ஜீவன்களில் அமைந்த எளிய
வேதிப் பொருட்களை அவர்கள் உண்டாக்கிக் காட்டினார்கள். வாழ்வு எப்படித்
துவங்கியது என்று அறியும் முயற்சியில் இது ஆரம்ப நிலைதான். போக போக
ஆர்வத்தை மிகத் தூண்டும் சாத்தியங்கள் உள்ளதை அஸிமோவ் காண்கிறார்.
தானே உருவாதல்.
மனிதர்களுக்கு
குழந்தைகளும், நாய், பூனை, கரடி, மான் போன்ற மிருகங்களுக்கும் குட்டிகள்
இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு மிருகமும் அதன்
தாயிடமிருந்து அந்த தாய் இன்னொரு தாயிடமிருந்து என்று இப்படி வருகிறது.
நீங்கள் உங்கள் அம்மாவிடமிருந்து அவர் பாட்டியின் குழந்தை, பாட்டி கொள்ளுப்
பாட்டியின் குழந்தை என்று இப்படிப் போகிறது. பறவைகள் முட்டை இடுகின்றன
முட்டையில் இருந்து குஞ்சு, பின் அந்தக் குஞ்சு பறவையாகி முட்டையிடுகிறது,
செடிகளும் இப்படித்தான் செடிகளை வளர்க்க முந்தைய செடியின் விதைக்குப் போக
வேண்டும், அந்தச் செடிகள் அவற்றுக்கு முந்தைய செடியின் விதையிலிருந்து
என்று போகிறது. இதெல்லாம் எங்கு தொடங்கின ? பின்னோக்கிப் போய்க் கொண்டே
இருக்குமோ ? இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் முதன்முதலான மனிதன், நாய்,
பூனை, கரடி, கோழி, டெய்ளிச் செடி என்று இப்படி இருந்திருக்குமோ ?
அப்படியானால் முதல் உயிர் எப்படி வந்தது ? கொஞ்ச நாள் முன்பு வரை மக்கள்
இது ஒரு பெரிய மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். அதாவது சில உயிர்களைப்
பொறுத்தவரை ஒரு மர்மம் இல்லை என்று நினைத்தார்கள். எங்கிருந்து என்று தெரியாமல் சில உயிர்கள் வளர்ந்தன அல்லது வந்தன. நம்மைத் தொந்தரவு செய்த அல்லது நமக்குத் தேவையில்லாத சில
உயிர்களைப் பற்றி இப்படித் தான் நினைத்தார்கள் உதாரணமாக முதலைகள்,
பாம்புகள், கொஞ்ச பேருக்குத் தான் அவற்றின் தேவை இருந்தது. நிறையப் பேர்
அவற்றை கொல்ல முயன்றார்கள். ஆனாலும் அவை தென்பட்டுக் கொண்டு தான் இருந்தன.
ஷேக்ஸ்பியரின் அன்டனியும், கிளியோபாத்ராவும் என்ற நாடகத்தில், லெபிடஸ் என்ற
ரோமானியத் தளபதி சொல்வது இது. “உங்களுடைய எகிப்து பாம்பு, சகதியில்
சூரியனால் உருவாக்கப்பட்டது முதலையும் அப்படி தான்”.
சூரியனால் சூடாக்கப்பட்ட
சகதியில் முதலைகளும், பாம்புகளும் உருவானதாக சிலர் நம்பியிருக்கலாம்,
ஆனால் அது அப்படி அல்ல முதலைகளும், பாம்புகளும் முட்டையிட்டுக் குஞ்சு
பொறிக்கின்றன. இன்னும் சிறிய அளவில் இருக்கும் நிறைய ஜீவராசிகள் எப்படி
இனப்பெருக்கம் செய்கின்றன ? குளிர்சாதனப் பெட்டிகள் வருமுன்பு, மாமிசம்
கெட்டு, அழுகுதல் அடிக்கடி நிகழ்ந்தது மிகச் சிறிய புழுக்கள் மாமிசத்தின்
மீது தோன்றும். செத்த மாமிசத்தின் மீது உயிருடன் புழுக்கள் உருவானது போலத்
தோன்றும் உயிரற்ற பொருள்மீது தானே உயிருள்ள பொருள் வந்த மாதிரி புழுக்கள்
இப்படி உருவாக முடியுமானல், நிச்சயமாக வேறு உயிர்களும் உருவாக முடியும்
சரியான சூழ்நிலையில் ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்
பாம்புகளும், முதலைகளும், கோழிகளும், நாய்களும், மனிதரும் உயிரற்ற
பொருளிலிருந்து இப்படி உருவானார்களோ ? உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள
பொருள் உருவாவது “தானே வருவது” (spontaneous generation) எனலாம் வெளி உதவி
ஏதும் இல்லாமல் நடப்பது பழைய காலத்தில் அறிஞர்கள் இத்தகைய “தானே வருதலை”
அப்படியே கேள்வி கேட்காமல் எடுத்துக் கொண்டார்கள் 1668 ம் ஆண்டில்
ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி என்ற இத்தாலிய மருத்துவர் இதனைச் சோதனை செய்ய வேண்டும்
என்றார் கெட்டுப் போன மாமிசத்தின் மீது சிறிய உயிர்கள் முட்டைகள்
இட்டிருக்கலாம் அல்லவா ? கண்ணுக்குப் புலப்படாத அளவு சிறிய
முட்டைகளிலிருந்து புழுக்கள் வந்திருக்கலாம் ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி, வெவ்வேறு எட்டு குடுவைகளில் புதிய மாமிசத்தை இட்டார். நான்கு குடுவைகளை உள்ளே எதுவும் புகாதபடி இறுக்க மூடினார். மற்ற நான்கு குடுவைகள் திறந்திருந்தன. பூச்சிகள் அவைகளுள் பறந்து சென்று அமர முடியும் நாட்கள் சென்றதும், திறந்திருந்த குடுவைகளின் மாமிசம் கெட்டு, நாறி, புழுக்களுடன் இருந்து ரெடி அப்போது மூடியிருந்த குடுவைகளைத் திறந்து பார்த்தார். மாமிசம் கெட்டு நாறியது ஆனால் புழுக்கள் இல்லை. நல்ல காற்று இல்லாததால் புழுக்கள் உண்டாகவில்லை ?
ஃப்ரான்ஸிஸ்கோ ரெடிஇன்னொரு சோதனை செய்தார். சில குடுவைகளில் புது மாமிசத்தை இட்டு அவைகளை திறந்து வைத்து அவற்றை ஒரு வலையால் மூடினார். நல்ல காற்று உள்ளே போகலாம் ஆனால் பூச்சிகள் போக முடியாது விளைவு ? மாமிசம் கெட்டுப் போனது. ஆனால் புழுக்கள் உருவாக வில்லை. இதில் ஒரு தெளிவான முடிவு தெரிந்தது பூச்சிகள் முட்டையிட்டன. புழுக்கள் அவற்றிலிருந்து பொறிந்து வந்தன. கொஞ்ச நாளில் புழுக்கள் பூச்சிகள் ஆயின.
கம்பளிப்
புழுக்களிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் வருவது போல தானே உருவாதல் என்ற
கொள்கைக்கு எதிரான வலுவான சான்று
.ஃப்ரான்ஸிஸ்கோ ரெடி இதனைக் கண்டுபிடித்த காலத்தில்
விஞ்ஞானிகள் “மைக்ரோஸ்கோப்புகளை” உபயோகிக்கத் தொடங்கியிருந்தார்கள்
மைக்ரோஸ்கோப்புகள் வெறும் கண்ணுக்குப் தெரியாத நுண்ணுயிர்களைப்
பெரிதுபடுத்தி புலப்படுத்திக் காட்டின.
ஆன்டன் வான் லூவன் ஹீக் 1632 – 1723
என்ற டச் நாட்டு விஞ்ஞானி, 1675 ம் ஆண்டில் வெறும் கண்ணுக்குத் தெரியாத
உயிரினங்களை மைக்ரோஸ்கோப் மூலம் காட்டினார் அவைகள் “நுண்ணுயிர்கள்” என்று
அழைக்கப்பட்டன அவைகள் அங்கும் இங்கும் செல்வதையும் மற்ற உயிர்களை
உண்ணுவதையும் அவர் பார்த்தார். இந்த நுண்ணுயிர்கள் எங்கிருந்து வந்தன ?
அவைகள் அநேகமாக ஒரு அங்குலத்தின் நூற்றில் ஒரு பங்குக்கு கீழே தான் இருந்தன
அவைகள் முட்டையிட முடியுமா ?
ஒரு
குட்டை அல்லது குளத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து இவைகளைப்
பார்க்கலாம் உணவுப் பொருளைத் தண்ணீரில் கலந்த சாறை, குட்டை நீருடன்
சேர்த்தால் நுண்ணுயிர்கள் அவற்றை உண்பதைக் காணலாம். அவைகள் உண்டு, வளர்ந்து
பெருகுகின்றன. ஆனால் உணவுச் சாறுடன் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை,
புதிதாகத் தயாரிக்கப்பட்டு வடிகட்டின
சாறாக
இருந்தாலும், அதனில் நுண்ணுயிர்கள் முதலில் இல்லாவிட்டாலும், கொஞ்ச
நேரத்தில் ஏராளமான நுண்ணுயிரைப் பார்க்கலாம். உயிர் தானே உருவாதலுக்கு இது
ஒரு உதாரணம். உயிருள்ள நுண்ணுயிர்கள் உயிரில்லாத சாறு ஒன்றிலிருந்து
உருவாயின இப்படிச் சொல்வது சரியா ? ஒரு வேளை நுண்ணுயிர்கள் காற்றில்
மிதந்து கொண்டு இருந்திருக்கலாம்.
அவற்றுள் சில “சாறில்” விழுந்து
பெருகியிருக்கலாம். இந்தக் கொள்கையை மறுபடியும் சரிபார்க்க 1748 இல், ஜான்
டி நீடம் 1713 – 1781 என்ற இங்கிலீஷ் விஞ்ஞானி புதிய மாமிச சாறுடன் சோதனை
தொடங்கினார் அதில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்ல ஒரு குடுவையில் அதனைக் கொதிக்க
வைத்தார் குடுவை சூடாக இருந்த போதே அதை இறுக்கி மூடினார். சில நாட்கள்
கழித்து குடுவையைத் திறந்து, மைக்ரோஸ்கோப்பின் மூலம் அதில் நிறைய
நுண்ணுயிர்கள் இருக்கக் கண்டார்.
குடுவை மூடி இருந்ததால், அதில் எதுவும்
விழுந்திருக்க முடியாததால், “தானே உருவாதல்” என்ற கொள்கை நீருபிக்கப்பட்டது
என்று அவர் நினைத்தார்.
ஆனால்
லாஸரோ ஸ்பாலன்ஸானி 1729 – 1799 என்ற இத்தாலிய விஞ்ஞானி இதனை ஒத்துக்
கொள்ளவில்லை நீடம் முதலியே எல்லா நுண்ணுயிர்களையும் அழித்திருப்பாரா என்று
அவர் கேட்டார். ஏனென்றால் குடுவை சில நிமிஷங்களே கொதிக்க வைக்கப்பட்டது.
ஸ்பாலன்ஸானி மறுபடி அதே சோதனைச் செய்தார் மாமிச சாறை அரை மணிக்கு மேல்
கொதிக்க வைத்தார். அப்புறம் இறுக்க மூடினார். எத்தனை நாட்கள் கழித்து
திறந்து பார்த்தாலும் குடுவையில் நுண்ணுயிர்கள் உருவாகி இருக்கவில்லை.
எனவே, நுண்ணுயிர்கள் காற்றில் மிதந்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும்
அவற்றில் சில மாமிச சாறில் விழுந்து பெருகியிருக்க வேண்டும் என்று
ஸ்பாலன்ஸானி நினைத்தார்.
ஸ்பாலன்ஸானி
நுண்ணுயிர்களை மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்தார். ஒன்று, இரண்டாகத் தன்னை
பகுத்துக் கொள்வதை அறிந்தார். இப்படித்தான் இனப்பெருக்கம் நிகழ்கிறது.
நுண்ணுயிர்கள் காற்றில் எப்போதும் மிதந்து கொண்டிருக்கின்றனவா ?
தியோடர்
ஷிபான் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி (1810 – 1882) 1836 இல் இதனைச் சோதனை
செய்தார், ஸ்பாலன்ஸானி செய்தது போல அவரும் மாமிச சாறைக் கொதிக்க வைத்தார்.
ஆனால் குடுவையை மூடவில்லை. அதற்கு பதிலாக, நுண்ணுயிர்களைக் கொல்லும்
அளவுக்குச் சூடானக் காற்றை குடுவையில் வரச் செய்தார்.
மாமிச
சாற்றில் நுண்ணுயிர்கள் உருவாகவில்லை. உயிர்கள் தானே உருவாவதற்கு ஏற்ற ஒரு
உயிர் தத்துவம் காற்றில் பொருந்தி இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள்
நினைத்தார்கள் அதிகமான சூட்டில் நுண்ணுயிர்கள் அழிந்து போவதால் உயிரற்ற
மாமிச சாறில் நுண்ணுயிர்களை காணமுடியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.
இதனை சோதிப்பதற்கு லூயிபாஸ்டர் என்ற பிரான்சு வேதியல் அறிஞர் (1822 - 1895)
1860 ல் ஒரு புதிய சோதனைச் செய்தார். மாமிச சாறில் உள்ள நுண்ணுயிர்கள்
இறக்கும் வரை கொதிக்க வைத்தார். சாறு நீண்ட மெல்லிய கழுத்துடைய குடுவையில்
வைக்கப்பட்டது. குடுவையின் கழுத்து ‘S’ என்ற ஆங்கில எழுத்து பக்கவாட்டில்
கிடப்பது போல் அமைக்கப்பட்டது. மாமிச சாறு குளிர்ந்ததும் குளிர்ந்த காற்று
நீண்ட மெல்லிய கழுத்தின் வழியாக உள்ளே போய் வர முடியும். காற்றில் இருந்த
உயிர்ச்சத்து அல்லது தத்துவமும் கூட காற்று மட்டும் உள்ளே வந்தது. தூசி
ஏதும் இருந்தால் அது குடுவையின் கழுத்தின் கீழ் வளைவில் இருந்தது.
நுண்ணுயிர்களும் தூசியோடு சேர்ந்து கீழ் வளைவில் அமரும் என்று பாஸ்ட்சர்
கருதினார். அப்படித்தான் நடந்தது. மாமிச சாறில் நுண்ணுயிர்கள் இல்லை.
குடுவையின் கழுத்தை உடைத்து, தூசியும் காற்றும் உள்ளே வரச் செய்தால்
நுண்ணுயிர்களும் தோன்றத் தொடங்கின.
பாஸ்ட்சரின்
இந்தப் பரிசோதனைக்குப் பிறகு “தானே உயிர் உருவாதல்” என்ற கொள்கை
முற்றிலும் நிராகரிக்கப்பட்டது மாதிரி இருந்தது.
ருடால்பஃ ஃவீரசௌ என்ற
ஜெர்மன் விஞ்ஞானி (1821 - 1902), பாஸ்ட்சரின் சோதனை பற்றி கேள்விப்பட்டு,
“எல்லா உயிரும் உயிரிலிருந்தே வருகிறது” என்றார் விஞ்ஞானிகள் எல்லாம் இதனை
ஒத்துக் கொண்ட மாதிரி இருந்தது.
டார்வினின் கொள்கையும் மற்றவர்களின் கொள்கையும்
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எல்லா
உயிரும் உயிரிலிருந்து தான் வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் தன் முந்தைய
உயிரினத்திலிருந்து தான் வருகிறது. நாய், பூனை, தம் குட்டிகள் போடும். ஒரு
பீவர், தன் பீவர் குட்டியே போடும். ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டையிலிருந்து
ஆஸ்ட்ரிச் குஞ்சுகள் வரும். ஓக் மரம் அகார்ன் பழம் தரும் அதன்
விதையிலிருந்து இன்னொரு ஓக் மரம் வரும். ஒவ்வொரு தாவரமும், மிருகமும்,
நுண்ணுயிரும் தன் போன்ற இன்னொன்றையே உருவாக்கும்.
ஒவ்வொன்றும் ஒரு
உயிரினமாகும்.
மனித இனம் ஒன்று,
யானைகளில் இந்திய ஆப்பிரிக்க யானை என்று
இரண்டு இனங்கள் .ஹையனக்களில் மூன்று,
பேட்ஜர்களில் எட்டு,
நரிகளில் ஒன்பது,
ஈக்களில் 500,
வேறு பூச்சிகளில் 660,000 என உயிரின வகைகள் உள்ளன.
விஞ்ஞானிகள்
ஏறத்தாழ பத்து லட்சம் வேறுவேறு உயிரினங்களைக் கண்டுபிடித்தனர். இன்னும்
கண்டுபிடிக்கப்படாத பூச்சிகளும், சிறிய உயிர்களும் இன்னும் ஒரு பத்து
லட்சம் இருக்கலாம்.
இந்தப் புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் இன்னும் ஆராய
வேண்டி இருக்கிறது. இருபது லட்சமோ மேலோ உள்ள உயிரினங்களில் ஒவ்வொன்றுக்கும்
வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது என்று அவர்கள் கண்டறிய வேண்டும்.
எல்லாம் ஒரே
நேரத்தில் ஆரம்பித்தனவா ? ஒரே இடத்தில் ? ஒரே வழியில் ? ஒவ்வொரு
உயிரினமும் வெவ்வேறு நிலைமையில் ஆரம்பித்ததா ? வெவ்வேறு உயிரினங்கள்
வித்தியாசங்கள் ஒரே மாதிரி இல்லை. ஒரே மாதிரியான சில உயிரினங்கள் ஒரு
குழுவாய் அமைந்தன. அது போல வேறு குழுக்கள் அமைந்தன.
எடுத்துக்காட்டாக,
ஓநாய்களும், நரிகளும் வேறு குழுக்களாய் இருந்தாலும், அவை எல்லாம் நாய்
போன்ற மிருகங்கள் என்ற அமைப்பில் வந்தன.
சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள்,
வலியச் சிறுத்தைகள் ஆகிய எல்லாம் பூனை போன்ற விலங்குகள். நாய் போன்ற
விலங்குகளும், பூனை போன்ற விலங்குகளும், கரடிகளும், ஒருவகைக் கீரிகளும்,
கடல் நாய்களும் இன்ன பிறவும் மாமிசம் தின்னும் விலங்குகள்.
மாமிசம்
தின்னும் விலங்குகள் (உயிரினங்கள்) போல தாவரம் (செடி, கொடிகள்) உண்ணும்
விலங்குகள், ஆடு, மான், முயல், எலி போன்றன உள்ளன.
ஆனால் இந்த இரு
இனங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன உடம்பில் மயிர், வெதுவெதுப்பான இரத்தம்,
தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுத்தல், இவைகள் பாலூட்டிகள் எனப்படுகின்றன.
பறவைகள்,
நிலத்தில் ஊர்வன, கடலில் திரிவன ஆகிய உயிர்களில் பல வகைகள் உள்ளன.
இவைகளும் பாலூட்டிகளும் முதுகெலும்பு உள்ளவை.
உயிரினங்களை வகை பிரிப்பதில்
18,600 வகையான தாவரங்களை ஆங்கில இயற்கை இயல் அறிஞரான ஜான் ரே (1628 – 1705 )
1660 இல் ஆராய்ந்து தொகுத்தார். அவற்றை அடிப்படையில் இரண்டாகப்
பிரித்தார். முதல் பிரிவின் தாவரங்களில் விதைகள் ஒரு சிறிய விதை இலையில்
இருந்தது. இரண்டாவது பிரிவின் விதைகள் இரண்டு விதை இலைகளில் இருந்தன.
1693 ல் அவர்
விலங்குகளைப் பாகுபாடு செய்தார். குளம்புகள் உள்ளன. குளம்புகள்
(குதிரையின் கால் பகுதி) உள்ளவற்றில் ஒவ்வொரு காலிலும் ஒன்று, இரண்டு,
மூன்று குளம்புகள் என்று இப்படி ஸ்வீடிஷ் இயற்கை இயல் விஞ்ஞானியான கரோலஸ்
லின்னேயஸ் ( 1707 – 1778 ) அவர்களின் ஆராய்ச்சி இன்னும் முக்கியத்துவம்
வாய்ந்தது. 1735 இல் தாவரங்களையும், விலங்குகளையும் துல்லியமாக பகுத்து
அவர் புத்தகம் வெளியிட்டார். ஒரே மாதிரியான உயிரினங்களை ஜெனரா என்றார். ஒரே
மாதிரி ஜெனராக்களை குடும்பங்களாகப் பகுத்தார். குடும்பங்களை
வரிசைகளாகவும், வரிசைகளை வகுப்புகளாகவும் பகுத்தார்.
அதன்பின்னர், ஜார்ஜ்
கூவ்யாய் என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானி ( 1769 – 1832 ) வகுப்புகளை ஃபைலா
என்றும், ஃபைலாவை அரசுகள் என்றும் பகுத்தார். இந்தப் பிரிவுகள் நன்றாக
இருந்தன எல்லா உயிரினங்களும் ஒரு மரம் போன்ற அமைப்பில் வரிசைப் படுத்தப்
பட்டன.
மரத்தின்
அடிப்பாகமே வாழ்க்கை அது நான்கு அரசுகளாகப் பிரிகிறது. விலங்குகள்,
தாவரங்கள் இரண்டு விதமான நுண்ணுயிர்கள் ஒவ்வொரு அரசும் பல ஃபைலாக்களாகப்
பிரிந்தது.
அவைகள் வகுப்புகளாக, வரிசைகளாக, குடும்பங்களாக, பின்னர்
ஜெனராக்களாக கடைசியாக ஜெனராக்கள் இருபது லட்சம் கிளை உயிர்களாக. நிஜமான
மரம் வளர்ந்து பிரிவது போல இந்த வாழ்க்கை / உயிர் மரமும் உள்ளது என்று
விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வனவும்
பிறவும் ஒரு அடிப்படையான முதல் முதுகெலும்பியிலிருந்து வந்தனவா ?
இப்போது
உள்ள எல்லாப் பாலூட்டிகளும் ஒரு முதல் பாலூட்டியிலிருந்து வந்தனவா ?
ஒரு
இனம் மற்றொரு இனமாக மெதுவே மாறியதா அல்லது அதே மாதிரியான இன்னொரு முழு
இனமாக மாறியதா ?
ஒரு இனம் மற்றொரு இனமாக மாறும் “கற்பனைக் கொள்கை” பரிணாம
வளர்ச்சி எனப்பட்டது. மாற்றத்தை ஒருவரும் நேரில் பார்ப்பதில்லை. நமது
வரலாற்றில் பூனைகள் என்றும் பூனைகளாகவே இருந்தன. நாய்களும் நாய்களாகவே
இருந்தன. ஆனால் நமது வரலாறு ஐந்து ஆயிரம் ஆண்டுகள் தான் தெரியும்.
மாற்றங்கள் மிகமிக மெதுவாகவே நடக்கின்றது ஒரு மாற்றத்தை உணர ஐந்தாயிரம்
ஆண்டுகளுக்கு மேல் ஆகும். கி.பி. 1800 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த உலகம்
பலப்பல லட்சம் 1 கோடி ஆண்டுகளுக்கு முந்தியது என்று விஞ்ஞானிகள்
உணர்ந்தார்கள். பரிணாம வளர்ச்சிக்கு, வேண்டிய ஏராளமான நேரம் இருந்தது.
இந்த
பூமி ஏறத்தாழ 4600,000,000 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது விஞ்ஞானிகள்
நினைக்கிறார்கள். ஆனால் ஒரு உயிர் இனம் ஏன் மாற வேண்டும் ?
எவ்வளவு மெதுவாக
இருந்தாலும் அதற்கு எவ்வளவு நேரம் இருந்தாலும் ஏன் மாற வேண்டும் ?
ஃப்ரென்ச் இயற்கை இயல் அறிஞர் லாமார்க் ( 1744 – 1829 ) இதற்கு ஒரு
விளக்கம் தந்தார். 1809 ம் ஆண்டு அவர் வெளியிட்ட புத்தகத்தில், ஒவ்வொரு
தாவரமும், விலங்கும் தன் வாழ்நாளில் மாறுகிறது என்றும், அம்மாற்றத்தை இளைய
தலைமுறை ஏற்றுக் கொள்கிறது என்றும், இப்படியே
அந்த உயிரினம் முற்றும் மெல்ல மாறுகிறது என்றும் சொன்னார். உதாரணமாக,
ஒருவகை மான் இலைகளைச் சாப்பிட்டது. இலைகளைக் கவ்வுவதற்காகக் கழுத்தை நீட்டி
நீட்டி மரங்களின் உயரத்தில் இருந்தவற்றை பறித்தது. அதனால் அதனுடைய கழுத்து
நிரந்தரமாக நீண்டு கொண்டே வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக. அதன் குட்டிகளும்
இந்த முயற்சியைக் குணமாகப் பெற்றன, மீண்டும் முயன்றதில் அவற்றின் கழுத்து
இன்னும் கொஞ்சம் நீண்டது தலைமுறை, தலைமுறையாக இப்படி நடந்து, ஆயிரக்கணக்கான
வருஷங்களில் அந்த மான் இனம் ஒட்டகச்சிவிங்கியாக மாறியது.
இது போல, வேறு சில
இனங்கள் வேகமாக, பெரிதாக, சிறிதாக இப்படி மாறின. ஆனால் உயிர்கள் தாங்கள்
அடைந்த மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு உடனே தருவதில்லை. திரும்பத் திரும்ப
சோதனைகள் நடத்தியதில் லாமார்க்கின்க் கொள்கை தவறு என்று சொல்லபட்டது.
அதுவரை
வழக்கில் இருந்த கொள்கையிலிருந்து இன்னும் நல்ல கொள்கையை ஆங்கில இயற்கை
இயல் அறிஞர் சார்லஸ் டார்வின் (1809-1882) முன்வைத்தார். 1859'ல் அவர்
'உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species') என்ற புத்தகத்தை
வெளியிட்டார். ஒரு உயிரினத்தின் வேறுவேறு உறுப்பினர்களிடையே சிறு
வேறுபாடுகள் உள்ளன என்று அவர் சொன்னார். பலம், வேகம், நிறம், கண்பார்வை,
முகரும்திறன் .. என்பது போன்ற விஷயங்களில்.
எளிதில் இரையைப் பிடிப்பவை, எதிரிகளுடன் சண்டையில் வெல்பவை, எதிரிகளிடமிருந்து திறமையுடன் ஒளிந்து கொள்பவை, பட்டினி பொறுப்பவை ஆகியன, நிறைய நாள் உயிருடன் இருக்கும்; நிறைய குட்டி போடும்.
எளிதில் இரையைப் பிடிப்பவை, எதிரிகளுடன் சண்டையில் வெல்பவை, எதிரிகளிடமிருந்து திறமையுடன் ஒளிந்து கொள்பவை, பட்டினி பொறுப்பவை ஆகியன, நிறைய நாள் உயிருடன் இருக்கும்; நிறைய குட்டி போடும்.
அவைகள் தங்கள் குணங்களை அடுத்த தலைமுறைக்கு தரும்; ஏனெனில்
அவை அவற்றுடன் பிறந்தவை. அக்குணங்கள் உடனடியாக ஒரே தலைமுறையில் பெற்றவை இல்லை.
இப்படி தலைமுறை தலைமுறையாக நடக்கும் உயிரினங்கள் மெதுவாக தம்
சூழலுக்கு ஏற்ப மாறும். தினுசு தினுசாகச் சூழ்நிலைக்கேற்ப மாறுதலால் வேறு
உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் வரப்பெறும் வேகமாய் ஓடுபவை, நன்கு ஒளிந்து
கொள்பவை அல்லது நன்கு சண்டை போடுபவை என்று.
டார்வினின் கொள்கையான "இயற்கை
தேர்வு" பரிணாம வளர்ச்சி' ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் பல விஞ்ஞானிகள்
அதனை நிரூபிக்கும் சான்றுகள் கண்டனர். டார்வினின் காலத்திற்குப்பின் அவர்
கொள்கைகள் மேலும் விரிவடைந்தன. பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பமான விஷயங்கள்
இன்னும் பேசப் படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன, என்றெல்லாம் உயிரினங்கள்
ஒன்றிலிருந்து ஒன்று பரிணாம வளர்ச்சி பெற்றதை விஞ்ஞானிகள் இன்றும்
உறுதியாகச் சொல்கிறார்கள்.
உயிரனங்களும்,மாலிக்யூள்களும்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பூமி எங்கும் இன்று உயிரினங்கள் உள்ளன. எல்லா இடத்திலும், நீரில், நிலத்தில், கடல்பரப்பில், கடல் ஆழத்தில், மலைகளில், சமவெளிகளில், பாலைவனங்களில் கூட பூமி உருவானபோது மிகச் சிறிய, லேசான ஹைட்ரஜன் மாலிக்யூல்களை வைத்துக் கொள்ள முடியவில்லை (2 ஹைட்ரஜன் அணுக்களை ஒரு மாலிக்யூலாக வைத்துக் கொள்ள முடியவில்லை)
ஆதிகால கடல் நீரில் நிறைய அம்மோனியாவும் ஹைட்ரஜன் சல்பைடும் கலந்து இருந்தன. காற்றில் நிறைய மீத்தேனும், கொஞ்சம் அம்மோனியாவும், ஹைட்ரஜன் சல்பைடும், நீராவியும் இருந்தன.

சூரிய
ஒளி வாயு மண்டலத்தில் பட்டபோது தண்ணீர் மாலிக்யூல்களை ஹைட்ரஜனாகவும்,
ஆக்ஸிஜனாகவும் பிரித்தது. ஆக்ஸிஜன், மீத்தேனுடனும், அம்மோனியாவுடனும்
சேர்ந்து அவைகளை கார்பன் – டை – ஆக்ஸைடாகவும், நைட்ரஜனாகவும் மாற்றியது தாவரங்கள் வந்த பிறகு கார்பன் – டை – ஆக்ஸைடு ஆக்ஸிஜனாக மாறியது.
இந்த
முறையில் பூமி மூன்று வாயு மண்டலங்களுடன் இருந்தது. நாம் இப்போது மூன்றாவது
மண்டலமாகிய நைட்ரஜன் + ஆக்ஸிஜன் மண்டலத்தில் இருக்கிறோம். நைட்ரஜனும்
கார்பன் – டை – ஆக்ஸைடும் ஆன இரண்டாவது மண்டலத்தில் உயிர்வாழ்வு
ஆரம்பித்திருக்கலாம். ஒரு வேளை அம்மோனியாவும் மீத்தேனும் ஹைட்ரஜன்
சல்பைடும் இருந்த முதல் மண்டலத்தில் கூட உயிர்கள் தோன்றியிருக்கலாம்.
இப்பொழுது நாம் இருக்கும் வாயுமண்டலத்தை தவிர, வேறு ஒரு மண்டலத்தில்
உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்கலாம் என்று ஆங்கில வேதியியல் அறிஞர் ஜே.பி.எஸ்.
ஹால்டேன் (1892 - 1964) 1929 ல் ஒரு கருத்தை வெளியிட்டார். 1936 ல்
அலெக்ஸார் ஜ. ஓபரின் (1894 - 1980 ) மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர்
உயிர்வாழ்வு முதல் மண்டலத்திலேயே ஆரம்பித்திருக்கலாம் என்று சொன்னார்.
மீத்தேன், அம்மோனியா, தண்ணீர், ஹைட்ரஜன், சல்பைடு, ஆகிய எல்லாம் சிறிய
மாலிக்யூல்கள்.
ஒவ்வொன்றிலும் மூன்று முதல் ஐந்து அணுக்கள் அமைந்தன.
அவற்றுள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், சல்பர் அணுக்கள் இவைகள்
எல்லா அமினோ அமிலங்களுடன் சேர்ந்து பெரிய மாலிக்யூல்கள் ஆகக் கூடியன.
இதில் சிக்கல் என்னவென்றால், பொதுவாக சிறிய மாலிக்யூல்கள் நிலையானவை. பெரிய மாலிக்யூல்கள்
உடையக் கூடியவை. ஆகவே சிறிய மாலிக்யூல்கள், தாங்களாகவே சேர்ந்து பெரியவை
ஆவதில்லை. மாறாக, பெரிய மாலிக்யூல்கள் உடைந்து சிறியவை ஆகும். பெரியவை,
சிறியவை ஆவது மலையிலிருந்து கீழே உருண்டு வருவது போன்றது,
சிறியவை, பெரியவை
ஆவது தாங்களே மலை மேல் ஏறுவது போன்றது சிறிய மாலிக்யூல்களை மலை மேல் ஏற
பலவந்தப்படுத்த வேண்டும் மலை மேல் ஏறி பெரிய மாலிக்யூல் ஆகி, உயிர் வாழ்வை
உருவாக்க ஒரு பெரிய சக்தியால் தான் சிறிய மாலிக்யூல்களை மலை ஏற வைக்க
முடியும்.
பூமியின் ஆதிகாலத்தில் சக்தி நிறையக் கிடைத்தது. மின்னல்,
எரிமலைச் சூடு, சூரிய வெளிச்சம் முதலியவற்றைச் சொல்லலாம். தற்காலத்தில்,
சாதராண வெளிச்சத்தை விட அதிக சக்தி உடைய, அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியின்
மேற்பரப்புக்கு அதிகம் வருவதில்லை.
பூமியின் மேல் பதினைந்து மைல் தொலைவில்
உள்ள ஓஸோன் என்ற ஒருவிதமான ஆக்ஸிஜன் அடுக்கு அல்ட்ரா வயலட் கதிர்களைத்
தடுத்துவிடுகிறது. உயிர் வாழ்வு ஆரம்பித்த நாட்களில் வாயுமண்டலத்தில்
ஓஸோனும் இல்லை. ஆக்ஸிஜனும் இல்லை. அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் முழுச்
சக்தியுடன் பூமியின் மேற்பரப்புக்கு வந்தன. இவ்வித சக்தியினால், சிறிய
மாலிக்யூல்கள் மலை மேல் ஏறுவது போல் உந்துதல் பெற்று பெரிய மாலிக்யூல்களை
உருவாக்கின. உயிர் வாழ்வும் ஆரம்பம் ஆனது.
பரிணாம வளர்ச்சி
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பரிணாம வளர்ச்சி தொடங்கும் நிலை மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்வாழ்க்கை இல்லை. புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் ஆதி காலச் சமுத்திரங்களில் உருவாயின. தங்களைச் சுற்றி இருந்த வேதியியல் பொருட்களை உண்டு, பெருகின. அவைகள் பலத்தில் தம்முள் வேறுபட்டன. இயற்கைப் பொருட்களில் சில நன்கு வளர்ந்தன, சில அழிந்து பட்டன. . பின்னர் நீண்ட பரிணாம வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம்மும் உயிரினங்களும் வந்துள்ளன.
புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும், எப்படிச் செயல்படத் துவங்கின ?
அவைகள் எளிய, உயிரற்ற மாலிக்யூல்களிலிருந்து தாமே உருவாகத் தொடங்கினால் அவைகள் தோன்றிய உடனேயே வாயு மண்டல ஆக்ஸிஜன் அவைகளை அழித்து விட்டிருக்கும். ஆனால் வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜன் எப்போதும் இல்லை. தாவரங்கள் வாயுமண்டல கார்பன் – டை – ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜன் வெளியிட்டன.
இப்பொழுது தாவரங்களின் செயல்பாடுகளில் பூமியின் வாயுமண்டலம் 4/5 பங்கு நைட்ரஜனும், 1/5 பங்கு ஆக்ஸிஜனுமாய் உள்ளது. கார்பன் – டை – ஆக்ஸைடு 1/3000 பங்கே உள்ளது. (ஒரு கார்பன் – டை – ஆக்ஸைடு மாலிக்யூலில் ஒரு கார்பன் அணுவும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன)
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தாவரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜனும் இல்லை. கார்பன் – டை – ஆக்ஸைடே இருந்தது. அப்பொழுது பூமியின் வாயுமண்டலம், நைட்ரஜனும், கார்பன் – டை – ஆக்ஸைடும், கலந்திருந்தது.
மார்ஸ், வீனஸ், ஆகிய கிரகங்களின் வாயுமண்டலம் இன்னும் நைட்ரஜன், கார்பன் – டை – ஆக்ஸைடு கலந்த கலவையாய் இருக்கிறது. அவ்விடங்களில் உயிர்வாழ்வு இல்லை. பூமியின் ஆதி வாயுமண்டலம் அப்படி இருந்திருக்காது. சூரியனும், ஜீபிடர், சனி, போன்ற பெரிய கிரகங்களும் அநேகமாக வாயுமண்டல ஹைட்ரஜன் நிரம்பி உள்ளன.
தூசியும், வாயுவும் மேகக் கூட்டமாய் சூரியப் பிரபஞ்சத்தை உண்டாக்கின அவைகள் ஹைட்ரஜனும், ஹைட்ரஜன் அணுக்களும் வேறு சில அணுக்களும் சேர்ந்தன. சாதாரணமாக, மீத்தேன் (4 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு கார்பன் அணு), அம்மோனியா (3 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு நைட்ரஜன் அணு), தண்ணீர் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு ஆக்ஸிஜன் அணு) ஹைட்ரஜன் சல்பைட் (2 ஹைட்ரஜன் அணுக்கள் + ஒரு சல்பர் அணு) ஆகியவை அமைந்தன.
1953 ல் பிரான்சிஸ் H.C. க்ரிக் (1916 --) என்ற ஆங்கில விஞ்ஞானியும், ஜேம்ஸ் டி. வாட்ஸன் (1928 - ) என்ற அமெரிக்க விஞ்ஞானியும் சேர்ந்து ஆராய்ந்து, ஒரு நீயூக்ளிக் அமிலத்தின் அமைப்பைக் காட்டினார். ஒரு நீயூக்ளிக் அமில மாலிக்யூல் எப்படித் தன்னைப் போலப் பிறிதொன்றை உருவாக்க முடியும் என்று காண்பித்தார்கள்.
நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள், புரோட்டீன் மாலிக்யூல்களின் அமைப்பை நிர்ணயிக்கின்றன. புரோட்டீன் மாலிக்யூல்கள் உயிர்ப் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றன. இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால்,
நீயூக்ளிக் அமிலங்கள் ஒரு வாழும் உயிரில் தம்மைப் போலச் சரியாக பிற உயிர்களை உருவாக்குகின்றன. சில நீயூக்ளிக் அமிலங்கள் இளைய உயிர்களுக்குக் கொடுக்கப் படுகின்றன. இளைய உயிர்களில் உள்ள நீயூக்ளிக் அமிலங்கள் பெற்றோரில் உள்ளது போன்ற புரோட்டீன்களை உருவாக்குகின்றன. இதனால் குட்டிகள் பெற்றோரைப் போலுள்ளன.
நாய் போன்ற குட்டிகள், பூனை போன்ற குட்டிகள் சில நேரங்களில் நீயூக்ளிக் அமிலங்கள் தங்களைச் சரியாக பிரதி எடுப்பதில்லை. ஒன்று தவறிய நீயூக்ளோடைட் (Nucleotide) இங்கும் அங்கும் வந்து விடலாம். அப்போது சில மாற்றங்கள் ஏற்படலாம். ‘உயிரின மாறுதல்’ (Mutation) மாற்றம் மிகச் சிறியதாய் இருக்கலாம். ஒரு நாய்க்குட்டி அந்த மாற்றத்தோடு தன்னுடைய நாய்க் கூட்டத்தில் இருக்கலாம் இதுபோன்ற நுண்ணிய மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கின்றன.
அதனால் தான் பல லட்சக்கணக்கான மனிதர்களில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனித்துவமான முகம், குரல், தோற்றம் அமைந்து அவர்களை நாம் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த மாறுதல்கள் (Mutations) இயற்கையின் செயல்களுக்கு உந்துதல் தந்து, பரிணாம வளர்ச்சி நடைபெற வழி செய்கின்றன.
விஞ்ஞானிகள் கண்டறிந்தவரை, அவர்கள் ஆராய்ந்த ஒவ்வொரு உயிரினமும், சிறியதிலிருந்து பெரியது வரை புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் உடையவை. அதனால்தான் , மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த முதன்முதல் உயிரினங்கள் புரோட்டீன்களாலும், நீயூக்ளிக் அமிலங்களாலும் ஆனவை என்கிறோம்.
உலகில் உயிர்வாழ்வு எப்படித் தொடங்கியது என்று கேள்வி எழுப்பினால், முதன் முதலில் புரோட்டீன்களும், நீயூக்ளிக் அமிலங்களும் எப்படி உண்டாயின, அவை எப்படி முதல் உயிரை உண்டாக்கின என்று கேட்பதற்குச் சமம்.

மாலிக்யூல்கள்-
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
1700 ம் ஆண்டின் பின்பகுதியில் விஞ்ஞானிகள் மாலிக்யூல்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
வில்லியம் ப்ரெளட் (1785 - 1850) என்ற ஆங்கில விஞ்ஞானி 1827 ல் அவற்றை மூன்று முக்கிய வகையாகப் பிரித்தார்.
முதல் வகை மாவுச்சத்தும், சர்க்கரைகளும், இரண்டாம் வகை கொழுப்புகளும், எண்ணெய்களும், மூன்றாம் வகை முட்டையின் வெள்ளை போன்ற பொருட்கள், மூன்றாம் வகைப் பொருட்கள் அல்புமின்கள் (Albumins) எனப்பட்டது.
லத்தீன் மொழியில் அல்புமின் என்றால் முட்டை வெள்ளை. மாவுச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் இவற்றின் ‘மாலிக்யூல்கள்’, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் அணுக்களால் ஆனது. அல்புமின் மாலிக்யூல்கள் ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், என்னும் இவற்றோடு நைட்ரஜன், சல்பர், அணுக்களும் சேர்ந்தது.
ஆல்பியுமின்களில் மற்ற கூட்டுப் பொருட்களில் இல்லாத வேறு கூறுகள் இருந்தன. 1838 ல் ஜரார்டஸ் ஜே மல்டர் (1802 - 1880) அவற்றை புரோட்டீன்கள் என்று அழைத்தார்.
லத்தீன் மொழியில் புரோட்டீன் என்றால் முதல் என்று அர்த்தம். உயிருள்ள பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் காலப் போக்கில் புரோட்டீன்களில் பல்வேறு கூறுகள் தெரிந்தன. அவற்றின் மாலிக்யூல்கள் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான அணுக்களால் ஆனது புரோட்டீன் மாலிக்யூல்களில் இருந்த அணுக்கள் பழைய மாதிரி சேர்ந்து அமையவில்லை. அவைகள் எளிய மாலிக்யூல்களால் ஆன நீளச் சங்கலிகளாக இருந்தன, அவற்றிற்கு அமினோ அமிலங்கள் என்று பெயர்.
புரோட்டீனில் காணப்படும் அமினோ அமில மாலிக்யூல் சாதாரணமாக பத்து முதல் இருபத்தி இரண்டு அணுக்களால் ஆனது. அவை எல்லாவற்றிலும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உண்டு. சிலவற்றில் சல்பர் (sulphur) அணுக்களும் சேர்ந்திருக்கும் .
ஒவ்வொரு புரோட்டீன் மாலிக்யூலிலும் அநேகமாக 20 அமினோ அமிலங்கள் உண்டு. அவைகளை எந்தவிதமாகவும் வரிசைப்படுத்தி புரோட்டீன் சங்கிலி அமைக்கலாம். ஒவ்வொரு வித்தியாசமும் சிறிது வித்தியாசமான குணங்கள் உள்ள புரோட்டீன் மாலிக்யூலைத் தரும். இதனால் வேறு,வேறு அளவில்லாத புரோட்டீன் மாலிக்யூல்களை அமைக்கலாம்.
உதாரணமாக 1,2,3,4 என்று குறியிட்ட அமினோ அமிலங்களை எடுத்துக் கொள்வோம். இவற்றை 1-2-3-4, 1-2-4-3, 2-3-4-1, 3-4-2-1, என்று இப்படி 24 வகைகளில் அமைக்கலாம்.
20 அமினோ அமிலங்களை எடுத்துக் கொண்டால் அவற்றை 24 பில்லியன் – பில்லியன் (24,000,000,000,000,000,000) வகைக்கு மேல் அமைக்கலாம்.
20 அமினோ அமிலங்களில் டஜன் கணக்கில் புரோட்டீன் மாலிக்யூல்களை அமைத்தால், கிடைக்கும் எண்ணிக்கை பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதல் அமினோ அமிலங்களின் வரிசையில் நுண்ணிய வேறுபாடுகள் சாத்தியம்.
அதனால் தான் புரோட்டீன் மாலிக்யூல்கள் ஒரு டெய்ளிச் செடிக்கும், ஒரு திமிங்கலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துகின்றன.
அமினோ அமிலம் ஏன் இப்படி இருக்கிறது ?
டெய்ளிச் செடியின் விதை ஏன் அதே புரோட்டீன்கள் உள்ள இன்னொரு டெய்ளிச் செடியை தருகிறது ?
திமிங்கலம் ஏன் அதே புரோட்டீன் கள் உள்ள இன்னொரு திமிங்கலத்தையே தருகிறது ?
போன்ற கேள்விகளுக்கு நீண்ட நாட்கள் கழித்தே விடை கிடைத்தது. 1869 ல் விடையின் ஆரம்பம் கிடைத்தது.
ஸ்விஸ் வேதியல் அறிஞர் ஜோஹான் F. மீஷர் (1844 - 1895) ஒரு செல்லின் நடுவில் இருக்கும் சிறுப் பொருளைக் கண்டறிந்தார். அது செல்லின் நியூகிளியஸ் (Nucleus) ஆகும். மீஷர் கண்டுபிடித்த பொருள் நீயூக்ளிக் அமிலம் (Nucleic Acid) எனப்பட்டது. நீயூக்ளிக் அமிலத்தின் மாலிக்யூல்கள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், அணுக்களோடு பாஸ்பரஸ் சேர்ந்திருந்தது. நீயூக்ளிக் அமிலங்கள், புரோட்டீன்கள் போல, சிறு மாலிக்யூல் சங்கிலிகளால் ஆனது.
சிறு மாலிக்யூல்களின் தன்மை 1909 ல் ஃபீபஸ் A.T. லெவின் (Phoebus A.T. Levue 1869 - 1940) என்ற ரஷ்ய – அமெரிக்கா வேதியல் அறிஞரால் காணப்பட்டது. அந்த சிறு மாலிக்யூல்கள் நீயூக்ளியோடைட்ஸ் (Nucleotides) எனப்பட்டன. ஒன்றில் சுமார் 40 அணுக்கள் இருந்தன. எந்த நீயூக்ளிக் அமிலத்திலும் நான்கு வித்தியாசமான நீயூக்ளியோடைட்ஸ் உண்டு. ஆனால் நீயூக்ளிக் அமிலச் சங்கிலிகள் நீளமானவை. நான்கு என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு சிறு துணுக்கிலும் மொத்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமானது.
1944 ல் ஆஸ்வல்ட் T. அவெரி என்ற கனடிய விஞ்ஞானி (1877 - 1955) புரோட்டீன்களை விட நீயூக்ளிக் அமிலங்கள் முக்கியமானவை என்று காட்டினார். ஒரு நுண்ணுயிரை அதே மாதிரியான இன்னொரு நுண்ணுயிராக மாற்ற DNA என்ற நீயூக்ளிக் அமிலத்தை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி காட்டினார். புரோட்டீன்கள் இதைச் செய்ய முடியாது. அதுவரை விஞ்ஞானிகள் நீயூக்ளிக் அமிலத்தை அவ்வளவு கவனிக்கவில்லை.இதன் பின்னர் அவர்கள் நீயூக்ளிக் அமிலத்தை நன்றாக ஆராயத் தொடங்கினார்கள்.
புரோட்டீன் மாலிக்யூல்களும் அல்லது நீயூக்ளிக் அமில மாலிக்யூல்கள் என்று வந்தால் ஏதாவது ஒரு உயிர் உருவம் அவற்றை உடனே தின்று விடும். அதனுடைய முடிவு அவ்வளவு தான். ஒரு வாழும் உயிராக ஆவதற்கு முன்பே அவை முடிந்து விடும்.

வாழ்க்கை தோன்றிய விதம்?????
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பூமியின் வாயுமண்டலம் இப்படி, அப்படி இருந்தது, அதனால் சக்தி இப்படிச் செயல்பட்டது. உயிர் வாழ்வு உருவானது என்றெல்லாம் கூறுவதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சரிபார்ப்பது ?
கால இயந்திரம் இருந்தால் மூன்றரை பில்லியன் (ஆயிரம் கோடி) ஆண்டுகள் பின் சென்று பார்க்கலாம் ஹெரால்ட் சி.ஊரே (Harold C.urey 1893 - 1981) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், ஆதிகாலப் பூமியின் வேதியியல் பண்புகள், உயிர் வாழ்வின் தோற்றம் இவற்றில் நாட்டம் காட்டினார்.
ஆதிகாலப் பூமியில் முதல் உயிர்வாழ்வு துவங்கிய போது இருந்த சூழ்நிலையை (Conditions) பரிசோதனைச் சாலையில் உண்டாக்க முடியுமா என்று யோசித்தார். அது முடிந்தால் என்ன நடந்திருக்கும் என்று கண்டுபிடிக்கலாம். ஸ்டான்லி L.மில்லர் (1930 - 2007) ஊரே யின் மாணவர் 1952 ல் ஊரே அவரை ஒரு சோதனை செய்யச் சொன்னார்.
மில்லர் சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் எந்த விதமான உயிரும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் ஆகிய வாயுக் கலவையை அதில் சேர்த்து ஆதிகாலப் பூமியின் சூழ்நிலையை உண்டாக்கினார். இந்தக் கலவையை (தண்ணீரும், வாயுக்களும்) தன்னுடைய உபகரணத்தில் சுற்ற வைத்தார். ஓரிடத்தில் அதில் மின்சாரம் பாய வைத்தார். மின்னலிலிருந்து வெளிப்படுவதைப்போன்ற சக்தியாக மின்சாரத்தை பயன்படுத்தினார்.ஒருவாரம் இந்தக் கருவி இப்படிச் செயல்பட்டது. வார முடிவில் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாகியிருந்தது.
அப்போது அவர் கருவியைத் திறந்து உள்ளிருந்ததை கவனமாக ஆராய்ந்தார். உயிர்ப்பொருட்கள் அதில் இல்லை. ஆனால் அவர் முதலில் சோதனை ஆரம்பித்த போது இருந்ததை விட வேறு விதமான, வளர்ந்த மாலிக்யூல்கள் இருந்தன.

மீத்தேன்
வாயுவின் ஆறில் ஒரு பங்கு நிறைய சிக்கலான மாலிக்யூல்கள் ஆகி இருந்தது.
மின்சாரம் பாய்ந்த சக்தி மீத்தேன் வாயுவை மேல் நோக்கிச் செலுத்தியது,
புரோட்டீனில் காணப்பெறும் இரண்டு எளிய அமினோ அமிலங்கள் இருந்தன. ஒரு சிறு
குடுவையில், ஒரு வாரத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் உருவாக முடியுமானால்,
கடலில் ஆயிரம் கோடி வருஷங்களில் எவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் ?
மில்லரைத் தொடர்ந்து வேறு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். பிலிப் K. ஏபல்ஸன்
(1913 - 2004) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், எளிய கூட்டுப்
பொருள்களினால் பல விதமான கலவைகளைச் சோதித்தார். கலவை எதுவாக இருந்தாலும்
சரி, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உள்ளவரை, சோதனையில்
அமினோ அமிலங்கள் கிடைக்கும்.
1959 ல் வில்ஹெல்ம் க்ராத், H. வான்
வேஸென்ஹாஃப் என்ற இரண்டு ஜெர்மானிய வேதியியல் அறிஞர்கள் மின்சாரம்
பாய்ச்சுவதற்கு பதிலாக அல்ட்ரா வயலட் கதிர்களை சக்தியாகப்
பயன்படுத்தினார்கள். அப்போதும் அமினோ அமிலங்கள் உண்டாயின.
இன்னும் நிறைய
அளவும், அதிக காலமும் கொண்டு வேதியியல் அறிஞர்கள் பரிசோதனைகளை
நிகழ்த்தினால் இன்னும் சிக்கலான அணுக்கள் கிடைக்குமா ?
ஆம். உருவான
கூட்டுப் பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு புதிய பரிசோதனை செய்தனர்.
1961 ல் ஹ்வான் ஓரோ என்ற ஸ்பானிஷ் அமெரிக்கன் வேதியியல் நிபுணர் ஹைட்ரஜன்
சயனைடை ஒரு ஹைட்ரஜன் அணு + ஒரு கார்பன் + ஒரு நைட்ரஜன் ஆரம்பக் கலவையில்
சேர்த்தார்.
மில்லரின்
ஆரம்ப சோதனையில் ஹைட்ரஜன் சயனைடு உருவாகியிருந்தது. இப்போது இன்னும் அதிகமாக
அமினோ அமிலங்கள் கிடைத்தன. சில அமினோ அமிலங்கள் இணைந்து கொண்டு சிறு
சங்கிலிகள் ஆயின. ஓரோ ப்யூரைன்கள் என்ற மாலிக்யூலை அறிந்தார். ப்யூரைன்கள்
நியூக்ளோடைடுகளின் ஒரு பகுதி, இவையே நியூக்ளிக் அமிலங்கள் ஆகின்றன.
1962 ல்
ஓரோ ஃபார்மல் டிஹைடை (ஒரு கார்பன் அணு + இரண்டு ஹைட்ரஜன் அணு + ஒரு
ஆக்ஸிஜன் அணு) ஆரம்பக் கலவையில் சேர்த்தார். நியூக்ளோடைடின் பகுதியாக
சர்க்கரை மாலிக்யூல்கள் கிட்டின.
1963 ல் இலங்கை அமெரிக்க வேதியியல் அறிஞர்
ஸிரில் பொன்னம் பெருமா (1923 - 1994) ஏற்கெனவே சோதனைகளில் உருவான பல
பொருட்களுடன் ஃபாஸ்பரஸ் சேர்ந்த கூட்டுப் பொருளைச் சேர்த்தார். முழுதாக
நியூக்ளோடைடுகளும், சங்கிலி நியூக்ளோடைடுகளும் அமைப்பதில் வெற்றிகண்டார்.
ஸ்ட்னி.W.ஃபாக்ஸ் என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர் வேறு வழியில்
ஆராய்ந்தார். 1958 ல் அமினோ அமிலங்களும் தொடங்கி, தண்ணீருக்குப் பதிலாக
வெப்பத்தைப் பயன்படுத்தினார். அமினோ அமிலங்கள், புரோட்டீன் போன்ற
மாலிக்யூல்களாக சங்கிலிக் கோர்வையுடன் உருவாயின. அவைகளை வெந்நீரில்
கரைத்தபோது அவை சிறு செல் கோளங்களாக (உருண்டைகளாக) ஒட்டிக்கொண்டு நின்றன.
மில்லரின் முதல் சோதனைக்குப் பிறகு செய்த எல்லாச் சோதனைகளும் ஏற்பட்ட
மாற்றங்கள் உயிர்வாழ்வினை சுட்டிக் காட்டின, அப்போது உருவான வேதிப்
பொருட்கள் உயிருள்ள பொருட்களில் இருப்பன போன்று இருந்தன.
பூமியின்
உயிர்வாழ்வு தோன்றியது விந்தை அல்ல. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆரம்பிக்கும் போது தந்த வேதியியல் பொருட்களும் சக்தியும், உயிர் வாழ்வின்
திசையிலேயே சோதனையை எடுத்துச் செல்லும் கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும்
எந்தக் கிரகத்திலும் உயிர்வாழ்தல் இருக்கும் என்று நாம் சொல்லலாம். ஒருவேளை
வேறு உலகத்தில் உயிர்களைக் காண நேரிடலாம் !
நாம் தெரிந்துகொண்ட அல்லது செல்லகூடிய கோள்கள் எல்லாம் நம் பூமியிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உயிர் வாழ்வு
இருக்க வாய்ப்பே இல்லை. சந்திரனில் காற்றும், தண்ணீரும் இல்லை.
மெர்க்குரியும், வீனஸும் மிக அதிக உஷ்ணமான இடங்கள். மார்ஸிக்கு அப்பாலுள்ள
கிரகங்கள் மிகவும் குளிர்ந்தவை அவற்றின் வேதியியல் பூமியை விட மிகவும்
வேறுபட்டது. எல்லாவற்றிலும் மார்ஸ்(செவ்வாய்) உயிர்வாழ்வுக்கு ஏற்றது போல்
தோன்றும் அங்கே காற்று இலேசானது, மிகக் கொஞ்சம் தண்ணீரும், மிக அதிகக்
குளிரும் உள்ள கிரகம் ஒருவேளை எளிய உயிரினங்கள் அங்கு இருக்கலாம் அல்லது
உயிர் வாழ்விற்குத் தேவையான வேதியியல் பொருட்கள், அமினோ அமிலங்கள் அங்கு
இருக்கலாம்
1976 ல் ராக்கெட்டால் செலுத்தப்பட்ட இரண்டு விண்கலங்கள் மார்ஸை
அடைந்தன. அதன் பரப்பில் இறக்கி, மண்ணைச் சோதனை செய்தன. கார்பன் அணுக்கள்
உள்ள மாலிக்யூல்களின் அறிகுறிகள் இல்லை அத்தகைய மாலிக்யூல்கள் இல்லாமல்
நமது பூமியைப் போன்ற உயிர்வாழ்வு உண்டாக முடியாது.
மற்ற கோள்களைப் பற்றி நமக்கு சில விஷயம் தெரிய வேறு வழி உண்டு. வெளி
வானிலிருந்து நம் பூமி மேல் விழும் விண்கற்கள். அநேகமாக விண்கற்கள் உலோகம்
சம்பந்தப்பட்டோ, பாறையாகவோ உள்ளன. எப்போதாவது, அபூர்வமாக, கொஞ்சம்
தண்ணீரும் கார்பன் கூட்டுப் பொருளும் உள்ள விண்கற்கள் வரும்.
1969 ல் ஒரு
விண்கல் ஆஸ்திரேலியாவில் விழுந்தது. நிறைய பவுண்டுகள் எடையுள்ள பாறைச்
சிதறல்கள் எடுக்கப்பட்டன. அவைகளை பொன்னம் பெருமா உள்ளிட்ட விஞ்ஞானிகள்
ஆராய்ந்தார்கள். விண்கற்களில் இருந்த சோதனை இயற்கைப் பொருள் பதினெட்டு
விதமான அமினோ அமிலங்களை கொண்டிருந்தது, அவற்றில் ஆறு அமினோ அமிலங்கள்
உயிருள்ள பொருட்களின் புரோட்டீனில் வருவன. விண்கற்களில் உயிருள்ள பொருள்
ஏதாவது இருந்தது என்று இதற்குப் பொருளல்ல அப்படி ஒன்றும் இல்லை, இந்த
பொருட்கள் உயிர்வாழ்வின் துவக்கம் என்ற நிலைக்குப் போகும் வழியில் இருப்பன.
வேதியியல் மாற்றங்கள் உயிர்வாழ்வின் ஆரம்பம் நோக்கிப் போதல், சோதனைகளில்
மட்டுமல்ல. மனித ஊடுருவலோ அல்லது திசைகாட்டலோ இல்லாத விண்கற்களிலும் இது
நடக்கிறது இன்னுமொரு இடத்தில் கூட இத்தகைய விளைவுகள் உண்டு. பிரபஞ்சத்தில்
நட்சத்திரங்களுக்கு நடுவே காணப்பெறும் மிகப் பெரிய தூசி, வாயு மேகங்கள்
இடத்திலும் இந்த விளைவுகள் உண்டு.
இத்தகைய
தூசி, வாயு மேகங்கள் (சூரியபிரபஞ்சம் உருவாகக் காரணமானவை போன்றவை) அநேக
ட்ரில்லியன் மைல்கள் தாண்டி உள்ளன. என்றாலும் அவைகளை அவைகள் அனுப்புகிற
ரேடியோ அலைகள் மூலம் ஆராயலாம் ஒவ்வொரு பொருளும் ரேடியோ அலைகளை
அனுப்புகிறது. ஒவ்வொரு வேறுவிதமான
மாலிக்யூலும், வேறு வகையான ரேடியோ அலைகளை அனுப்பும். ஒவ்வொரு
மாலிக்யூலுக்கும் அதனுடைய ரேடியோ “கைரேகை” உண்டு.
1960 ல் பின்பகுதியில்
மனிதர்கள் ‘ரேடியோ டெலஸ்கோப்புக்களை’ உருவாக்கி இத்தகைய மெல்லிய ரேடியோ
அலைகளை சரியாக ஆராயும் உத்தியைக் கண்டார்கள்.
1968 ல் தண்ணீர், அம்மோனியா
ஆகியவற்றின் ‘ரேடியோ அலை-கைரேகையைக் கண்டு பிடித்தார்கள் 1969 ல் முதன்
முதலாய், கார்பன் உள்ள கூட்டுப் பொருள் – ஃபார்மால்டிஹைடு (Formaldehyde)
கண்டு பிடிக்கப்பட்டது.
1970 ல் நிறைய கூட்டுப் பொருட்கள், சிக்கல்
நிறைந்து காணப்பட்டன. அவை எல்லாம் கார்பன் கலந்த பொருட்கள். அவற்றுள் சில,
ஒன்றில் ஏழு அல்லது எட்டு அணுக்களுடன் இருந்தன.
ஃப்ரெட்ஹாயில் (1915 - )
என்ற ஆங்கில வானவியல் அறிஞர், அந்த மேகங்களில் சிறு அளவில்
புரோட்டீன்களும், நியூக்ளிக் அமிலங்களும் இருக்கும் என்று கருதினார்,
அவைகள் நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிறியவை, ஆனால்
உயிர்வாழ்தலைக் குறித்தன. ஒருவேளை அங்கு தான் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்குமா?.
அங்கிருந்து தான் பூமிக்கு வந்திருக்குமா? என்று
சொல்லமுடியாது .
ஆனால் விஞ்ஞானிகள் வாழ்வு எங்கு/எப்படி ஆரம்பித்தது என்று
கண்டுபிடிக்கும் முயற்சிகளின் முதல் கட்டத்தில் இருக்கிறார்கள். எவ்வளவு
காலங்கள் முன்னர் இது நடந்திருக்க வேண்டும், எவ்வளவு மெல்லிய தடயங்கள்
உள்ளன என்பதை நினைக்கும் போது அவர்கள் எப்படி இவ்வளவு தூரம்
முன்னேறியுள்ளனர் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
எதிர்க்காலத்தில் அவர்கள் இன்னும் நிறைய சாதிப்பார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)